Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?
நாம் கணணியில் தகவல்களை பாதுகாத்து வைப்பதற்கு மென்பொருட்களை பயன்படுத்தி ரகசிய குறியீடுகள் ( pass word ) மூலம் பாதுகாத்து வைத்தோ அல்லது மறைத்து (hide) வைத்தோ பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில் partion செய்யப்பட்ட hard disk இன் ஒருபகுதியை எமக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்த பின்பு மறைத்து வைக்கலாம். அதனை எவ்வாறு செய்வது என்று பின்வரும் செய்முறைகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் Run window இற்கு சென்று cmd என டைப் செய்து என்டர் தட்டவும். பின்பு வரும் task window இல் diskpartஎன டைப் செய்து என்டர் தட்டவும்.பின்னர் list volume என டைப் செய்து என்டர் செய்யவும். உடனே உங்கள் கணணியின் Drive letters,அதற்குரிய numbers மற்றும் அவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வரிசை படுத்தப்படும். உங்களுக்கு எந்த drive ஐ மறைக்க வேண்டுமோ அதனை தெரிவு செய்யselect volume என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு volumeஇற்கான இலக்கத்தை இட்டு என்டர் தட்டவும்.அந்த வகையில் partion செய்யப்பட்ட hard disk இன் ஒருபகுதியை எமக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்த பின்பு மறைத்து வைக்கலாம். அதனை எவ்வாறு செய்வது என்று பின்வரும் செய்முறைகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
e.g :- select volume 3
பின்னர் remove என என்டர் பண்ணவும்.
அப்பொழுது நீங்கள் தெரிவு செய்த drive மறைந்திருப்பதை my computer சென்று உறுதி செய்யலாம். மீண்டும் மறைத்து வைக்கப்பட்ட drive ஐ பழைய நிலைக்கு கொண்டு வர இதே படி முறையை பின்பற்றி remove இற்கு பதிலாக assign என என்டர் தட்டவும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக