Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Window லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Window லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஆக., 2010

ஆகஸ்ட் 18, 2010

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ நான் கூறும் வழி!


எங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம் 
புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை

எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.
அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்.

6 ஜூலை, 2010

ஜூலை 06, 2010

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா?

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.
ரீஸ்டோரஷன் என்றால் என்ன?
கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.
இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).
அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு.
இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?
கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும். 

வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.

விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.
டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.
மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.
விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.
இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.
நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.
நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).
இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.
இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.
Drive Image XML இன் குறைபாடு
இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம்.
 மென்பொருள் DOWNLOAD செய்ய

28 ஜன., 2010

ஜனவரி 28, 2010

விண்டோஸ் 7 - சில வசதிகள்


விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது. எனவே வாசகர்கள் பலர் விண்டோஸ் 7 தரும் சின்ன சின்ன வசதிகள் குறித்துத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுள்ளனர். ஏற்கனவே சில வாரங்களில் இது குறித்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதோ இன்னும் சில!
டாஸ்க் பார் பெரிதா – குறைக்கலாமே!
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது.இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. நீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்ட ர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும். டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties  என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதில் Use small icons  என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம். இதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties  டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதில் Taskbar appearance என்பதற்குக் கீழாக Autohide the taskbar  என்பதில் டிக் அடையாளம் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். உங்களு டைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.
கடிகாரம், சிஸ்டம் ஐகான்களை மறைக்கலாமா?
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் கடிகாரம், சிஸ்டம் மற்றும் பிற ஐகான்களை மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்றால் பலர் அவற்றை மறைக்கவே விரும்புவார்கள். வால்யூம் கண்ட்ரோல், நெட்வொர்க் இயக்க ஐகான், பவர் லெவல் என பல ஐகான்களை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிடலாம். ஏனென்றால் இவற்றை நாம் பார்ப்பது அரிது. சரி, எப்படி எடுத்துவிடலாம் அல்லது மறைத்துவிடலாம்.
1. டாஸ்க் பாரின் வலது மூலையில் மேலே சுட்டிக் கொண்டிருக்கும் அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது Show hidden icons  என்று காட்டப்படும். அந்த பட்டனில் கிளிக் செய்து இதண்tணிட்டித்ஞு என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது Notification Area Icons   என்னும் கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக உள்ள Turn system icons on or off  என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதனை அடுத்து எந்த ஐகானில் மாற்றங்கள் தேவையோ, அல்லது எந்த ஐகானை மறைக்க செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த ஐகானில் கிளிக் செய்து, மெனு பெற்று அதனை ஆப் அல்லது ஆன் செய்திடலாம்.
4. அதன் பின் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.

10 ஜன., 2010

ஜனவரி 10, 2010

வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்



விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு
ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி
தான் இந்த பதிவு.

சிறப்பு அம்சம்:

* பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.

* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.

* வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.

* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,

* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்

* மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.

* அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.


குறைகள் :

* ஹார்டுவேர் – பயன்பாட்டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர்
வேகமும் தேவைப்படுகிறது இது மிக அதிகம்.

* (Home,Premium,Professionla,Enterprise,Ultimate)
என்ற ஒவ்வொன்றிலும் சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.

* 64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெறமுடிகிறது.

* போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட்,
மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.

* எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.

Entry Filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். குறிச்சொற்கள்: வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்.

28 டிச., 2009

டிசம்பர் 28, 2009

Send To மெனுவில் உங்கள் போல்டர்


விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும்.

சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். உங்கள் பைல்களை நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரிலேயே சேமிப்பதானால் அந்த போல்டரின் பெயரையும் Send To மெனுவில் சேர்த்து விடலாம்.

இதன் மூலம் உங்கள் வேலை இலகுவாவதுடன் மேலுமொரு விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவைத் திறந்து ஒரு போல்டரிலிருந்து இன்னுமொரு போல்டருக்கு பைலைப் பிரதி செய்யும் வேலையும் தவிர்க்கப்படுகிறது.

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :

முதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள்.

பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் திறந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம்.

பின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File - New - Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்

24 டிச., 2009

டிசம்பர் 24, 2009

விண்டோஸ் விஸ்டா/ஏழில் 50 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.


விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளமாகக் கொண்ட உங்கள் கணினியில், CD/DVD ஐ காண்பிப்பதில்லையா? டெஸ்க்டாப்பிலிருந்து  Recycle bin ஐ காணவில்லையா? Task Manager மற்றும் Registry Editor திறப்பதில்லையா?


இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய வெறும் 529 KB மட்டுமே அளவுள்ள இலவச மென்பொருள் FixWin உங்களுக்காக..,


தரவிறக்கம் செய்தபின் அதில் உள்ள Readme கோப்பை முதலில் படித்தப்பின் பயன் படுத்தவும்.


டிசம்பர் 24, 2009

விண்டோஸ் விஸ்டாவில் UAC (User Account Control) ஐ நமது வசதிக்கேற்ப மாற்றியமைக்க




நமது கணினியில் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7  இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது கான்பிகரேஷன் ஐ மாற்றியமைக்க முற்படும் பொழுதோ அல்லது புதிய மென்பொருளை நிறுவும் பொழுதோ, UAC என்கிற User Account Control எச்சரிக்கை திரை தோன்றி எரிச்சலூட்டும்.



 இது நமது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருந்தாலும், சிலருக்கு இது தொல்லை தருவதாக இருப்பதால் இதை நமது வசதிக்கு ஏற்ப எப்படி மாற்றியமைப்பது என்று பார்க்கலாம்.


விண்டோஸ் விஸ்டாவில் UAC ஐ கணினியிலிருந்து முடமாக்க 

முதலில் Control Panel சென்று சர்ச் பாக்ஸில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இப்பொழுது வலது புற பேனில் User Accounts என்பதற்கு கீழாக “Turn User Account Control (UAC) on or off” என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் “Use User Account Control (UAC)” என்ற Check Box ஐ Uncheck செய்து பின் OK கொடுங்கள். பிறகு உங்கள் கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் உங்கள் கணினியில் இனி UAC திரை வராது.



விண்டோஸ் ஏழில்  UAC வசதியை மாற்றியமைக்க 


Control Panel லில்  உள்ள சர்ச் பாரில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இனி வரும் Change User Account Control Settings லிங்கில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் ஸ்லைடரை மேலும் கீழுமாக மாற்றியமைப்பதன் மூலமாக இந்த UAC வசதியை நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.


முற்றிலுமாக ஸ்லைடரை கீழிறக்கி விட்டால் UAC முற்றிலுமாக disable ஆகிவிடும்.


கடந்த மார்ச் 2008 இல் துவங்கிய எனது இந்த ப்ளாக் இப்பொழுது ஒரு லட்சம் ஹிட்ஸ்களை தொடவிருக்கிறது. எனது பதிவுகளுக்கு ஆதரவளித்த தமிலிஷ், யூத்ஃபுல் விகடன், தமிழ்10 , திரட்டி, தட்ஸ்தமிழ், தமிழ் வெளி, Tamilars, உலவு, நியூஸ் பானை ஆகிய தளங்களுக்கும், பதிவுலகில் நானும் ஒரு பதிவர்தான் என சொல்லும் அளவுக்கு எனக்கு ஆதரவளித்து, ஊக்குவித்த சக பதிவுலக தோழர்களுக்கும், இனிய வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

14 டிச., 2009

டிசம்பர் 14, 2009

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க


விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்

( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது
பற்றிய பதிவு.
விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்
டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்
தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)
செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்
வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்
பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது
என்பதை பற்றி பார்ப்போம்.
-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ
Click செய்யவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்
Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை
உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்
Create a system repair disc
Create disc பட்டனை Click செய்யவும்.
இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )
உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி
பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்
போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button
அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல்
First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும்.
இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்
DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit
செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்
press any key to start the computer from the system repair disc
என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி
அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்
முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்
(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.
Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை

6 டிச., 2009

டிசம்பர் 06, 2009

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...





பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.



உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).


>இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.

வினாடியில் கணினி அணைந்து விடும்.

1 டிச., 2009

டிசம்பர் 01, 2009

ஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர...


நாம்  அடிக்கடி உபயோகிக்கும் ப்ரோகிராம்களை   ஸ்டார்ட் மெனுவில் கொண்டு வர Pin to Start Menu என்ற வசதி வலது கிளிக் Context menu வில் உள்ளது. ஆனால்  நாம் அடிக்கடி உபயோகிக்கும்  ஃபோல்டர்களை விண்டோஸ் XP  மற்றும் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர   என்ன செய்யலாம்.

Search Box இல் Regedit என டைப் செய்து ரிஜிஸ்டரி எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். அதில் இடது புற பேனில்

HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\
என்ற பகுதிக்குச் சென்று {a2a9545d-a0c2-42b4-9708-a0b2badd77c8} என்ற கீயை உருவாக்குங்கள், அதற்கு வேல்யு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்களுக்கு தேவைப்படும் ஃபோல்டரை Shift Key ஐ அழுத்தியபடி, வலது கிளிக் செய்து Pin to Start Menu என்பதை கிளிக் செய்தால், அது உங்கள் ஸ்டார்ட் மெனுவில் வந்து விடும்.


இந்த வசதி தேவியில்லை எனில், அந்த கீயை டெலிட் செய்தால் போதுமானது.

ரிஜிஸ்டரி எடிட்டரில் மாற்றம் செய்ய தயக்கமாக இருந்தால், கீழே உள்ள சுட்டிகளிலிருந்து, ரிஜிஸ்டரி கோப்புகளை தரவிறக்கி, தேவையானதை ரன் செய்து கொள்ளுங்கள்.

2 நவ., 2009

நவம்பர் 02, 2009

விண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகி விட்டது


இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாகி இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம். விஸ்டா வெளியாகி 33 மாதங்கள் கழித்து அடுத்த தொகுப்பு வெளியாகிறது. சென்ற மே 5ல் முழுப் பதிப்பிற்கு முந்தைய பதிப்பு பொதுமக்களுக்கென வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 ஆறுவகையான பதிப்புகளில் வெளியாகும்.

Windows 7 Starter :


ஒரே நேரத்தில் மூன்று அப்ளிகேஷன்களை மட்டுமே கையாள முடியும்.

Windows 7 Home Basic:


எழுந்துவரும் சந்தைக்கு ஓர் அடிப்படையான தொகுப்பு

Windows 7: Home Premium Edition

இதில் ஏரோ யூசர் இன்டர்பேஸ், டச் மற்றும் மீடியா சென்டர் தரப்படும்.

Windows 7 Professional:

ரிமோட் டெஸ்க் டாப் ஹோஸ்ட், மொபிலிட்டி சென்டர், பிரசன்டேஷன் மோட்.

Windows 7 Enterprise:

வால்யூம் லைசன்ஸ் மட்டுமே தரப்படும். விர்ச்சுவல் டிரைவில் இருந்து மட்டுமே பூட் செய்யப்படும். பிட் லாக்கர் உண்டு.

Windows 7 Ultimate

குறைந்த அளவி லேயே கிடைக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்துபவர்களுக்கு பதிப்பை மேம்படுத்தி விண்டோஸ் 7க்கு மாற ஆப்ஷன் தரப்படும். இதற்கென தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது குறித்த தகவல்கள் மட்டும் இனிமேல் வெளியிடப் படும் என்று தெரிகிறது.
நவம்பர் 02, 2009

விண்டோஸ் 7 இல் புதுசா என்ன இருக்கு ???



மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. 

புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.


விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது.

இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன.

இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.
64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.
ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.
ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.
மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது.

விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.

இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றுண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.

மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.

விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.
நவம்பர் 02, 2009

விண்டோஸ் 7 நேரடி இறக்கம்


மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) கடந்த வாரம் வெளியிட்டது.

விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

மாறாக அது மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரை பெற்றிருந்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது, எனவே விஸ்டாவினால் இழந்த பெயரை சரிசெய்வதற்காக புதிய ஒரு இயங்கு தளத்தை விரைவிலேயே வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு ஏறபட்டது.

இழந்த பெயரை மீட்டுக்கொள்ளவும் விண்டோஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் லினக்ஸின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறும் மேலதிக வசதிகளுடனும் உருவாக்கப் பட்டுள்ளது விண்டோஸ் 7.




விண்டோஸ் 7 இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

ISO File Download Links :
நவம்பர் 02, 2009

How to: Download and install themes in Windows 7


One of the new features introduced in Windows 7 is the use of themes to customize the system’s appearance in a very easy way. Themes enable you to personalize wallpaper, screensaver, window color and system sounds in just one click. Then, if you want, you can change small details inside the selected theme and create a new custom version of it.

Themes can be selected from the Personalization window, which you can open by right clicking anywhere on the desktop and selecting Personalize. Switching to a new theme is as easy as clicking the theme’s thumbnail. The theme will be immediately applied to your system, so you get the full preview before formally applying it. You can then click on any of the customizable elements at the bottom of the window (desktop background, window color, sounds and screensaver) and change them to suit your taste.

The best thing about themes in Windows 7 is that you’re not limited to the ones that come shipped with the operating system. You can download more from Microsoft by clicking the‘Get more themes online’ link in the Personalization window. Simply click the download button under the theme you want to use and download the .themepack file. Once it’s on your hard drive, double click it and it’ll be automatically applied – and added to the Personalization window under ‘My themes’.

Of course, Microsoft is not the only source of themes for Windows 7. A quick search on Google returns dozens of sites to download themes from and try new styles on your system, like Paul’s theme packs, the iThinkDiff collection or the themes in the IntoWindows blog. They’re as easy to install as the ones you download from Microsoft.