யாஹூ, ஹாட்மெயில் போன்ற இலவச இமெயில் புரோகிராம்களைப் பயன்படுத்திப் பின் ஜிமெயிலுக்கு மாறியுள்ளவரா நீங்கள்! அப்படியானால், அதில் உள்ள மெயில்களையும், காண்டாக்ட் முகவரிகளையும் ஜிமெயிலுக்கு மாற்ற எண்ணுவீர்கள்.
மெயில்களை மாற்றாவிட்டாலும், முகவரிகளையாவது நிச்சயம் மாற்ற ஆசைப்படுவீர்கள். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று இங்கு காணலாம்.
ஜிமெயில் தரும் எண்ணற்ற இலவச இமெயில் வசதிகளைப் பற்றி, இந்த மலரில் நிறைய தகவல்களை உங்களுக்குத் தந்துள்ளோம். சிலர் தங்களின் நிறுவன சர்வர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் வசதி இருந்தாலும் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கிப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஏனென்றால், இமெயில் வசதிகள் மட்டுமின்றி, கூகுள் தரும் மற்ற எந்த வசதியைப் பயன்படுத்தவும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்று தேவைப்படுகிறது.
ஜிமெயில் தரும் கட்டற்ற ஸ்டோரிங் வசதி, ஸ்பாம் மெயில் தடுப்பு, வைரஸ் தடுப்பு ஆகியவை மற்ற இமெயில் புரோகிராம்களைக் காட்டிலும் சிறப்பானவையாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். இனி, மற்ற மெயில் அக்கவுண்ட்களிலிருந்து டேட்டாவினை எப்படி ஜிமெயிலுக்கு மாற்றுவது எனக் காணலாம்.
மற்ற மெயில் அக்கவுண்ட்டிலிருந்து மட்டுமின்றி, நீங்கள் வைத்திருக்கும் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, இன்னொரு ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கும் மெயில்களையும், முகவரிகளையும் மாற்றலாம்.
பி.ஓ.பி.3 மெயில் வசதியினை வழங்கும், எந்த மெயில் சர்வீஸ் தரும் அமைப்பிலிருந்தும் உங்கள் மெயில்களை ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு மாற்றலாம்.
முதலில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஜிமெயில் விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இது Sign Out இடத்திற்கு அருகே இருக்கும். பின்னர் கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில் Accounts and Import என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
இங்கு Import mail and contacts என்ற பிரிவில் Import mail and contacts என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பின்னர் எந்த இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து மெயில்களையும் முகவரிகளையும் மாற்ற வேண்டுமோ, அந்த இமெயில் முகவரியை டைப் செய்திடவும். அடுத்து Continue என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு பழைய அக்கவுண்ட்டிலிருந்து எந்த வகை டேட்டாவினை மாற்ற வேண்டும் என பல பிரிவுகள் இருக்கும். இவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையோ அவற்றை மட்டும் செக் செய்திடும்படி அமைக்கவும்.
பழைய இமெயில் முகவரிக்கு வரும் மெயில்களை, இன்னும் 30 நாட்களுக்கு ஜிமெயிலுக்கு அனுப்பப்பட வேண்டாம் என எண்ணினால், Import new mail for next 30 days என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். உங்கள் விருப்பத் தேர்வுகள் அனைத்தையும் முடித்தவுடன் Start import என்பதில் கிளிக் செய்திடவும்.
பின் OK கிளிக் செய்து முடிக்கவும். பின்னணியில் உடனே இதற்கான வேலை தொடங்கப்படும். நீங்கள் மாறுதலுக்குத்தேவை எனக் கொடுத்த அனைத்தும் ஜிமெயிலுக்குக் கொண்டு வரப்படும். நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஏன் வெளியே கூட வரலாம். ஆனால் நீங்கள் செட் செய்தபடி வேலை முடிக்கப்படும்.
ஆனால் உடனே உங்கள் மெயில் அனைத்தும் வந்துவிட்டதா என்று சோதனை செய்து, இல்லை என்றால் அவ்வளவுதானா? என்று ஆதங்கப்பட வேண்டாம். இந்த செயல்பாடு உடனேயும் முடியலாம், இரண்டு நாட்களிலும் முடியலாம். ஆனால் எவ்வளவு தூரம் இந்த இம்போர்ட் வேலை நடந்து முடிந்திருக்கிறது என்று அறிய, Settings சென்று Accounts and Import என்ற டேப்பில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை இந்த மெயில்கள் மற்றும் பிற தகவல்கள் ஜிமெயிலுக்கு வர வேண்டாம் என எண்ணினால், மேலே சொன்னபடி சென்று Import mail and contacts என்ற இடத்தை அடைந்து, அங்கே உள்ள stop பட்டனில் கிளிக் செய்திடவும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக