World Teacher's Day - 2010

   இன்று இலங்கையில்  உள்ள பல லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் குழாம் தங்களுடைய ஆசிரியர் தினத்தை அவர்களின் பாடசாலைகளில் மிக விமர்சியாகக் கொண்டாடுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

  ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான UNESCO னால் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் - 5ஆந் திகதியன்று உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் அது நாட்டுக்கு நாடு வேறுபட்டு மற்றும் மாறுபட்டுக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.


மேலும், இதற்கான அடிப்படையாக கல்வி தத்துவவியலாளரான இந்தியாவைச் சேர்ந்த ராதாகிறிஷ்னன் அவர்களின் கொள்கை தழுவியதாக அமைந்து உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்தும் இலங்கை போன்ற நாடுகளில் இது 1994ஆம் ஆண்டு  ஓக்டோபர் - 6 பிரகடணப்படுத்தப்பட்டு மிக சிறப்பாக கொண்டாப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். அன்றிலிருந்து தான் இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் தொழில் தொடர்பான நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக அன்று ஆட்சிக்கு வந்த இலங்கை முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையாரினால் அவர்களின் பதவிக்கான பிரமாணங்கள் அமுல்படுத்தப்பட்டது என்பது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். 

தமிழில் சொல்லப்படுகின்றது. ”மாத, பிதா, குரு தெய்வம்” இங்கு குறிப்பிடப்படும் இந்த தமிழ் பழமொழி மனிதன் உலகில் தோன்றிய காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு மரபாகும். தன்னுடைய தாய், தகப்பனுக்கு அடுத்தாக இந்த குருவை நாங்கள் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று இது குறிப்பிடுகின்றது. 
மற்றும் ”குருவில்லாத வித்தை குழ் வித்தை” என்பார்கள் அதாவது நாங்கள் யாராவது ஆசானின் துணையில்லாமல் கற்றும் எந்த வகையான கல்வியும் வெறும் பெறுமதியற்றது என்பது இதன் பொருளாகும். 

எங்களுடைய நாடுகள் அன்னியர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் ஆசிரியர்களை மாணவர்கள் கடவுளாக நினைத்து அவர்களை வணங்கி அதன் பின்னர் அந்த மாணவர்களுக்கு குருக்கல் கல்வியை போதித்தார்கள் என்பது வரலாறுகள் கூறுகின்றன. 

அப்போது காணப்பட்ட ஆசிரியர் மையக்கல்வியின் ஊடாக அந்த ஆசிரியர்கள் மேலாக மதிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மையாகும். 

மேலும், இன்றைய ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை பல ஆசிரியர்களின் மன ஆதங்கத்தை நாங்கள் காணும் போது அவதானிக்க முடிகின்றது. அதாவது இன்றைய கல்வி முறை பிள்ளை மையக்கல்வியாக காணப்படுவதால் மாணவர்கள் ஆசிரியரை மதிப்பதும். கௌரவப்படுத்துவம் குறைவடைந்து வந்து கொண்டிருக்கின்றது எனலாம். இன்று உலகில் பல சிறுவர்கள் தொடர்பாக பல சட்டங்கள் இறுக்கமாக காணப்படுவதால் அவர்கனை திருத்தி சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது முயற்கொம்பாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சிறுவர் சாஸனத்தில் கையொப்பத்தை இட்டு அவர்களுக்கான சட்டவாக்கத்தின் இறுக்கமான கடிவாளத்தின் விளைவாக ஆசிரியர் மாணவர் உறவில் காணப்படும் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது என்பது பல இன்றை ஆசிரியர்களின் மன உளைச்சலாகும்.
பல அறிவு மூர்ப்புக்களை அடைந்து சென்றாலும் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்து ஒரு நாட்டுக்கு சிறந்த மற்றும் பெறுமதி மிக்க சொத்தாக ஒப்படைக்கும் பொறுப்பு ஆசிரியரிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிறந்த வொரு சமூகத்தின் தோற்றப்பட்க்கு ஆசிரியரின் பங்கு அளப்பெரியதாகும் என்பதில் யாரும் சந்தேகம் கிடையாது. 

எனவே இன்றைய இந்த ஆசிரியர் தினத்தில் நாமும் எமது மாணவர்களும் சிறந்த அறிவைப் பெற்று வளமான ஒரு வாழ்வியல் கூறுகளை படைப்போமாக என கேட்டு விடைபெறுகிறேன்.


ஆக்கம் 
அ.ம.தாஹா நழீம் - 
இலங்கை -2010.10.06



கருத்துரையிடுக