Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Computer Service லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Computer Service லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2010

ஆகஸ்ட் 22, 2010

எமது கணினியை வேகமாக ஆரம்பிக்க நாம்ம எனன பண்ணலாம்!

நாங்க எதை செய்வதென்றாலும் அத்தனைக்கும் ஒவ்வொரு வழி இருக்குதங்க!

வீட்டில் ஒரு புதிய கணினியை வாங்கி தங்களுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு கொஞ்ச நாள் வந்து  ”அப்பா என்னுடைய கணினி ரெம்ப கம்மியா வேலை செய்யுதப்பா ” என்றா உங்களுக்கு கோபத்திற்கு மேல் கோபமாக வரும் கோபப்பட வேண்டாம் இதற்கான சிறிய தீர்வு உங்களுக்காக இங்கே. இதனைச் செய்து நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய கணினியை ஆரம்பிக்கும் போது அல்லது Boot பண்ணும் போது ஏற்படும் தாமத்திற்கான தீர்வுதான் இந்த செட்டிங் ஆகும்.


நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:


  • நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
  • Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
  • இப்ப "Computer Configuration" ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
  • ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
  • கிளிக் "OK", "Apply" & "OK",
  • திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" ட்டச்சு செய்யுங்க.
  • Double Click  "IDE ATA/ATAPI controllers".
  • "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
  • "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
  • "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
  • கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க
ஆகஸ்ட் 22, 2010

என்ன இந்த BIOS?

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது. கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..


கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது. BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. . பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.



சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தர்யாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை. தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ரொம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ள லாம்.

7 ஆக., 2010

ஆகஸ்ட் 07, 2010

Disk Defragmenter என்றால் என்ன?



டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு படுத்தலாம்.

ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறு சிறு பகுதிகளாக உடைக்கின்றன. பின்னர் அந்த பைலின் பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில் அங்கொன்று இங்கொன்றாக சேமிக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட பைல்களின் சிதறள்களை ப்ரேக்மன்ட்ஸ் (fragments) என்ப்படுகிறது.

ஒரு பைலை சேமிக்கும் போதே அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் எந்தெந்த இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்களையும் இயங்கு தளம் பதிந்து கொள்ளும். FAT (File Allocation Table) எனப்படும் பைல் பகிர்வு அட்டவணை மூலம் இந்த விவரங்களைப் பதிந்து கொள்கின்றன. FAT16, FAT32 மற்றும் NTFS என்பன விண்டோஸில் பயன்படுத்தப்படும் பைல் சேமிப்பு முறைகளாகும். இயங்கு தளம் சேமித்த ஒரு பைலை மீண்டும் அணுக முற்படும் போது உரிய பைல் சிஸ்டம் மூலம் அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் அல்லது பாட்டிசனில் எந்த க்ளஸ்டரில் (Cluster) எந்த செக்டரில் (Sector) உள்ளன என கண்டறிந்து கொள்ளும்.
பைல்களை அவ்வப்போது சேமிக்கப்படும்போதும், மென்பொருள்களை நிறுவும் போதும் நீக்கப்படும் போதும் ஹாட் டிஸ்கில் டேட்டா சேமிக்கப்படும் இடங்களில் ஏராளமான இடை வெளிகள் உருவாகின்றன. ஹாட் டிஸ்கில் வேவ்வேறு பகுதிகளில் டேட்டா சிறு சிறு பகுதிகளாக சேமிக்கப்படும் போது ஒரு பைலைத் திறப்பதற்கு கணினி இன்னும் கடினமாக செயற்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக கணினியின் வேகத்தில் மந்த நிலை உருவாகும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதன் மூலம் சேமிக்கப்பட்ட டேட்டாவை ஹாட் டிஸ்கில் மீள ஒழுங்கு செய்யப்பட்டு பைகளுக்கிடையிலான இடை வெளிகள் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயங்கு தளம் ஒரு பைலை மிகக் குறுகிய நேரத்தில் அணுக முடிகிறது.
உதாரணமாக ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை புத்தகங்களாகவும் ஹாட் டிஸ்கை புத்தகங்களை அடுக்கி வைக்கும் ஒரு புத்தக அல்மாரியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அல்மாரியில் ஒரு தட்டில் புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. அந்தத் தட்டிலிருந்து மூன்று சிறிய புத்தகங்கள் அகற்றப்படுகின்றன. (மூன்று சிறிய பைல்கள் ஹாட் டிஸ்கிலிருந்து அழிக்கப்படுகின்றன) அப்போது அங்கு சிறிய மூன்று இடை வெளிகள் உருவாகும். பிறகு அவ்விடத்தில் அளவில் பெரிய ஒரு புத்தகத்தை வைக்க நினைக்கிறீர்கள். எனினும் உங்களால் முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் இருந்த இடத்தில் அதனை வைக்க முடியாதிருக்கும். பதிலாக அதனை வேறொரு தட்டிலேயே வைக்க வேண்டும். (ஹாட் டிஸ்கில் வேறொரு இடத்தில் பதியப்பட வேண்டும்) அல்லது புத்தகங்களை நகர்த்தி மூன்று சிறிய இடை வெளிகளை ஒன்றாக்கி ஒரு பெரிய இடை வெளியை உருவாக்குவதன் மூலம் அந்த பெரிய புத்தகத்தை வைக்கலாம் (பெரிய பைலை ஹாட் டிஸ்கில் பதியலாம்) இங்கு புத்தகங்களுக்கிடையில் இடை வெளியைக் குறைப்பது போன்றே ஹாட் டிஸ்கில் பைல்களுக்கிடையில் இடை வெளியைக் குறைத்து ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக ஒழுங்கு படுத்தப்படுவதையே டிப்ரேக்மண்ட் (Defragment) எனப்படுகிறது.
ஹாட் டிஸ்கை குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது டிப்ரேக்மண்ட் செய்தல் நல்லது. எனினும் டிப்ரேக்மண்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஹாட் டிஸ்கின் அளவைப் பொறுத்து அந்த நேரம் வேறுபடும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றாம் தரப்பு மென்பொருள்கள் எதனையும் பயன் படுத்த வேண்டியதில்லை.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
Start → Programs → Accessories → System Tools → Disk Defragmenter தெரிவு செய்யுங்கள். அப்போது Disk Defragmenter டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உரிய ட்ரைவைத் தெரிவு செய்து Analyze பட்டனில் முதலில் க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டிய தேவையுள்ளதா எனக் கண்டறியலாம். அதன் பின்னர் டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டியிருப்பின் Defragment பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
எனினும் விண்டோஸ் விஸ்டா பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யும் செயற்பாட்டை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் இயங்கு தளம் தானாகவே செயற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கணினிப் பயனர் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதைப் பற்றிக் கவலையே பட வேண்டாம். அதனை விண்டோஸே கவனித்துக் கொள்ளும். அதேபோல் மேல் நிலைப் பயனர்கள் கமாண்ட் ப்ரொம்ப்ட் மூலம் டிப்ரேக்மண்ட் செய்யும் வசதியும் விஸ்டாவில் உள்ளது.

1 மே, 2010

மே 01, 2010

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
படம் 1
கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார் சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும் வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும் வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர் என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.
இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக Double Click  செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும் அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு “Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும் பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்பயனுள்ளதாக இருக்கும்.

15 ஜன., 2010

ஜனவரி 15, 2010

Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?


Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?

           நாம் கணணியில் தகவல்களை பாதுகாத்து வைப்பதற்கு மென்பொருட்களை பயன்படுத்தி   ரகசிய குறியீடுகள்  ( pass word ) மூலம் பாதுகாத்து  வைத்தோ  அல்லது  மறைத்து (hide) வைத்தோ  பயன்படுத்துகிறோம்.

         அந்த வகையில் partion செய்யப்பட்ட hard disk இன் ஒருபகுதியை எமக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்த பின்பு மறைத்து வைக்கலாம். அதனை எவ்வாறு செய்வது என்று பின்வரும் செய்முறைகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


          முதலில் Run window இற்கு சென்று cmd என டைப் செய்து என்டர் தட்டவும். பின்பு வரும் task window இல் diskpartஎன டைப் செய்து என்டர் தட்டவும்.பின்னர் list volume என டைப் செய்து  என்டர் செய்யவும். உடனே உங்கள் கணணியின் Drive letters,அதற்குரிய numbers மற்றும் அவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வரிசை  படுத்தப்படும். உங்களுக்கு எந்த drive  ஐ மறைக்க வேண்டுமோ அதனை தெரிவு செய்யselect volume என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு volumeஇற்கான இலக்கத்தை இட்டு என்டர் தட்டவும்.

   e.g :- select volume 3

பின்னர் remove என என்டர் பண்ணவும்.
அப்பொழுது நீங்கள் தெரிவு செய்த drive மறைந்திருப்பதை my computer  சென்று உறுதி செய்யலாம். மீண்டும் மறைத்து வைக்கப்பட்ட drive ஐ பழைய நிலைக்கு கொண்டு வர இதே படி முறையை பின்பற்றி remove இற்கு பதிலாக  assign என என்டர் தட்டவும்.

23 நவ., 2009

நவம்பர் 23, 2009

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??

உங்கள் கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் பயன்படும்.

இதை முதலில் சரி பாருங்கள்

கணனிக்கு மின்சாரம் வருகின்றதா என்று பாருங்கள். குறிப்பாக நீங்கள் இணைத்திருக்கும் Power Socket க்கு மின்சாரம் வருகின்றதா எனபதை வேறு சாதனங்களை இணைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைவிட கணனியின் பின் பக்கத்திலும் ஒரு ஆழி இருக்கும் அதுவும் இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

ஒரு பீப் மட்டும் கேட்குது

வெவ்வேறு பயோஸ்களில் வெவ்வேறு முறைகளைக் கையாள்வர். ஆனால் பொதுவாக ஒரு பீப் சத்தம் கேட்டது என்றால் உங்கள் கணனியில் RAM ல் பழுது இருக்கலாம். சில பயோஸ்களில் இது 3 பீப்பாகவும் இருக்கும்.

1 நீண்ட பீப் 2 குறுகிய பீப்

உங்கள் வீடியோ கார்ட்டில் பிரைச்சனை உள்ளது.
மேலும் பல பீப் கோடுகளை அறிந்து கொள்ளுங்கள்

படிமுறைகள்

  1. மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதா என்று பரீட்சிக்கவும்
  2. Power, Re-set பொத்தான்கள் செருகுப் பட்டுள்ளனவா என்று பரீட்சிக்கவும்
  3. மொனிட்டர் பவர் பட்டன் ஆன் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பரீட்சிக்கவும்.
  4. brightness and contrast போன்றவை கணனி திரையில் சரியாக இருக்கின்றதா என்பதையும் பார்க்கவும்.
  5. கணனியில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் களற்றிவிட்டு (மொனிட்டர் மட்டும் இருக்க) மீள கணனியை இயக்கிப் பாருங்கள். கணனி இயங்கினால் ஒவ்வொரு சாதனமாகப் பொருத்தி எந்த சாதனம் பிரைச்சனை தருகின்றது என்று அறிந்து கொள்ளுங்கள்.

RAM என்றால் என்ன செய்யலாம்?

ramஅனேகம் இந்த முறையைத்தான் பல Hardware திருத்தும் இடங்களிலும் பாவிப்பர். அதாவது கணனியின் வெளி உறையை அகற்றி உள்ளே உங்கள் றாம் மெமரியை களற்றுங்கள். பின்னர் கொஞ்சம் ஓடிக்கலோன் அல்லது ஏதும் சென்ட் (அல்ககோல்) தூவி ஒரு சுத்தமான துணியால் முன்னுள்ள உலோகப் பகுதியை துடைக்கவும். பின்னர் நன்கு உலர்ந்த பின்னர் மீள கணனியில் பொருத்தி கணனியை மீள இயக்கவும்.
பல வேளைகளில் மேலே குறிப்பிட்ட முறை பயன்தரக்கூடும் ஆனால் எப்போதும் பலன் தரும் என்று கூறுவதற்கில்லை.

VGA Card என்றால் என்ன செய்யலாம்

அனேகம் கணனிகள் இப்போது உள்ளமைந்த வீ.ஜி.ஏ கார்ட்டுகளுடன் வருகின்றது. ஆகவே கணனி ஆரம்பிக்கும் போது F2, Del, அல்லது உங்கள் மதர்போர்ட் ஆதரிக்கும் விசையை தட்டி பயோஸ் செல்லுங்கள் அங்கே உங்கள் உள்ளமைந்த VGA கார்ட்டை உயிர்ப்பூட்டுங்கள். பின்னர் மொனிட்டர் கேபிளை களட்டி ஒன் போர்ட் விஜிஏ வில் செருகி கணனியை மீள உயிர்ப்பூட்டுங்கள். புது கார்ட் வாங்கும் வரைக்கும் இவ்வாறு காலம் ஒட்டலாம்.
இங்கு நான் அறியத் தந்தவை வெறும் ஆரம்ப படிநிலை வழிகாட்டிதான். இதைவிட அதிகமாக அறிய இணையத்தின் துணையை நீங்கள் நாடலாம். அல்லது பயிற்றுவிக்கப்பட்ட ஒரு Hardware Technician துணையை நாடலாம். ஆர்வ கோளாரில் புரியாத விடையங்களில் கையைப் போட்டு அனைத்தையும் கெடுக்காமல் இருப்பது நலம் என்பது அடியேனில் கருத்து.
ஏதும் பிழை இருந்தால் அல்லுது எதையும் விட்டிருந்தால் பின்னூட்டப்பகுதியில் அறியத்தாருங்கள்.


13 நவ., 2009

நவம்பர் 13, 2009

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில 

வழிமுறைகளைபின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை
இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

1. Sequrity Update களை நிறுவுங்கள்.



உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
 இதுதானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே 
குறிப்பிட்ட பாதுகாப்புகோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு
 பின்னர் உங்கள் கணினியில்நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic
updatesசெல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் 
எப்பொழுதுவிண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :
 , DirectX ,
Internet Explorer 8 மற்றும்விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீதுபயந்தனர்.
 இப்பொழுது எங்கிருந்து வருகிறது 
என்று தெரியாமலே வைரஸ்கள்வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் 
எதையும் சோதிக்காமல்அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.
உங்கள் கணினியில் ஒரு நல்லஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். 
இந்த வகையில் Avast மற்றும் Aviraஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. 
கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். 
ஆனால் Avira இயங்ககுறைந்த நினைவகமே போதும்.


ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர்(Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்கவேண்டும்.

மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். 
எல்லாவற்றையும்நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். 
இதைதவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ 
அதன் முக்கியத்துவம் தெரிந்தால்மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை.மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். 
இது ஒரு நல்லமென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , 
தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க ,மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின்பட்டியல் , 
இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் 
அருமையானஎளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட 
அதிக வசதிகள்கொண்டது.அனைத்து கணினியிலும்
 இருக்க வேண்டிய இந்த மென்பொருள்கணினிக்கு 
எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் 
நீக்கும்வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து 
அடைத்துவிடும்வசதியும் உண்டு.

5. Hard Disk  படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். 
இதன் மூலம்அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன 
இருந்ததோஅதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதைமேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. 
ஏன் என்றால்எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது 
வைரஸ்கள் வந்தாலோஅதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. 
இதனால் உங்களின் Firewallஅமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.


இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வுசெய்யுங்கள்.நீங்கள் 
இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால்பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும்பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து 
செய்துஎன்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. 
இதனால்வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். 
மேலும்தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol