தமிழ் மொழி கற்போம் பாடம் - 01

இன்றைய காலகட்டத்தில் நாங்கள் பல்வேறுபட்ட மொழிகளின் தேர்ச்சி பெற்றுருந்தாலும் நாங்கள் எந்த மொழியை தாய் மொழியாக கொண்டிருக்கிறோம் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது சாலச்சிறந்ததாகும். அப்போது தான் அவர் அரச மற்றும் ஏனைய துறைகளில் தன்னை நிலைநிறுத்த முடியும் என்பதும் நாங்கள் கண்ட உண்மையும்.

இலங்கை போன்ற நாடுகளில் தாய்மொழி மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களுடைய எதிர் காலத்தை பிரகாசமடைச் செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இலங்கையில் நடாத்தப்படும் உயர்பதவிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான பரீட்சையில் மொழியறிவு தொடர்பான பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாகச் சொல்லப் போனால் இலங்கையில் ஐந்தாம் வருட மாணவர்களுக்கான புலமைப்பரீசில் பரீட்சையில் அவர்கள் சித்தியடைய வேண்டுமானால் நிச்சயமாக அவர்கள் தாய்மொழியில் ஓரளவேனும் புலமை பெற்றிருப்பது முக்கியமானது.  இவ்வாறே இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வியாளர் சேவை,  இலங்கை கல்வி நிர்வாக சேவை போன்ற உயர் பதவிகளுக்கான பரீட்சையில் இந்த மொழி ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஏன்? ஆகக்குறைந்தது என்னைப் போன்றவர்கள் இவ்வாறான தளங்களில் எழுதுவதற்கும் இந்த மொழி உந்து சக்தியளிக்கின்றது. 

எனவே 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள இலக்கண நெளிவு, சுளிவுகளை நாங்கள் பார்க்கப் போகிறோம்.

உண்மையைச் சொல்லப் போனால் அதிகமாக தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு இதில் பல சந்தேகங்கள் இருப்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது மற்றொரு உண்மையாகும்.

தமிழுக்கு அமுதென்று பெயர் அது என் உயிருக்கு மேல் என்னும் பொன்ழொழி வாத்தைக்கிணங்க நான் இன்று மாணவர்கள் தொடக்கம் மற்றும் தமிழ் மொழியை தாய் மொழியாக கற்கும், கற்றலில் வழுக்கள் உள்ளவர்களுக்கும் பயன்படும் விதத்தில் இங்கு நான் தொடராகத் தரப்போம் தமிழ் மொழி கற்போம் என்னும் பாடத்தின் முதல் பாகம் இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது......................

இங்கு வினா விடை அமைப்பில் கேள்டவிகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் மூலம் உங்களுக்கு நான் இதனை வழங்க இருக்கிறேன்.


01. தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் எத்தனை?
- 247

02. நெடுங்கணக்கு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
உயிர் எழுத்து,              - 12
மெய் எழுத்து,               - 18
உயிர் மெய்,                   - 216
ஆய்தம்                            -  1
மொத்தம்                    247 எழுத்துக்களாகும்.

என நான்கு வகைப்படும்

அ, ஆ.....ஔ .      க், ங், ஞ்............       த்+ அ=  தா

03.  தமிழுக்கு உயிர் போல் அமைந்திருக்கும் எழுத்துக்கள் எவை?
 -  உயிர் எழுத்துக்கள் 

04. உயிர் எழுத்துக்கள் எத்தனை  அவை எவை?
     அ, ஆ, இ, ஈ, உ, ..........................முதலான பன்னிரண்டும்.

05. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை எவை?
- குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகைப்படும்

06. உயிர் எழுத்துக்கள் குறில் எவை?
  • அ, இ, உ, எ, ஒ என்னும்  ஐந்தும்.

07. உயிர் எழுத்துக்கள் நெடில் எவை?
ஆ, ஈ,ஊ, ஏ.ஓ, ஐ, ஔ என்னும் ஏழும்

08. எவ்வடிப்படையில் உயிர் எழுத்துக்களை குறில், நெடில் எனப்பிரிக்கிறோம்.
மாத்திரை அடிப்படையில்
09. உயிர் குறிலின் மாத்திரை எவ்வளவு?
  • ஒன்று 
10. உயிர் நெடிலின் மாத்திரை எவ்வளவு?
  • இரண்டு
மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம் ....................
நன்றி
வணக்கம்


கருத்துரையிடுக