Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Micro Soft லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Micro Soft லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜன., 2010

ஜனவரி 25, 2010

வேர்ட்டை திறக்காமலேயே ஆங்கிலசொல்லுக்கு அர்த்தம் அறிய


வேர்ட்டில் நாம் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமும் மாற்றுச்சொல்லும் கண்டு கொள்ளலாம். ஆனால் வேர்ட்டை திறக்காமலேயே வெளியில் இருந்து ஆங்கில வார்த்தை களுக்கு சரியான  அர்த்தம் இந்த சாப்ட்வேர்  மூலம்நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். 7.5 எம்.பி.  கொள்ளளவு கொண்டஇந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். நாம் டவுண்லோடு  செய்து பின்னர் கணிணியில்இன்ஸ்டால் செய்துகொள்ள

வேண்டும். அதை இன்ஸ்டால் செய்யும்சமயம் நமக்கு  கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நமக்கு தேவையான தேசத்தின் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். நான் ஆசியா தேசத்தை தேர்வு செய்துள்ளேன். பின்னர்இன்ஸ்டால் செய்யவும். இதை செய்து முடித்ததும்  உங்களுக்கு இந்தசாப்ட்வேரானது டாக்ஸ்க்பாரில்  வந்து  அமர்நது கொள்ளும்.


இதில் உள்ள வேர்ட் வேப் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு
 கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும். 


இதில் நமக்கு அர்த்தம் தேவைபடும் வார்த்தையை
 Lookup in என்கின்றகட்டத்தில் தட்டச்சு செய்து Search
கொடுக்கவும். நான் Verify என்கின்றவார்த்தையை தட்டச்சு
 செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இந்த வார்த்தைக்கு Nearest வார்த்தைகள்  நமக்கு கிடைக்கும்.
 அதேசமயம் நமக்கு அதன் சரியான அர்த்தமும் கிடைக்கும்.
 மேலும் கீழே உள்ளSynonyms  கிடைக்கும்.


 இதில் உள்ள இதர Tab-களையும் பாருங்கள்.
The related word tabs show the following types of related 
words when available:
Synonyms
Words which mean the same in some context
e.g. close is a synonym of shut
Antonyms
Words meaning the opposite in some context
e.g. big is an antonym of little
 See Also
Mostly related word forms and compounds
e.g. cut gives see also cut off, cutter, etc. 
 Type of
Shows less specific words.
e.g. a comedy is a type of play
 Types
Shows more specific words.
e.g. flower has daisy as one of its types
 Parts
Shows words for part of an object
e.g. tree is one of the parts of a forest 
 Part of
Shows words for a collection or the whole
e.g. bumper is a part of a car
 Similar
Words with meanings that are close
e.g. big is similar to huge



இதில் உள்ள பாண்ட் அளவுகளையும் நாம் மாற்றிக் 
கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்



இதில் உள்ள வார்த்தைக்கு சரியான உச்சரிப்பை கேட்க 
இதில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ஓ.கே. கொடுத்தால்
உங்களுக்கு அதன் சரியான உச்சரிப்பு கேட்கும்.
  

இதன் Hot Key கொண்டுவர  Options சென்று Hot Key யை
கிளிக் செய்யவும்.




28 டிச., 2009

டிசம்பர் 28, 2009

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்ப

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில்(Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும்.

இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeaturesஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.

28 அக்., 2009

அக்டோபர் 28, 2009

மொபைல் சிஸ்டத்தில் தடுமாறும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தனிக்காட்டு ராஜாவாக பெர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் இருந்தாலும், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதல் இடத்தைப் பெற முடியாமல் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகிறது. இந்த சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பலமான போட்டியாளர்கள் உருவாகி வருகின்றனர்.

இதன் தொழில் நுட்பத்திற்குப் போட்டி யாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-–போன் மற்றும் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக் பெரி முதலில் இடம் பிடித்தன. அவற்றின் எளிமையை இன்னும் மைக்ரோசாப்ட் தகர்க்க முடியவில்லை.
இந்நிலையில், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர் ஆதரவாளர்-களாக அதன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வந்த மோட்டாரோலா மற்றும் பாம் தற்போது வேறு தொழில் நுட்பத்தினை- தங்கள் போன்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.


மொபைல் போன்களுக்கான ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களை ஆய்வு செய்கையில் மற்ற நிறுவனங்களின் தொழில் நுட்பம் கூடுதலான வசதிகளைத் தருவது தெரிய வரும். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சிஸ்டத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக விண்டோஸ் மொபைல் பதிப்பு 7 இதனை நிறைவேற்றும் எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால் இது கிடைக்கும் நாள் தான் இன்னும் தெரிய வில்லை. அமெரிக்காவில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 48 சதவிகிதத்திற்கும் மேலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இவ்வகையில் 19% இடத்தைப் பிடித்துள்ளது.விண்டோஸ் மொபைல் 15% மட்டுமே கொண்டுள்ளது.

இவை மட்டுமின்றி புதிய இரு ஆப்பரேட் டிங் சிஸ்டங்கள் வந்து விண்டோஸ் மொபைல் சிஸ்டத்தினை விரட்ட இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இவ்வகையில் முதலில் உள்ளது.

தற்போது 7.5% இடத்தைப் பிடித்திருக்கும் இந்த சிஸ்டம் விரைவில் இதனை 15% ஆக உயர்த்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பாம் நிறுவனத்தின் பிரீ போன் சிஸ்டம் விரைவில் 8% இடத்தைப் பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டம் மார்க்கட்டைப் பாதிக்குமா? என்ற கேள்விக்கு, எதிர்பாராத வகையில் விடை ஆம் என்றே கிடைக்கிறது. ஏனென்றால் பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை இனி மொபைல் போன்கள் பிடித்துக் கொள்ளும்.
மொபைல் போன்களின் திறன் தொடர்ந்து அனைத்து வகையிலும் உயர்ந்து வருவதால் இவை பெர்சனல் கம்ப்யூட்டர் நமக்குக் கொடுக்கும் அனைத்து வசதிகளையும் தரத் தொடங்கிவிடும்.
அப்படியானால் காலப் போக்கில் விண்டோஸ் நல்ல ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கையும் நபர்களும் குறைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது.
இதனை உணர்ந்தே மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மொபைல் திட்டத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் கூடுதலாக முதலீடு செய்து வருகிறது