Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Video லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Video லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மே, 2010

மே 29, 2010

உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்


படம் 1
நாங்கள் பார்த்த வீடியோ மறுபடியும் பாக்கும் பொது video has been removed என வரும் ஐயோ மிஸ் பன்னிடம் என இனி நினைக்கவேண்டாம் இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்
இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.


முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://savevideo.me
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்
இணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற
பொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்
கொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்
யூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க
கொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)
நமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

14 டிச., 2009

டிசம்பர் 14, 2009

யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற



இன்றைய காலகட்டத்தில் யூடியுப் ஒரு அத்தியாவசிய தேவையாகவே

மாறிவிட்டது. இத்தகைய யூடியுப் வீடியோவில் நாம் பார்க்கும் பல
வீடியோவின் சிலபகுதிகள் தேவை இல்லாமல் இருக்கும்.
தேவையான பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றாலும்
முழுவதும் பார்த்துதான் ஆக வேண்டும். இந்த குறையை நீக்க
நீங்கள் பார்க்கும் வீடியோவில் தெரிவு செய்த சில பகுதிகளை
மட்டும் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றலாம். மாற்றியவுடன்
ஒரு வீடியோ லிங் ( Link URL ) கொடுக்கப்படும்.அந்த வீடியோ
லிங்கை உங்கள் நண்பருக்கு கொடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த
பகுதிமட்டும் தான் இருக்கும். எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு பிடித்த யூடியுப் முகவரியை ( Youtube url )
காப்பி செய்துகொள்ளவும். www.tubechop.com இந்த இணையதளத்திற்கு
செல்லவும். நீங்கள் காப்பி செய்த யூடியுப் முகவரியை படம் 1 -ல்
காட்டியபடி தேடும் இடத்தில் கொடுக்கவும். வரும் முடிவை சுட்டி
உள்ளே செல்லவும். உதாரனத்திற்காக நாம் இளையராஜா வீடியோ
ஒன்றை சுட்டி உள்ளே செல்கிறோம். படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இடதுபக்கத்தில் உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் இருந்து
தொடங்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.வலதுபக்கத்தில்
உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் வீடியோ நிறைவு பெறவேண்டும்
என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அல்லது தொடங்கி முடியும்
நேரத்தை மேலே இருக்கும் கட்டத்திற்குள்ளும் கொடுக்கலாம்.
“Chop it ” என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.அடுத்து தோன்றும்
பக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்த இடம் முழுவீடியோவாக
மாற்றப்பட்ட்டு அதற்குறிய முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.
நாம் கொடுத்த யூடியுப் முகவ்ரி
மாற்றப்பட்ட வீடியோ முகவரி

29 அக்., 2009

அக்டோபர் 29, 2009

அசையும் படங்களை (GIF)வலைப்பதிவில் பொதிய...........


funn



இணைய தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவு நுட்பங்களும் வலைப்பதிவுகளை இணையதளத்துக்கு இணையானதாக ஆக்க முயற்சித்து வருகின்றன. வலைப்பதிவு நுட்பங்கள் கூறும் பதிவுகள் பல இருப்பினும் நான் நீண்ட காலம் தேடியும் கிடைக்கதா தொழில்நுட்பத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பிளாக்கர் டிரிக் உள்ளிட்ட பல இணையதளங்கள் தொழில்நுட்பத் தகவல்களை ஆங்கிலத்தில் அளிப்பதால் தமிழில் தேடும் போது பல நுட்பங்கள் அறிந்து கொள்ள இயலாது போகிறது.

வலைப்பதிவுகளில் அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்வது எப்படி?

வலைப்பதிவுகளில் (jpeg) படங்களைப் பதிவேற்றம் செய்வது போல (gif) அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. மாறாக அசையும் படங்களை சாதாரணமாகப் பதிவுற்றம் செய்தால், அவை அசைவில்லாப் படங்களாகவே காட்சியளிக்கும். 

படிநிலை -1.

இத்தளத்தில் ஒரு இலவசமான பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின் அங்கு பதிவேற்றப் பகுதிக்குச் சென்று நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்பினை பதிவேற்றினால். அவர்கள் ஒரு நிரல்த்துண்டு (ஜாவா ஸ்கிரிப்ட்) தருவார்கள். அதனைக் காப்பி செய்து...









படிநிலை-2. 

நம் வலைப்பதிவுக்குச் சென்று நாம் இடுகைப் பகுதியில் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நிரலை ஒட்ட வேண்டும்.



இப்போது இடுகையை வெளியிட்டுப் பாருங்கள்...
உங்கள் படம் அசையும் படமாகக் காட்சியளிக்கும்
அக்டோபர் 29, 2009

பல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..






இன்றைய சூழலில் பல தொழில்நுட்பத் தகவல்களையும் வீடியோ வாயிலாக விளக்குவது பெருவழக்காக உள்ளது. அவ்வடிப்படையில் யூடியூப் (http://www.youtube.com/) என்னும் தளம் சிறந்து விளங்குகிறது. பல தொழில்நுட்ப விளக்கங்களும் இத்தளத்தில் விளக்கப் படங்களாகவே காண முடிகிறது. 
தொழில்நுட்பச் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடிய காலம் சென்று இப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வடிவில் தேடுவதே பரவலாக உள்ளது. 

பிடிஎப் கோப்பை வேர்டாக மாற்ற வேண்டுமா..?

வேர்டை பிடிஎப்பாக மாற்ற வேண்டுமா..?

gif கோப்பினை உருவாக்கவேண்டுமா..?

இத்தளத்தில் கிடைக்கும் வீடியோ பாடல்களின் ஒலியை மட்டும் எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதை முன்பு கண்டோம்.

என நமக்குத் தேவையான தொழில்நுட்பத்தகவல்கள் வீடியோ வடிவிலேயே கிடைப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

வீடியோக்களைத் பதிவிறக்கிக் கொள்ள பல இணையதளங்களும் உதவுகின்றன.சான்றாக(கீப்வைட்)யூடியூப் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை விளக்குவதாக இந்த விளக்கப் படம் அமைகிறது. 

இவ்வாறு ஒவ்வொன்றாக பதிவிறக்கிய வீடியோ கோப்புகள் பலவற்றையும் ஒரே கோப்பாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பல இணையதளங்கள் வழங்குகின்றன. 
அவற்றுள் இத்தளம் இலவச மென்பொருள் வழங்குவதாகவும்,பயன்படுத்த எளியதாகவும் விளங்குகிறது. 
இச்சுட்டியை அழுத்தி அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். 

அடுத்து அந்த மென்பொருளுக்கான் ஐகானை அழுத்தினால் ஒரு பட்டியல் பெட்டி தோன்றும்..

அதில் நாம் ஒன்றிணைக்க வேண்டிய வி.எல்.சி ஒளிக்கோப்புகளை தெரிவுசெய்து கொள்ள வேண்டும். பிறகு என்ன வகை ஒளிக்கோப்பாக ஒன்றிணைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டால் போதும் நீங்கள் சேமித்து வைத்த சிறுசிறு ஒளிக்கோப்புகள்(vlc) எல்லாம் ஒன்றிணைந்து ஒரே கோப்பாகக் காட்சியளிக்கும். இடைவெளி இன்றி தொடர்ச்சியாக உங்கள் வீடியோக்களைக் கண்டு மகிழலாம்.
அக்டோபர் 29, 2009

mobile streaming tv

Mobile video also comes in the form of streaming TV over the mobile network, which must be a 2.5G or 3G network. This mimics a television station in that the user cannot elect to see what they wish but must watch whatever is on the channel at the time.CThere is also mobile broadcast TV, which operates like a traditional television station and broadcasts the content over a different spectrum. This frees up the mobile network to handle calls and other data usage, and because of the "one-to-many" nature of mobile broadcast TV the video quality is a lot better than that streamed over the mobile networks, which is a "one-to-one" system.
அக்டோபர் 29, 2009

free video screen capture software

இணையத்தில்
உலாவிய போது கிடைத்த மென்பொருள் இது , பலருக்கும் நம் computer desktop
இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது
வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம்
உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக
எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும்
வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும்
video வை எளிதாக copy செய்யலாம் .இது அனைத்தையும் விட ஒரு நல்ல உபயோகம்
என்னவென்றால் உங்களிடம் யாராவது ஒரு பெண் இணையத்தில் நன்றாக
கடலைபோட்டுவிட்டு , பின்பு இவர் யார் என்றே தெரியாது என்று கூறினால்
நீங்கள் கடலை போட்டதை இந்த மென்பொருள் மூலம் video ஆதாரமாக வெளியிடலாம்
...சரி சரி எங்க இருந்து வந்திங்களோ அங்க ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க
...தரவிறக்கம் செய்வதற்கு கீழே சொடுக்குங்கள்


keywords , video screen capture , scre caputre download ,record desktop screen