நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் MS Office தொகுப்பாகும். இதில் உள்ள எக்ஸல் மென்பொருளில் Rank function ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
முதலில் ஒரு எக்ஸல் ஷீட்டில் ஒரு அட்டவணையை பூர்த்தி செய்து கொள்ளவும். Rank function ஒரு வரிசையில் உள்ள எண்களில் எது பெரியது மற்றும் எது சிறியது என காட்ட உதவுகிறது. இந்த சூத்திரத்தை(formula) வைத்து ஒரு வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் வரிசையை அறியலாம், அலுவலகத்தில் அதிக சம்பளம் மற்றும் விற்பனையில் அதிகம் விற்பனை செய்தவரின் தகவல்களை வரிசைபடுத்தலாம்.
முதலில் சூத்திரத்தை காண்போம்:
= RANK ( Number, Ref, [Order] )
Number
- இதில் ஒரு எண்ணையோ அல்லது எண் அடங்கிய ஒரு செல்லின் முகவரியையோ கொடுக்கலாம். கண்டிப்பாக எண்ணாக இருத்தல் வேண்டும்.
Ref
- இது ஒட்டுமொத்த மதிப்புகள் அடங்கியுள்ள செல்களின் reference ஐ கொடுக்கவேண்டும். இதில் அடங்கியுள்ள எண்களை தான் நாம் வரிசைபடுத்தப் போகிறோம்.
Order
- இதில் 0(Descending) என கொடுத்தால் அதிகமான மதிப்பை முதல் ரேங்காகவும், 1(Ascending) என கொடுத்தால் குறைவான மதிப்பை முதல் ரேங்காகவும் மதிப்பிடும். இந்த பிரிவு optional ஆகும். அதாவது இதற்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் தானாகவே 0(Descending) என எடுத்துக்கொள்ளும்.
கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்
இதில் H ரோவில் மொத்த மதிப்பெண்களையும் I ரோவில் அவற்றிற்கான ரேங்கும் இருக்கிறது. முதலில் நான் H2 என்கிற செல்லில் =rank( என அடித்து H2 என கொடுத்துள்ளேன் இங்கு 301 என்கிற எண்ணை அது குறிக்கிறது. அடுத்து ,(comma) வைத்து அடுத்த Ref மதிப்பில் H2 விலிருந்து H9 வரை செலக்ட் செய்துள்ளேன்.
இங்கு நீங்கள் நான் கொடுத்துள்ள சூத்திரத்தில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் H2 மற்றும் H9 இவற்றிற்கு நடுவில் $ ஐ கொடுத்துள்ளேன். இது நீங்கள் மற்ற செல்களுக்கு ரேங்கை பயன்படுத்தும்போது நாம் ஒவ்வொரு செல்லிற்கும் சூத்திரத்தை தட்டச்சு செய்யமாட்டோம் மாறாக முதல் செல்லில் தட்டச்சு செய்து பின் அதன் வலது மூலையில் உள்ள + குறியை மவுஸினால் டிராக் செய்து நமக்கு தேவையான செல் வரை இழுத்துக்கொண்டு வந்து விடுவோம். அப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு செல்லிர்க்கும் உள்ள reference இன் மதிப்பு மாறுபடும். இதை நீங்கள்($) டாலர் குறியை பயன்படுத்தாத போது இதன் அவசியம் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.
இறுதியாக உங்களுடைய ரேங்கின் மதிப்பு Ascending அல்லது Descending ஆக தரவேண்டும். உதாரணமாக இந்த அட்டவணையில் Order 0 என கொடுத்தால் 409 மதிப்பு பெற்ற Prem இன் ரேங் 1 என வரும். Order 1 என கொடுத்தால் 298 மதிப்பு பெற்ற Arun இன் ரேங் 1 என வரும்.
இந்த லிங்கை கிளிக் செய்து இந்த எக்ஸல் கோப்பினை பதிவிறக்கிக் கொள்ளவும்.
இன்னும் ஏதாவது விளக்கம் தேவைபட்டால் க்ருத்துரையிடவும்.
=RANK(H2,H$2,H$8)
கருத்துரையிடுக
கருத்துரையிடுக