இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என்பது இதில் அறிந்திருக்க வேண்டிய விடயமுமாகும்.
சிலர் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள், சிலர் அறிவுக்குப் பயன்படுத்துகிறார்கள், சிலர் வருமானத்தை பெருக்கிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள் அத்துடன் வித்தியாசமான மென்பொருள்களையும் இவர்கள் நாளாந்தம் பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றிக்கும் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். மேலும் பொதுவான விடயமாக நான் தரப்போவது உலகில் இன்று அதிகமாக எந்த விதமான மென்பொருள்கள், சமூக இணைத்தளங்கள் மற்றும் ஏனைய தளங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது என ஆராய்வோம்.
இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.
அதன் படி
1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.
பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.
2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்
உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.
3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.
4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.
5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்
அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.
6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்
அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக