உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??

உங்கள் கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் பயன்படும்.

இதை முதலில் சரி பாருங்கள்

கணனிக்கு மின்சாரம் வருகின்றதா என்று பாருங்கள். குறிப்பாக நீங்கள் இணைத்திருக்கும் Power Socket க்கு மின்சாரம் வருகின்றதா எனபதை வேறு சாதனங்களை இணைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைவிட கணனியின் பின் பக்கத்திலும் ஒரு ஆழி இருக்கும் அதுவும் இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

ஒரு பீப் மட்டும் கேட்குது

வெவ்வேறு பயோஸ்களில் வெவ்வேறு முறைகளைக் கையாள்வர். ஆனால் பொதுவாக ஒரு பீப் சத்தம் கேட்டது என்றால் உங்கள் கணனியில் RAM ல் பழுது இருக்கலாம். சில பயோஸ்களில் இது 3 பீப்பாகவும் இருக்கும்.

1 நீண்ட பீப் 2 குறுகிய பீப்

உங்கள் வீடியோ கார்ட்டில் பிரைச்சனை உள்ளது.
மேலும் பல பீப் கோடுகளை அறிந்து கொள்ளுங்கள்

படிமுறைகள்

  1. மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதா என்று பரீட்சிக்கவும்
  2. Power, Re-set பொத்தான்கள் செருகுப் பட்டுள்ளனவா என்று பரீட்சிக்கவும்
  3. மொனிட்டர் பவர் பட்டன் ஆன் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பரீட்சிக்கவும்.
  4. brightness and contrast போன்றவை கணனி திரையில் சரியாக இருக்கின்றதா என்பதையும் பார்க்கவும்.
  5. கணனியில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் களற்றிவிட்டு (மொனிட்டர் மட்டும் இருக்க) மீள கணனியை இயக்கிப் பாருங்கள். கணனி இயங்கினால் ஒவ்வொரு சாதனமாகப் பொருத்தி எந்த சாதனம் பிரைச்சனை தருகின்றது என்று அறிந்து கொள்ளுங்கள்.

RAM என்றால் என்ன செய்யலாம்?

ramஅனேகம் இந்த முறையைத்தான் பல Hardware திருத்தும் இடங்களிலும் பாவிப்பர். அதாவது கணனியின் வெளி உறையை அகற்றி உள்ளே உங்கள் றாம் மெமரியை களற்றுங்கள். பின்னர் கொஞ்சம் ஓடிக்கலோன் அல்லது ஏதும் சென்ட் (அல்ககோல்) தூவி ஒரு சுத்தமான துணியால் முன்னுள்ள உலோகப் பகுதியை துடைக்கவும். பின்னர் நன்கு உலர்ந்த பின்னர் மீள கணனியில் பொருத்தி கணனியை மீள இயக்கவும்.
பல வேளைகளில் மேலே குறிப்பிட்ட முறை பயன்தரக்கூடும் ஆனால் எப்போதும் பலன் தரும் என்று கூறுவதற்கில்லை.

VGA Card என்றால் என்ன செய்யலாம்

அனேகம் கணனிகள் இப்போது உள்ளமைந்த வீ.ஜி.ஏ கார்ட்டுகளுடன் வருகின்றது. ஆகவே கணனி ஆரம்பிக்கும் போது F2, Del, அல்லது உங்கள் மதர்போர்ட் ஆதரிக்கும் விசையை தட்டி பயோஸ் செல்லுங்கள் அங்கே உங்கள் உள்ளமைந்த VGA கார்ட்டை உயிர்ப்பூட்டுங்கள். பின்னர் மொனிட்டர் கேபிளை களட்டி ஒன் போர்ட் விஜிஏ வில் செருகி கணனியை மீள உயிர்ப்பூட்டுங்கள். புது கார்ட் வாங்கும் வரைக்கும் இவ்வாறு காலம் ஒட்டலாம்.
இங்கு நான் அறியத் தந்தவை வெறும் ஆரம்ப படிநிலை வழிகாட்டிதான். இதைவிட அதிகமாக அறிய இணையத்தின் துணையை நீங்கள் நாடலாம். அல்லது பயிற்றுவிக்கப்பட்ட ஒரு Hardware Technician துணையை நாடலாம். ஆர்வ கோளாரில் புரியாத விடையங்களில் கையைப் போட்டு அனைத்தையும் கெடுக்காமல் இருப்பது நலம் என்பது அடியேனில் கருத்து.
ஏதும் பிழை இருந்தால் அல்லுது எதையும் விட்டிருந்தால் பின்னூட்டப்பகுதியில் அறியத்தாருங்கள்.


கருத்துரையிடுக