இலங்கையில் உலக கின்னஸ் தேனீர் சாதனை!

உலகில் பல்வேறுபட்ட நாடுகளில் பல சாதனைகளை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல சாதனைகளை நிகழ்த்தி வந்த காலம் மாறி இப்போது அதுவும் கின்னஸ் சாதனை புரிய முன்வந்துள்ளது என்பதையிட்டு நானும் ஒரு இலங்கையன் என்ற வகையில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறேன்.

உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னனில் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

 எனவே தான் ஒரு இராட்ச தேனீர் கோப்பையை உருவாக்கி அதில் 4000 லீற்றர் தேனீரை நிரப்பி இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு இலங்கையர் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். 

இது இலங்கையில்  தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்து  இந்த தேனீர் சாதனையில் ...............

தண்ணீர் - 4000 லீற்றர்
தேயிலை - 65 கிலோகிறாம் 
சீனி  125 கிலோகிறாம் 
வீவா பவுடர் - 850 கிலோகிறாம் 

 மேற்காட்டிய பொருட்களின் இணைப்புடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. 

  இந்த சாதனையை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி  அமெரிக்க, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையம் நிகழ்த்தியிருந்தது இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.


   இதனை செய்வதற்காக விசேடமாக 10 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்ட கோப்பை உருவாக்கப்பட்டிருந்தது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களினால் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. தேநீரைச் சூடாக வைத்திருக்க, மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

பலர் இங்கு வந்து இந்த தேனீரை குடித்து அவர்களும் இந்த சாதைனை பெறுமையை தட்டிச் சென்றனர்.
 
   கிளாக்சோஸ் மித் கிளையின் என்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  இந்த நிறுவனத்தின் வீவா பவுடரை விளம்பரம் செய்கின்ற  JWTea நிறுவனத்தினர் இந்த இராட்சத கோப்பை தேனீர் சாதனையை நிகழ்த்திருக்கின்றனர். 

  இது உலோகத்தினால் உருவாக்கப்பட்ட கோப்பையாகும் 4500லீற்றர் கொள்ளவு கொண்ட இந்த இராட்சத கோப்பையில் 4000 லீற்றரளவில் தேனீர் உற்றி இந்த கின்னஸ் சாதனை புரியப்பட்டது. 

   கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது. 

மேலும் இங்கே கிளிக் பண்ணுங்க..........
நன்றி



கருத்துரையிடுக