இனி அதில் படத்தில் காண்பித்துள்ளது போல டிரைவில் வலது கிளிக்கில் Login As என்பதில் கிளிக்கவும் இனி உங்களுக்கு ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் உங்களின் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் தேவையானால் அதில் Auto Login கட்டத்தில் ஒரு மார்க் குறியீடு ஏற்படுத்துவதின் மூலம் Login பிரச்சினையை தவிர்க்கலாம்.
இதன் அளவு 7.30GB ஆகும் இதில் என்ன ஒரு விஷேசம் நம் கணினியில் வந்து அமர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு மற்றபடி நம் கணினியில் இருக்கும் வன்தட்டோடு இதன் வேகத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது வேகம் சிறப்பாக இல்லை ஆனாலும் பயன்படுத்துவதற்க்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது இந்த முறையில் ஒன்றை மட்டுமே இனைக்க முடியும்.
இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் தகவல்களை இதில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கு சென்றாலும் உங்களால் எளிதாக பயன்படுத்த முடியும் மேலும் இதனை பயன்படுத்த அவசியம் இனைய இனைப்பு வேண்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக