உலகில் மனிதனுடைய பல்வேறு முயற்சிகளுக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன. அவன் நாளாந்தம் நம்ப முடியாத பல்வேறுபட்ட விடயங்களை நிகழ்த்தி வருகின்றான் அவனது நடவடிக்கைகள் எங்களால் நம்வே முடியாமல் உள்ளது. இந்த வகையிலும் சிலி நாட்டில் நடந்த சம்பவம் யாரும் நம்பமுடியாத மனிதனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாடு தெரியாமல் இல்லை ஏனெனில் பல தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள் அத்துடன் இந்த நாட்டில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அந்த நாட்டின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சின்ன நாட்டில் அடிக்கடி பல பல விநோனதமான சம்பவங்கள் நடப்பது இயல்பு தான்.
நிலக்கறி அகழ்வு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வரமுடியாமல் அங்கே தவித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை இலாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார்கள் என்பது கேட்கே எங்களால் நம்ப முடியாமல் இருக்கிறது.
010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.
2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.
இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.
2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பு, மனிதாபிமானம் இலங்கை போன்ற நாடுகளில் பற்றாக்குறைவாக இருப்பது தான் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும், 2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இவ்வாறு அதிசயக்கும் வகையில் இந்த தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு உயர் காக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கேட்கும் போது நமக்கு நிச்சயமாக சந்தோஷமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
2 கருத்துகள்
3 மாதமாகும் என்று முதலில் அறிவித்து பிறகு இவ்வளவு குருகிய காலத்துக்குள் அவர்களை வெளியே கொண்டுவந்தது அதிசியம் தான்.
பதிலளிநீக்குமேலும் உங்களுடைய வாழ்ததுக்கள் வர எதிர்பார்க்கிறேன்
பதிலளிநீக்குகருத்துரையிடுக