Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் எமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி எமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன்.
முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.
Start-->>Accesories-->>Command prompt
அல்லது
Start-->>Run இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.
கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
1.கட்டளை: systeminfo
கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2. கட்டளை: driverquery
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
3. கட்டளை: subst W: C:\windows
4. கட்டளை: tasklist
கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.
5.கட்டளை: ipconfig /all
உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
6. கட்டளை: net user
கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும
14 ஜூன், 2010
கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.
Recommended Articles
- MS DOS commant
MS-DOS - அறிந்ததும் அறியாததும் !Aug 24, 2010
எம்.எஸ்.டொஸ் என்பது தனிநபர் கணினிகளுக்காக ஆரம்ப காலத்தில் அறிமுகமான ஒரு இயங்கு தளமாகும். Microsoft Disk Operating System என்பதன் சுருக்கமே MS-DOS IB...
- MS DOS commant
கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில பயனுள்ள Command Prompt கட்டளைகள்.Jun 14, 2010
Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt அன்னது எ...
Newer Article
உங்கள் புகைப்படங்களுக்கு திகதி, பெயர் விபரம் போட்டுக் கொள்ள
Older Article
கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி
Tagged In:
MS DOS commant
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக