Disk Defragmenter என்றால் என்ன?



டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு படுத்தலாம்.

ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறு சிறு பகுதிகளாக உடைக்கின்றன. பின்னர் அந்த பைலின் பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில் அங்கொன்று இங்கொன்றாக சேமிக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட பைல்களின் சிதறள்களை ப்ரேக்மன்ட்ஸ் (fragments) என்ப்படுகிறது.

ஒரு பைலை சேமிக்கும் போதே அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் எந்தெந்த இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்களையும் இயங்கு தளம் பதிந்து கொள்ளும். FAT (File Allocation Table) எனப்படும் பைல் பகிர்வு அட்டவணை மூலம் இந்த விவரங்களைப் பதிந்து கொள்கின்றன. FAT16, FAT32 மற்றும் NTFS என்பன விண்டோஸில் பயன்படுத்தப்படும் பைல் சேமிப்பு முறைகளாகும். இயங்கு தளம் சேமித்த ஒரு பைலை மீண்டும் அணுக முற்படும் போது உரிய பைல் சிஸ்டம் மூலம் அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் அல்லது பாட்டிசனில் எந்த க்ளஸ்டரில் (Cluster) எந்த செக்டரில் (Sector) உள்ளன என கண்டறிந்து கொள்ளும்.
பைல்களை அவ்வப்போது சேமிக்கப்படும்போதும், மென்பொருள்களை நிறுவும் போதும் நீக்கப்படும் போதும் ஹாட் டிஸ்கில் டேட்டா சேமிக்கப்படும் இடங்களில் ஏராளமான இடை வெளிகள் உருவாகின்றன. ஹாட் டிஸ்கில் வேவ்வேறு பகுதிகளில் டேட்டா சிறு சிறு பகுதிகளாக சேமிக்கப்படும் போது ஒரு பைலைத் திறப்பதற்கு கணினி இன்னும் கடினமாக செயற்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக கணினியின் வேகத்தில் மந்த நிலை உருவாகும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதன் மூலம் சேமிக்கப்பட்ட டேட்டாவை ஹாட் டிஸ்கில் மீள ஒழுங்கு செய்யப்பட்டு பைகளுக்கிடையிலான இடை வெளிகள் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயங்கு தளம் ஒரு பைலை மிகக் குறுகிய நேரத்தில் அணுக முடிகிறது.
உதாரணமாக ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை புத்தகங்களாகவும் ஹாட் டிஸ்கை புத்தகங்களை அடுக்கி வைக்கும் ஒரு புத்தக அல்மாரியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அல்மாரியில் ஒரு தட்டில் புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. அந்தத் தட்டிலிருந்து மூன்று சிறிய புத்தகங்கள் அகற்றப்படுகின்றன. (மூன்று சிறிய பைல்கள் ஹாட் டிஸ்கிலிருந்து அழிக்கப்படுகின்றன) அப்போது அங்கு சிறிய மூன்று இடை வெளிகள் உருவாகும். பிறகு அவ்விடத்தில் அளவில் பெரிய ஒரு புத்தகத்தை வைக்க நினைக்கிறீர்கள். எனினும் உங்களால் முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் இருந்த இடத்தில் அதனை வைக்க முடியாதிருக்கும். பதிலாக அதனை வேறொரு தட்டிலேயே வைக்க வேண்டும். (ஹாட் டிஸ்கில் வேறொரு இடத்தில் பதியப்பட வேண்டும்) அல்லது புத்தகங்களை நகர்த்தி மூன்று சிறிய இடை வெளிகளை ஒன்றாக்கி ஒரு பெரிய இடை வெளியை உருவாக்குவதன் மூலம் அந்த பெரிய புத்தகத்தை வைக்கலாம் (பெரிய பைலை ஹாட் டிஸ்கில் பதியலாம்) இங்கு புத்தகங்களுக்கிடையில் இடை வெளியைக் குறைப்பது போன்றே ஹாட் டிஸ்கில் பைல்களுக்கிடையில் இடை வெளியைக் குறைத்து ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக ஒழுங்கு படுத்தப்படுவதையே டிப்ரேக்மண்ட் (Defragment) எனப்படுகிறது.
ஹாட் டிஸ்கை குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது டிப்ரேக்மண்ட் செய்தல் நல்லது. எனினும் டிப்ரேக்மண்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஹாட் டிஸ்கின் அளவைப் பொறுத்து அந்த நேரம் வேறுபடும்.
ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றாம் தரப்பு மென்பொருள்கள் எதனையும் பயன் படுத்த வேண்டியதில்லை.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
Start → Programs → Accessories → System Tools → Disk Defragmenter தெரிவு செய்யுங்கள். அப்போது Disk Defragmenter டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உரிய ட்ரைவைத் தெரிவு செய்து Analyze பட்டனில் முதலில் க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டிய தேவையுள்ளதா எனக் கண்டறியலாம். அதன் பின்னர் டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டியிருப்பின் Defragment பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
எனினும் விண்டோஸ் விஸ்டா பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யும் செயற்பாட்டை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் இயங்கு தளம் தானாகவே செயற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கணினிப் பயனர் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதைப் பற்றிக் கவலையே பட வேண்டாம். அதனை விண்டோஸே கவனித்துக் கொள்ளும். அதேபோல் மேல் நிலைப் பயனர்கள் கமாண்ட் ப்ரொம்ப்ட் மூலம் டிப்ரேக்மண்ட் செய்யும் வசதியும் விஸ்டாவில் உள்ளது.

கருத்துரையிடுக