Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

17 நவ., 2010

நவம்பர் 17, 2010

Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

 
நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள்  வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவதற்கு தயாரிகியுள்ளது என்பது எமக்கு இனிப்பான செய்தியாகும். ”ஊர் இரண்டானால் கூத்தாடிக்கி கொண்டாட்டமாம்” இவர்கள் என்ன தான் சண்டை பிடித்தாலும் ”கீரைக்கடைக்கு எதிர் கடை இருந்தால் எங்களுக்கு  சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்பதில் ஐயமில்லை.
அவர்கள் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவது தொடர்பான அறித்தலை நிறுவர் மார்க் ஸூக்கர்பெர்க தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் மூன்று தினங்கள் நடைபெறும் இணையதள மாநாட்டில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.  

ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் மெயில் சர்வீஸ், எஸ்.எம்.எஸ், சாட் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது.

எங்களுக்கு என்ன சிறந்த சேவை எங்களுக்கு கிடைத்தால் பேஸ்புக் நிறுவனம் என்ன கூக்குள் நிறுவனம் என்ன எல்லாம் ஒன்று தான்


7 நவ., 2010

நவம்பர் 07, 2010

எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்

இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என்பது இதில் அறிந்திருக்க வேண்டிய விடயமுமாகும். 



சிலர் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள், சிலர் அறிவுக்குப் பயன்படுத்துகிறார்கள், சிலர் வருமானத்தை பெருக்கிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள் அத்துடன் வித்தியாசமான மென்பொருள்களையும் இவர்கள் நாளாந்தம் பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றிக்கும் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  மேலும் பொதுவான விடயமாக நான் தரப்போவது உலகில் இன்று அதிகமாக எந்த விதமான மென்பொருள்கள், சமூக இணைத்தளங்கள் மற்றும் ஏனைய தளங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது என ஆராய்வோம்.

 இவை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.
இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்
உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்
அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

26 அக்., 2010

அக்டோபர் 26, 2010

2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளி

100மில்லியனஹைட்ரஜனகுண்டுகளினசக்தி கொண்மிகப்பெரிசூரியப்புயலஒன்று 2012ஆமஆண்டஏற்படுமஎன்றுமஇதனாலபூமியிலபலத்சேதங்களஏற்படுமஎன்றுமவிஞ்ஞானிகளதெரிவித்துள்ளனர்.

நாடுகளினமின்சாவினியோஅமைப்புகளுமதகவலதொடர்பஅமைப்புகளுமபலத்சேதமடையுமஎன்றவிஞ்ஞானிகளகூறியுள்ளனர்.

விமானபபோக்குவரத்து, மின்னணுசசாதஅமைப்புகள், கப்பலபோக்குவரத்திற்கஉதவுமஉபகரணங்களமுக்கியமாசெயற்கைககோள்களவேலசெய்யாது.

நாசாவினசூரியப்பௌதீகபபிரிவவிஞ்ஞானி டாக்டரஃபிஷரஇதபற்றிககூறுகையில் 100 ஆண்டுகளிலஅசாதாரசக்தி கொண்இந்சூரியப்புயலமுதனமுதலாகததாக்கவுள்ளது. இதனாலபெரிஅளவுக்கமின்வினியோகததடைகளும், தகவல்தொடர்பசிக்னல்களஇழக்கப்படும். என்றஎச்சரித்துள்ளார்.

சூரியப்புயலதாக்குகையிலசூரியனினவெப்அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையுமகடந்தவிடும்.

இந்சூப்பரசூரிசூறாவளி இடி இடிப்பதபோன்றநிகழும். பூமியினகாந்தப்புலங்களநம்பி இயங்குமநமததகவல்தொழிலநுட்உலகமபெரிதுமபாதிக்கப்படுமஅபாயமஉள்ளது.

இந்வகஅதிசக்தி சூரியப்புயல் 2012 ஆமஆண்டிலஅல்லதநிச்சயமாக 2013ஆமஆண்டிலஏற்படுமஎன்பதஉறுதி ஆனாலவிளைவுகளபற்றி இன்னமுமஆய்வுகளநடைபெற்றவருகின்றன.

இந்தசசூரியப்புயலாலஏற்படுமசூரிஎரிதழல்களபூமியினகாந்தபபுலத்தபாதிக்கும். ஆனாலஇதமிகமிகவேகமாநடக்கும், ஒரஇடி இடிப்பதபோன்நேரத்திலஅனைத்துமநடந்தமுடிந்தவிடுமஎன்கிறாரநாசவிஞ்ஞானி பிஷர்.

இதனாலஏற்படுமமின்வினியோஅமைப்புகளசேஉள்ளிட்பிசேதங்களசீரசெய்மிகப்பெரிஅளவிலபணமசெலவழியுமஎன்பதோடநீண்காலமபிடிக்குமஎன்பதுமஉண்மை.

சூரியசுழற்சியில் 24ஆமகட்டத்தஅதஎட்டுவதாலஇந்நிகழ்வதவிர்க்முடியாததஎன்கின்றனரவிஞ்ஞானிகள்.

இந்தககண்டுபிடிப்புகளஆஸ்ட்ரேலியனசயன்ஸஎன்பத்திரிக்கையிலவெளியாகியுள்ளது.

Resource 
webdunia.com

24 அக்., 2010

அக்டோபர் 24, 2010

Free Fax service facilities to 41 Country

நான் இணையத்தின் மூலம் பல்வேறுபட்ட இலவச சேவைகள் தொடர்பாக எனக்கு கிடைக்கும் பல்வேறுபட்ட விடயங்களை நாளாந்தம் உங்களுக்கு தத்து கொண்டிருக்கிறேன். அது போல் இன்றும் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் இலவச சேவை தொடர்பாக உங்களுக்கு இன்னுமொரு விடயத்தினை வழங்கப் போகின்றேன். 



நாங்கள் முக்கியமான ஆவணங்களை ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு அனுப்புவதற்கு தொலைநகலைப் பயன்படுத்துகிறோம் (Fax) இந்த தொலை நகலை நாங்கள் இன்று பல நாடுகளுக்கு இணையத்தின் ஊடாக இலவசமாக அனுப்ப முடியும் என்ற சந்தோஷகரமான செய்தியை உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். 

அத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு பெக்ஸ் மட்டுமே அனுப்ப முடியும். அத்துடன் 41 நாடுகளுக்கு மாத்திரமே அனுப்ப முடியும்
178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம் பெக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.

இன்று பெக்ஸ் அனுப்பும் பயன்பாடு குறைவாக இருந்தாலும் ஆனால் சில முக்கியமான ஆவணரீதியான தேவைகளுக்காக அது பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது எனலாம்.

இங்கு இதற்குச் செல்ல.........

21 அக்., 2010

அக்டோபர் 21, 2010

Free call from Facebook

எங்களில் பலர் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறோம். இன்று பல நாடுகளில் அதனை தடையும் செய்திருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.

இலகுவான முறையில் நண்பர்களை கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் பேஸ் புக்கில் கணக்கு வைத்திருந்து அதில் உள்ள நண்பர்களை உங்களின் நண்பர்களாக இணைத்துக் கொள்ள முடியும்.

இதில் ஒருவரின் நண்பர்களை மற்றவர்கள் கண்டு அவர்களுக்கு  செய்தி அனுப்பி அவர்களை எங்களுடைய நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

பேஸ்புக் பல்வேறு வகையான சமூக தளங்களில் அதிகளவு அங்கத்தவர்களை கொண்டுள்ள ஒரு தளமாக இது காணப்படுகின்றது.

இந்த வரிசையில் அதனுடன் இதனைந்தாக இன்று இலவசமாக பேஸ்புக் ஊடாக குரல்வழி அரட்டை வசதி வழங்கியுள்ளார்கள் என்பது எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தியாகும். Sonephone  என்ற பெயரில் தான் இது துவங்கப்பட்டுள்ளது இதனையும் நாங்கள் பயன்படுத்தித்தான் பார்ப்போமே!

அப்படி என்னதான் இருக்கிறது என்று

20 அக்., 2010

அக்டோபர் 20, 2010

How to get Free Rapid share Premium download

நாங்கள் பல்வேறு தேவைகளுக்காக இலவசமாக தரையிறக்கிக் கொள்கிறோம். அவைகள் யாவன....  மென்பொருட்கள், பாடல்கள், படங்கள், கட்டுரைகள் என பல்வேறுபட்ட விடயங்களை நாளாந்தம் தரையிறக்கிக் கொள்கிறோம். அவ்வாறு தரையிறக்கிக் கொள்ளும் போது பல்வேறுபட்ட அசௌகரியங்களை நாங்கள் எதிர்நோக்கிறோம். 
அந்த கோவைகளை வைத்திருப்பவர்கள் எங்களை அவர்கள்  அவர்களின் சந்தாக்காரர் ஆகும்படியும், அப்போது நாங்கள் உங்களுக்கு சிரமம் தரமால் மிகவேகமாகவும் தரையிறக்கவும் மற்றும் வேகமாகவும் உள்ளே செல்லவும் வழி விடுவோம் எனவும் எங்களை கடித்துக் கொண்டு இருப்பதை எத்தனை நாளைக்குத் தான் நாங்கள் ஜீரணத்துக் கொண்டிருப்பது. 

நேற்று கனடாவில் இருக்கும் ஒரு நண்பர் என்னிடம் அழைப்புத் தொடுத்து இலகுவாக இந்த வகையான வேலைகளைச் செய்து கொள்ள ஏதாவது மாற்று வழி உள்ளதா என கேட்டுக் கொண்டார். அவருக்கும் மற்றும் ஏனைய எனது வாசகர்களுக்கும் இன்று நான் தரப்போவது  Free Rapid-share Premium  இதன் ஊடாக நீங்கள்  கிட்டத்தட்ட 15 தளங்களின் ஊடாக இலவசமாக சந்தாக்காரர் போல் நுழைந்து தரையிறக்க முடியும் 

முதலில் இந்த தளத்திற்குச் செல்லவும்..........


மேலே காட்டியது போல உங்களுக்கு காட்சி தரும், அதன் பின்னர் நீங்கள் தரையிறக்கும் லிங்கை Your URL/Link Here என்ற இடத்தில் கொடுக்கவும்.

மேலும் 2 வினாடிகள் பொருத்திருங்கள் பின்னர் Download என்பதை கிளிக் பண்ணவும் இனி உங்களுடைய தரையிறக்கம் வேகமாகவும், விரைவாகவும் செயற்படும்.

மேலும்..............
நீங்களும் அங்கத்தவராகி உங்கள் கணக்கில் $ பெற்றுக் கொள்ளவும்  அங்கத்தவராக பதிவு செய்து நீங்களும் உழைப்பதற்கு முயற்சிக்கவும்.................
http://www.cashcrate.com/2356235
http://www.neobux.com/?rh=74686168616E616C65656D
 http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=thaha
 


18 அக்., 2010

அக்டோபர் 18, 2010

Free AVG Anti Virus for One year


எங்களுடைய வாழ்வில் பலவகையான இம்சைகளினால் பாதிக்கப்படுகிறோம். அது நல்லதாகவும் இருக்கும் அல்லது கெட்டது நடந்து பின்னர் நல்லது நடக்கும் இவ்வாறு எந்தவகையான செயலாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் இருந்து வெற்றி கொள்வதுதான் சிறந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம். 

நாங்களும் கணினி பயன்படுத்தப்படும் போது பல்வேறு விதமான வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்படுகிறோம் மற்றும் அதனால் பல தடவைகள் எங்களுக்கே எங்களுடைய கணினியை உடைக்கக்கூட எண்ணங்கள் தோன்றி இருக்கலாம். இந்த எண்ணங்களுக்கு ஒரு வருடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நான் தரப்போகும் இந்த இலவச Anti Virus Programe எந்த வகையில் பயனளிக்கப் போகுகின்றது என பயன்படுத்தித்தான் பார்ப்போமே.

ஆனால் இதனை நீங்கள் இணையத்தின் ஊடாக மாத்திரம் தரயிறக்கி செயற்படுத்த முடியும் என்பதும் ஒரு விடயமாகும்.
இதனை தரயிறக்கிக் கொள்ள இங்கே

16 அக்., 2010

அக்டோபர் 16, 2010

Easy to write the Latter and any sentance

நாங்கள் நாளாந்தம் பல்வேறு தேவைகளுக்காக கடிதங்கள், வசனங்கள் வேறு தேவைகளுக்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தின்றோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அது எங்களை அறியாமலே வசனப்பிழைகள், எழுத்துப்பிழைகள், வாக்கியப்பிழைகள் என்பன தினம் தினம் வந்து கொண்டே இருக்கும்.

உங்களின் பிரச்சினைக்கு தீர்வாக இன்று கூக்குள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது எல்லோருக்கும் உதவியாக இருக்கும் ஒரு சொல்லுக்குப் பின்னால் எந்த சொல்லு  வர வேண்டும், ஒரு வசனத்திற்குப் பின்னல் எந்த வசனம் வர வேண்டும் என்ற பல்வேறுபட்ட விடயங்களை இலகுவாகு தீர்த்து நாங்கள் முழுமையான ஆங்கிலம் தெரிந்தவர் போல் எங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு உதவி புரியும் இந்த scribe.googlelabs.com

scribe ஒன்றினை Google அறிமுகப்படுத்தியுள்ளது . அதனை செயற்படுத்திப் பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்


15 அக்., 2010

அக்டோபர் 15, 2010

அதிசயம்! ஆச்சரியம்!! சிலியில் ஆனால் உண்மை

உலகில் மனிதனுடைய பல்வேறு முயற்சிகளுக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன. அவன் நாளாந்தம் நம்ப முடியாத பல்வேறுபட்ட விடயங்களை நிகழ்த்தி வருகின்றான் அவனது நடவடிக்கைகள் எங்களால் நம்வே முடியாமல் உள்ளது. இந்த வகையிலும் சிலி நாட்டில் நடந்த சம்பவம் யாரும் நம்பமுடியாத மனிதனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். 
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாடு தெரியாமல் இல்லை ஏனெனில் பல தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள் அத்துடன் இந்த நாட்டில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அந்த நாட்டின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சின்ன நாட்டில் அடிக்கடி பல பல விநோனதமான சம்பவங்கள் நடப்பது இயல்பு தான்.

நிலக்கறி அகழ்வு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வரமுடியாமல் அங்கே தவித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை இலாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார்கள் என்பது கேட்கே எங்களால் நம்ப முடியாமல் இருக்கிறது.

69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை  துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்துந்துள்ளனர்

010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.

2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பு, மனிதாபிமானம் இலங்கை போன்ற நாடுகளில் பற்றாக்குறைவாக இருப்பது தான் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.









மேலும், 2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

இவ்வாறு அதிசயக்கும் வகையில் இந்த தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு உயர் காக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கேட்கும் போது நமக்கு நிச்சயமாக சந்தோஷமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

13 அக்., 2010

அக்டோபர் 13, 2010

சுயமாக ஓடும் கார் கண்டுபிடிப்பு

சாரதியில்லாமல் சுயமாக ஓடக்கூடிய காரினை அமெரிக்காவின் கலிபோனியா மாணிலத்தில் கூக்குள் நிறுவனத்தின் சொப்வெயார் பொறியிலாளரான செமஸ்டின் கண்டுபிடித்துள்ளனர் அத்துடன் அதனை ஓடவைத்தும் பரீசோதனை செய்தும் பார்த்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
காரின் மேல்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள வீடியோக்கமரா, ராடர் கருவி, சுற்றவரச் செல்லுகின்ற வாகனங்களின் துாரத்தினை அளவிடக்கூடிய லேசர் கருவிகள் என்பன இவற்றில் பொருத்தப்பட்டிருந்தன. இருந்தும் இது ஒரு பரிசார்த்த நடவடிக்கையாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை பலவகையான போக்குவரத்து நெரிசலிலும் (அமெரிக்காவின் சன்பரான்ஸின்) ஓடக்கூடிய வகையில் இந்த கார் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனையின் போது எந்தவிதமான விபத்துக்களும் இல்லாமேலே ஓடியிருக்கின்றன. ஆனால் ஓரு தடவை மாத்திரமே இந்தக் காருக்குப்பின்னால் வந்த கார் இதனுடன் மோதியிருக்கிறது. 

இத்திட்டத்தின் பிரதான நோக்கம் போக்குவரத்து பாதுகாப்பு முக்கியமே தவிரே வேறு எந்த நோக்கமும் எங்களிடமில்லை என இந்த பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.  இந்த கார் ஓடுவதற்கான போக்குவரத்தி வரைபடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டன, மற்றும் இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு வருடத்தில் 12லட்சம் பேர் வாகன விபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது வெற்றியடைந்தால் இந்த விபத்தின் அளவு குறைவடையும் எனவும் ஆர்வீடம் கூறுகின்றனர்.

மேலும் இது வெற்றியளித்தால் பல வகையான நன்மைகளை நாங்களும் பெற்றுக்கொள்ள முடியும். 

நன்றி BBC



10 அக்., 2010

அக்டோபர் 10, 2010

இலங்கையில் உலக கின்னஸ் தேனீர் சாதனை!

உலகில் பல்வேறுபட்ட நாடுகளில் பல சாதனைகளை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல சாதனைகளை நிகழ்த்தி வந்த காலம் மாறி இப்போது அதுவும் கின்னஸ் சாதனை புரிய முன்வந்துள்ளது என்பதையிட்டு நானும் ஒரு இலங்கையன் என்ற வகையில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறேன்.

உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னனில் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

 எனவே தான் ஒரு இராட்ச தேனீர் கோப்பையை உருவாக்கி அதில் 4000 லீற்றர் தேனீரை நிரப்பி இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு இலங்கையர் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். 

இது இலங்கையில்  தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்து  இந்த தேனீர் சாதனையில் ...............

தண்ணீர் - 4000 லீற்றர்
தேயிலை - 65 கிலோகிறாம் 
சீனி  125 கிலோகிறாம் 
வீவா பவுடர் - 850 கிலோகிறாம் 

 மேற்காட்டிய பொருட்களின் இணைப்புடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. 

  இந்த சாதனையை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி  அமெரிக்க, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையம் நிகழ்த்தியிருந்தது இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.


   இதனை செய்வதற்காக விசேடமாக 10 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்ட கோப்பை உருவாக்கப்பட்டிருந்தது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களினால் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. தேநீரைச் சூடாக வைத்திருக்க, மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

பலர் இங்கு வந்து இந்த தேனீரை குடித்து அவர்களும் இந்த சாதைனை பெறுமையை தட்டிச் சென்றனர்.
 
   கிளாக்சோஸ் மித் கிளையின் என்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  இந்த நிறுவனத்தின் வீவா பவுடரை விளம்பரம் செய்கின்ற  JWTea நிறுவனத்தினர் இந்த இராட்சத கோப்பை தேனீர் சாதனையை நிகழ்த்திருக்கின்றனர். 

  இது உலோகத்தினால் உருவாக்கப்பட்ட கோப்பையாகும் 4500லீற்றர் கொள்ளவு கொண்ட இந்த இராட்சத கோப்பையில் 4000 லீற்றரளவில் தேனீர் உற்றி இந்த கின்னஸ் சாதனை புரியப்பட்டது. 

   கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது. 

மேலும் இங்கே கிளிக் பண்ணுங்க..........
நன்றி



8 அக்., 2010

அக்டோபர் 08, 2010

தமிழ் மொழி கற்போம் பாடம் - 01

இன்றைய காலகட்டத்தில் நாங்கள் பல்வேறுபட்ட மொழிகளின் தேர்ச்சி பெற்றுருந்தாலும் நாங்கள் எந்த மொழியை தாய் மொழியாக கொண்டிருக்கிறோம் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது சாலச்சிறந்ததாகும். அப்போது தான் அவர் அரச மற்றும் ஏனைய துறைகளில் தன்னை நிலைநிறுத்த முடியும் என்பதும் நாங்கள் கண்ட உண்மையும்.

இலங்கை போன்ற நாடுகளில் தாய்மொழி மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களுடைய எதிர் காலத்தை பிரகாசமடைச் செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இலங்கையில் நடாத்தப்படும் உயர்பதவிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான பரீட்சையில் மொழியறிவு தொடர்பான பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாகச் சொல்லப் போனால் இலங்கையில் ஐந்தாம் வருட மாணவர்களுக்கான புலமைப்பரீசில் பரீட்சையில் அவர்கள் சித்தியடைய வேண்டுமானால் நிச்சயமாக அவர்கள் தாய்மொழியில் ஓரளவேனும் புலமை பெற்றிருப்பது முக்கியமானது.  இவ்வாறே இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வியாளர் சேவை,  இலங்கை கல்வி நிர்வாக சேவை போன்ற உயர் பதவிகளுக்கான பரீட்சையில் இந்த மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஏன்? ஆகக்குறைந்தது என்னைப் போன்றவர்கள் இவ்வாறான தளங்களில் எழுதுவதற்கும் இந்த மொழி உந்து சக்தியளிக்கின்றது. 

எனவே 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள இலக்கண நெளிவு, சுளிவுகளை நாங்கள் பார்க்கப் போகிறோம்.

உண்மையைச் சொல்லப் போனால் அதிகமாக தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு இதில் பல சந்தேகங்கள் இருப்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது மற்றொரு உண்மையாகும்.

தமிழுக்கு அமுதென்று பெயர் அது என் உயிருக்கு மேல் என்னும் பொன்ழொழி வாத்தைக்கிணங்க நான் இன்று மாணவர்கள் தொடக்கம் மற்றும் தமிழ் மொழியை தாய் மொழியாக கற்கும், கற்றலில் வழுக்கள் உள்ளவர்களுக்கும் பயன்படும் விதத்தில் இங்கு நான் தொடராகத் தரப்போம் தமிழ் மொழி கற்போம் என்னும் பாடத்தின் முதல் பாகம் இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது......................

இங்கு வினா விடை அமைப்பில் கேள்டவிகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் மூலம் உங்களுக்கு நான் இதனை வழங்க இருக்கிறேன்.


01. தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் எத்தனை?
- 247

02. நெடுங்கணக்கு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
உயிர் எழுத்து,              - 12
மெய் எழுத்து,               - 18
உயிர் மெய்,                   - 216
ஆய்தம்                            -  1
மொத்தம்                    247 எழுத்துக்களாகும்.

என நான்கு வகைப்படும்

அ, ஆ.....ஔ .      க், ங், ஞ்............       த்+ அ=  தா

03.  தமிழுக்கு உயிர் போல் அமைந்திருக்கும் எழுத்துக்கள் எவை?
 -  உயிர் எழுத்துக்கள் 

04. உயிர் எழுத்துக்கள் எத்தனை  அவை எவை?
     அ, ஆ, இ, ஈ, உ, ..........................முதலான பன்னிரண்டும்.

05. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை எவை?
- குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகைப்படும்

06. உயிர் எழுத்துக்கள் குறில் எவை?
  • அ, இ, உ, எ, ஒ என்னும்  ஐந்தும்.

07. உயிர் எழுத்துக்கள் நெடில் எவை?
ஆ, ஈ,ஊ, ஏ.ஓ, ஐ, ஔ என்னும் ஏழும்

08. எவ்வடிப்படையில் உயிர் எழுத்துக்களை குறில், நெடில் எனப்பிரிக்கிறோம்.
மாத்திரை அடிப்படையில்
09. உயிர் குறிலின் மாத்திரை எவ்வளவு?
  • ஒன்று 
10. உயிர் நெடிலின் மாத்திரை எவ்வளவு?
  • இரண்டு
மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம் ....................
நன்றி
வணக்கம்


6 அக்., 2010

அக்டோபர் 06, 2010

World Teacher's Day - 2010

   இன்று இலங்கையில்  உள்ள பல லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் குழாம் தங்களுடைய ஆசிரியர் தினத்தை அவர்களின் பாடசாலைகளில் மிக விமர்சியாகக் கொண்டாடுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

  ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான UNESCO னால் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் - 5ஆந் திகதியன்று உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் அது நாட்டுக்கு நாடு வேறுபட்டு மற்றும் மாறுபட்டுக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.


மேலும், இதற்கான அடிப்படையாக கல்வி தத்துவவியலாளரான இந்தியாவைச் சேர்ந்த ராதாகிறிஷ்னன் அவர்களின் கொள்கை தழுவியதாக அமைந்து உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்தும் இலங்கை போன்ற நாடுகளில் இது 1994ஆம் ஆண்டு  ஓக்டோபர் - 6 பிரகடணப்படுத்தப்பட்டு மிக சிறப்பாக கொண்டாப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். அன்றிலிருந்து தான் இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் தொழில் தொடர்பான நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக அன்று ஆட்சிக்கு வந்த இலங்கை முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையாரினால் அவர்களின் பதவிக்கான பிரமாணங்கள் அமுல்படுத்தப்பட்டது என்பது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். 

தமிழில் சொல்லப்படுகின்றது. ”மாத, பிதா, குரு தெய்வம்” இங்கு குறிப்பிடப்படும் இந்த தமிழ் பழமொழி மனிதன் உலகில் தோன்றிய காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு மரபாகும். தன்னுடைய தாய், தகப்பனுக்கு அடுத்தாக இந்த குருவை நாங்கள் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று இது குறிப்பிடுகின்றது. 
மற்றும் ”குருவில்லாத வித்தை குழ் வித்தை” என்பார்கள் அதாவது நாங்கள் யாராவது ஆசானின் துணையில்லாமல் கற்றும் எந்த வகையான கல்வியும் வெறும் பெறுமதியற்றது என்பது இதன் பொருளாகும். 

எங்களுடைய நாடுகள் அன்னியர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் ஆசிரியர்களை மாணவர்கள் கடவுளாக நினைத்து அவர்களை வணங்கி அதன் பின்னர் அந்த மாணவர்களுக்கு குருக்கல் கல்வியை போதித்தார்கள் என்பது வரலாறுகள் கூறுகின்றன. 

அப்போது காணப்பட்ட ஆசிரியர் மையக்கல்வியின் ஊடாக அந்த ஆசிரியர்கள் மேலாக மதிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மையாகும். 

மேலும், இன்றைய ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை பல ஆசிரியர்களின் மன ஆதங்கத்தை நாங்கள் காணும் போது அவதானிக்க முடிகின்றது. அதாவது இன்றைய கல்வி முறை பிள்ளை மையக்கல்வியாக காணப்படுவதால் மாணவர்கள் ஆசிரியரை மதிப்பதும். கௌரவப்படுத்துவம் குறைவடைந்து வந்து கொண்டிருக்கின்றது எனலாம். இன்று உலகில் பல சிறுவர்கள் தொடர்பாக பல சட்டங்கள் இறுக்கமாக காணப்படுவதால் அவர்கனை திருத்தி சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது முயற்கொம்பாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சிறுவர் சாஸனத்தில் கையொப்பத்தை இட்டு அவர்களுக்கான சட்டவாக்கத்தின் இறுக்கமான கடிவாளத்தின் விளைவாக ஆசிரியர் மாணவர் உறவில் காணப்படும் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது என்பது பல இன்றை ஆசிரியர்களின் மன உளைச்சலாகும்.
பல அறிவு மூர்ப்புக்களை அடைந்து சென்றாலும் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்து ஒரு நாட்டுக்கு சிறந்த மற்றும் பெறுமதி மிக்க சொத்தாக ஒப்படைக்கும் பொறுப்பு ஆசிரியரிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிறந்த வொரு சமூகத்தின் தோற்றப்பட்க்கு ஆசிரியரின் பங்கு அளப்பெரியதாகும் என்பதில் யாரும் சந்தேகம் கிடையாது. 

எனவே இன்றைய இந்த ஆசிரியர் தினத்தில் நாமும் எமது மாணவர்களும் சிறந்த அறிவைப் பெற்று வளமான ஒரு வாழ்வியல் கூறுகளை படைப்போமாக என கேட்டு விடைபெறுகிறேன்.


ஆக்கம் 
அ.ம.தாஹா நழீம் - 
இலங்கை -2010.10.06



அக்டோபர் 06, 2010

How to change our voice as Male or female ect...

மன்தர்களில் பல ரகமானவர்கள் உள்ளார்கள் அவர்களை புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் சிரமமான காரியாமாகத்தான் எங்களுக்கு இருக்கும்.

நாங்கள் ஒரு நண்பனுடனே பல வருடங்கள் பழகி அவர்களின் பல்வேறுபட்ட கோணங்களை அறிந்து கொண்டாலும் பல தடவைகள் அவர்களின் கேளிக்கைகளால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு பின்னர் அதனை நினைத்து சந்தோஷப்படும் நிகழ்வுகளும் எம் வாழ்வில் நடந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பள்ளித் தோழர்கள், பல்கலைக்கழத் தோழர்கள், குடிக்க பழகிய தோழர்கள், கும்மாளம் அடிக்கும் தோழர்கள் எத்தனை வகையான தோழர்கள் இது மட்டுமா இவ்வாறான தோழர்களுடன் பழகும் போது ..........................

அவர்களின் குரல் எங்களை கவர்ந்தால் அவர்கள் மீது ஈர்ப்பு வருவதும் இயல்பு. என்னுடைய நண்பர் ஒருவரின் குரல் அமுதத்தில் மயங்கிய பெண் ஒன்று அவரின் எதிர்கால வாழ்க்கைத் துணிவியாக மலர்ந்த சம்பவங்களும் உள்ளன.

இன்று இந்த பல்வேறுபட்ட குரல் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு நாங்களும் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாங்களும் பல தடவை அனுபவித்துப் பார்க்கலாமே!...............

ஆகவே நாங்கள் இணையத்தில் அரட்டை அடிக்கும் போது எங்களுடைய குரலை கம்பிரமாகவும், நளினமாகவும் மாற்றி அமைக்கும் மென்பொருள் தொடர்பாக உங்களுக்கு ஒரு மென்பொருளை தரப்போகின்றேன்.

எனவே, இந்த ”மிமிக்கிரி” நாடகத்தை உங்கள் வீட்டில் அரங்கேற்றிய பின்னர், உங்கள் நண்பர்களிடமோ, காதலியிடமோ, உறவினர்களிடமே மேடையேற்றிப் பாருங்கள் எத்தனை நாட்கள் இந்த நாடகங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றது என்று .......................

நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு ஆண், பெண் இருவரினதும் குரலிலும் பாடி உங்களையே ஆச்சரிப்படுத்திப் பாருங்கள்............................

உங்கள் கணினியில் நேரத்தைச் சொல்லுவதற்கக்கூட நீங்கள் இதில் பேசு பேச வைக்க முடியும் என்பதும் மற்றொரு சிறப்பாகும்...............................

மற்றும் Alaram Clock என்பதில்போய் வுங்கள் கணினியில் அலாரத்திற்கு சொந்தகுரளிலேயே பேசி அலாரமாக மாற்ற முடியும் மற்றும் கணினியில் அலார்ட் சௌண்டும் அமைக்கமுடியும்.


உங்கள் கணனியில் நிறுவதற்கு திரையில் இருக்கும் அதனை icon கிளிக் பண்ணி பின்னர் உங்களுக்கு கிடைக்கும் மெனுவும் ஏதாவது பேசி பதிவு செய்து கொள்ளவும்.

.

அடுத்து next கொடுக்கவும்..................


இதில் record என்று இருப்பதில் சிறிது நேரம்  பேசியபின் next  செல்லவும் . இப்போது உங்கள் குரலை தயார் செய்யும்.
finish வழங்கி விடயத்தை முடிக்கவும்
அடுத்து அதன் Windows திறந்து கீழ் உள்ளது போல் காட்சி தரும்..........

சாட்(chat)பண்ணும்போது இதையும் திறந்துகொள்ளவும்.
இதில் மேலே listen என்று இருப்பதில் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பேசுவதை நீங்ககே கேட்கலாம்.தேவை இல்லை என்றால் அதிலேயே பருபடியும் கிளிக் செய்யவும் எதிர் தரப்புக்கு மட்டும் கேட்கும்.
மேலே காணப்படும் Windowsல் இருக்கும் குரல் வகையை தெரிவு செய்து அதில் நீங்கள் வித்தியாசமான பல்வேறு வடிவங்களில் பேச முடியும் என்பது திண்னம்.



முதலில் நீங்கள இங்கே கிளிக் பண்ணவும் .........................
Next.......... Click here

3 அக்., 2010

அக்டோபர் 03, 2010

How to recover permanently deleted files

என்னோட நண்பர் ஒருவர் எனக்கு அலைபேசி ஊடாக தொடர்பினை மேற்கொண்டு ” ஒரு உதவி செய்ய முடியுமா என்று கோட்டார். அதற்கு நான் சொன்னேன் என்னால் முடிந்தால் நிச்சயமாக செய்ய முடியும் அடிச்சி சொல்லிட்டேன்.” அப்புறம் கேட்டேன் என்ன உதவி என்று சொன்னால் தானே நான் உங்களுக்கு செய்ய முடியும் என்று சொன்னேன்.  எந்திரியாக இலங்கை அரசாங்க நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பொறுப்பாய்ந்த பதவியில் இருப்பவர்.  தன்னுடைய வீட்டி கணினியில் இருந்த பல்வேறு முக்கியமான பல கோவைகளை என்னுடைய உறவுக்கார பையன் அழித்து விட்டான்.  அதில் உள்ள அநேனமான கோவைகள் மற்றும் என்னுடைய அலுவலகம் தொடர்பாக பல விடயங்களை நான் இதில் தான் சேமித்து வைத்திருந்தேன் இதனை மீட்பதற்கு ஏதாவது மென்பொருள் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். 
pandora-recovery

நான் சொன்னேன் நீங்க கவலையே படவேண்டாம் அதற்கு பல மென்பொருள்கள் இருக்குது அனால் இந்த மென்பொருள் பல வகையில் உங்களுக்கு பல வகையைில் உங்களுக்கு பயன்படும் வகையில் நான் உங்களுக்கு வழங்குகிறேன் என்று அந்த மென்பொருளை வழங்கினேன் அதனைப் பெற்று அவர் தன்னுடைய இழந்த பல கோவைகளை மீட்டுக் கொண்டார் அன்றிலிருந்து தான் அவர் ”நிம்மதியாகவும் துாங்கியதாகவும் என்னிடம் சொன்னார்.” 

இவ்வாறு பலரின் துாக்கத்தையும், அவர்களின் பெறுமதி மிக்க தரவுகள், தகவல்கள் போன்றவற்றை மீட்டு எடுக்க இந்த பென்பொருள் உங்களுக்கு பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை. 

ஏன் உங்களால் கூட தவறான முறையில் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு வைரஸ் மூலமாகவும் அழிக்கப்பட்டிருக்கலாம். இப்படியான பல விடயங்களுடன் தொடர்பான இந்த மென்பொருள் உங்களுக்கு பயன்படும் என்று நினைத்து உங்களுக்கு வழங்குகிறேன்.

முதலில் இங்கே கிளிக் பண்ணுங்க.......

1 அக்., 2010

அக்டோபர் 01, 2010

Universal Child Day - 2010

 உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம் திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும்  வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு  இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.

வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



29 செப்., 2010

செப்டம்பர் 29, 2010

Multi Yahoo Messanger at one time

நாங்க என்ன தான் சொன்னாலும் உலகத்தில் இன்று  Yahoo Messenger பயன்பாட்டாளரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றது. சும்மா சொல்லக்கூடாது இந்த மெஷன்ஷர் எல்லாத்தையும் விட விசேடமானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இலகுவான முறையில் கையாள முடியும் வீடியோ மற்றும் நேரடி சட் போன்றவற்றிக்கு இலகுவானதாகக் காணப்படுகின்றது. அத்துடன் Call Conference போன்றவற்றிக்கு நாங்கள் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை எனலாம்.

அது மாத்திரமல்ல அவர்களின் அரட்டைப்பிரிவானது விசாலமானது என்பதும் ஒரு மைக்கல்லாகும்.

இவ்வாறு நாங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் இந்த   Yahoo Messenger ரில் தனி ஒரு கணக்கினை மட்டும் வைத்து அரட்டை அடிப்பது பலருக்கு தர்ம சங்கடத்தை தரலாம்.

அதிகமான பயனாலாளர்கள் நேரத்திற்கு ஏற்றாப் போல் மற்றும் ஆட்களுக்கு ஏற்றாப் போல் ஒரு தடவையில் பல்வேறு கணக்கினை வைத்துக் கொண்டு அதனை Yahoo Messenger அரட்டை அடிப்பது அவர்களுக்கு ஒரு கஷ்டமான விடயமாக இருக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட Yahoo Messenger திறந்து வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவர்களுடைய பல காரணங்களாக இருக்கலாம்.
இனி நாங்கள் எவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பாட் கணக்கினை திறந்து அல்லது Yahoo Messenger திறந்து அரட்டை அடிப்பது எப்படி என்று இப்போது பார்க்கப் போகிறோம்.
அதற்கு முன்னாடி நீங்கள்  இங்கே கிளிக் பண்ணவும் ..................................
அப்புறம் இந்த விடயத்திற்கு வரவும் .........................................

Go to run menu => Type regidit => click HKEY_CURRENT_USER => software => yahoo=> Page => Test => Create New and right click the mouse  after change new to as Plural

பின்னர் உங்கள் கணினியை திரும்ப Restart பண்ணி உங்களுடைய Yahoo Messenger click பண்ணி பார்க்கவும். இப்போ நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் ஒரே தடவையில் பயன்படுத்தலாம்.





25 செப்., 2010

செப்டம்பர் 25, 2010

தடுப்போம், தடுப்போம் பிள்ளைகளிடமிருந்து சில விடயஙகளை!

கட்டாரில் இருக்கும் இலங்கை நண்பர் ஒருவர் ஒன்லைனில் தொடர்பு கொண்டு எனது வீட்டில் கணனியை நான் ரீம் வீவர் கொண்டு அவதானித்தேன் அதில் பல்வேறுபட்ட சிறுவர்கள், மற்றும் tவயதுக்கு வராத பார்க்கக் கூடாத பல தளங்களை எனது சொந்தத்தைச் சேர்ந்து உறவுக்கார பையன் ஒருவன் பார்த்து இருக்கிறான். அவரின் தொல்லை  தாங்க முடியவில்லை அவன் சொன்னாலும் கேட்பதாக இல்லை என்ன செய்வது என்று ஆலோசனை என்னிடம் அவர் கேட்டார்.  

நான் அவருக்கு கூறியது நீங்கள் கவலைப்பட வேண்டும் அதற்கு பலவகையான மென்பொருள்கள் இருக்கிறது அதனை வைத்து தடுக்க முடியும் என்று கூறினேன். அது போல் இன்று எல்லோரின் வீட்டிலும் இணைய வசதி இருப்பது சாதாரமாக ஆகிவிட்டது.  தற்போது கையடக்கத் தொலைபேசயிலும் நாங்கள் பாவிக்ககூடியதாக காணப்படுவதும் மேலும் சிறப்பப்சமாகும்.
  
அடுத்து இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள். 
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. கொடுங்கள்.

நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளும் நீங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்கள் கணினி வழியாக பார்க்கத் துாண்டும் நிகழ்வாக காணப்படும் இந்த விடயம் தொடர்பாக நீங்களும் கவனமாக இருந்தால் என்ன குடியா மூழ்கிப் போகும். 

எங்களை நாங்கள் தற்பாப்பு செய்து கொள்ளும் நடவடிக்கையாக இந்த மென்பொருள் அறிமுகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன். 


மேலும், இந்த மென்பொருள் தொடர்பாக முன்னர் பலருக்குத் தெரிந்தாலும், அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், மறந்தவர்களுக்கும், மீட்பவர்களுக்கும் இதோ இந்த மென்பொருள் தொடர்பான விபரம்................... முதல் இங்கு கிளிக் பண்ணுங்க! 
அப்புறம் இங்கு கிளிக் பண்ணுங்க











நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன், இதன் பயன் தொடர்பாக உங்களின் அபிப்பிராயங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை உங்களின் ஆலோசனைகளும், கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கலாம் ஆனால் அது உங்களுக்கு அழுப்பாக இருக்கலாம் என்று எண்ணி மீண்டும் சந்திப்போம்.