Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Antri Virus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Antri Virus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 அக்., 2010

அக்டோபர் 18, 2010

Free AVG Anti Virus for One year


எங்களுடைய வாழ்வில் பலவகையான இம்சைகளினால் பாதிக்கப்படுகிறோம். அது நல்லதாகவும் இருக்கும் அல்லது கெட்டது நடந்து பின்னர் நல்லது நடக்கும் இவ்வாறு எந்தவகையான செயலாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் இருந்து வெற்றி கொள்வதுதான் சிறந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம். 

நாங்களும் கணினி பயன்படுத்தப்படும் போது பல்வேறு விதமான வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்படுகிறோம் மற்றும் அதனால் பல தடவைகள் எங்களுக்கே எங்களுடைய கணினியை உடைக்கக்கூட எண்ணங்கள் தோன்றி இருக்கலாம். இந்த எண்ணங்களுக்கு ஒரு வருடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நான் தரப்போகும் இந்த இலவச Anti Virus Programe எந்த வகையில் பயனளிக்கப் போகுகின்றது என பயன்படுத்தித்தான் பார்ப்போமே.

ஆனால் இதனை நீங்கள் இணையத்தின் ஊடாக மாத்திரம் தரயிறக்கி செயற்படுத்த முடியும் என்பதும் ஒரு விடயமாகும்.
இதனை தரயிறக்கிக் கொள்ள இங்கே

21 மே, 2010

மே 21, 2010

உங்களுடைய கணனியில் வைரஸ்(அ) இதோ



சில நாட்களுக்கு முதல் என்னுடைய கணணியில் ஏற்பட்டது . உங்களுக்கு உபஜோகமாக இருக்கும் ,முதல் நாள் என் கணனியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்தது .அடுத்த நாள் கணணி ய் அவசரமாக ஒன செய்த பொது ப்ளக்ஸ்க்ரீன் மட்டும் வந்தது

பயன்படுத்தி பாருங்கள்
இதை டவுன்லோட் செய்து nero மென்பொருள் கொண்டு cd இல் பதிந்து கொள்ள வேண்டும் பின்பு இது bootable cd உங்கள் கணணி restart பண்ணும் பொது f2 பட்டன்(உங்களுடைய கணனியின் மதொர்போர்ட் ய் பொறுத்து)பயன்படுத்தி என்டர் பண்ணுங்கள் ,குறைந்தது இரண்டு மணிநேரம் எடுக்கும்

அவ்வளவுதான்
உங்களுடைய கணனியில் இருக்கும் data பாதுகாக்கப்படும்
(Kaspersky Boot Rescue 130 MB
http://hotfile.com/dl/30016749/2e9599d/KAS_Boot_Rescue_Disk_8.8.1.36.part1.rar.html
http://hotfile.com/dl/30016754/702ca21/KAS_Boot_Rescue_Disk_8.8.1.36.part2.rar.html)

1 மார்., 2010

மார்ச் 01, 2010

புதிய மிகச் சிறந்த அன்டி வைரஸ்


ணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்"இலவச ஆன்டி-வைரஸ்".

இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

நீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த 'லிங்கை' கிளிக் செய்யவும்.

பின்குறிப்பு : இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்

20 பிப்., 2010

பிப்ரவரி 20, 2010

பிரச்சனையிலிருந்து விடுபட இலவச அண்டிவைரஸ் அவிரா.




நீங்கள் புதிதாக கணணி வாங்கும் போது அண்டிவைரஸ் எனும் கணணி பாதுகாப்பு மென்பொருட்களை இன்ஸ்டோல் செய்து தருகிறார்கள். அவர்கள் தரும்  அண்டிவைரஸை நிறுவி இருந்தாலும் சில நேரங்களில் வைரஸ் பிரச்சனையும் அடிக்கடி வந்து கணணியை முடக்கிவிடும். கணணி வாங்கிய இடத்தில் தொடர்பு கொண்டால் அதிக உதவி கிடைக்காது. மீண்டும் ரீக்கவர் சிடி மூலம் முழுவதும் இன்ஸ்டோல் செய்யவதாயின் டேட்டாக்களை பேக்கப் எடுத்திருக்க வேண்டும்
இது போன்ற பிரச்சனைகளை தடுக்க இலவசமாக கிடைக்க கூடிய அவிரா எனும் சிறந்த அண்டிவைரஸ் மென்பொருளை பாவிக்கலாம். இலவச அண்டிவைரஸ் மென்பொருட்களிலே அவிரா முதல் இடத்தில் இருப்பதாக சிநெட் போன்ற பிரபல இணையத்தள கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன.
அவிரா பற்றி முழுவதுமாக வாசிப்பதற்கு ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பிற்கு செல்லுங்கள்.

aananthi.com


30 அக்., 2009

அக்டோபர் 30, 2009

மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ



தனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கும் நல்ல தேவை உள்ளது. Symantec, Kaspersky, McAfee என்று பல நிறுவனங்களும் இத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.மைக்ரோசாப்ட்டும் வணிக ரீதியில் Windows Live Onecare எனும் ஆண்டிவைரஸ் மென்பொருளை விற்று வருகிறது.

விரைவில் விண்டோஸ் கணினிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் பொறுத்து புதிய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட போவதாகமைக்ரோசாப்ட் அறிவித்து உள்ளது. அதற்கு மொர்ரோ (Morro) என்று பெயரிட்டு உள்ளது.

தற்போது விற்று வரும் Windows Live Onecare விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளார்கள். புதிய மொர்ரோ ஆண்டிவைரஸ் விண்டோஸ் எக்ஸ்பி , விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் இயங்கும்படி உருவாக்கப்பட்டு உள்ளது. வைரஸ், டிரோஜன், ரூட்கிட், ஸ்பைவேர் உள்ளிட்ட அனைத்து வில்லங்க மென்பொருள்களை நீக்கும் வண்ணம் இது இருக்கும் என்கிறார்கள். இதன் பீட்டா பதிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


தற்போது ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், அதனை இலவசமாக அளித்தால் தன் நிறுவனத்தின் இயங்குதளங்கள் (OS) விற்பனையை கூட்டலாம் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. அது நடக்கலாம். எப்படியோ பயனர்களுக்கு நல்ல இலவச ஆண்டிவைரஸ் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

பில்கேட்ஸ் சார், அப்படியே வணிகரீதியில் செயல்படாத இல்ல பயனர்களுக்கு (Home Users) உங்க இயங்குதளத்தை (Operating System) இலவசமா தந்தா ரொம்ப நல்லா இருக்கும்.