கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

சமையல் அறையில் அஞ்சறை பெட்டி என்று ஒன்று இருக்கும். அதில் கடுகு.சீரகம்,மிளகு,வெந்தயம்,மிளகா,உளுத்தம் பருப்பு,மஞ்சள் துர்ள் என எல்லாம் தனிதனி கிண்ணங்களி்ல் இருக்கும். தேவையானதை எடுத்து சமையலின் போது பயன்படுத்திக்கொள்ளுவார்கள். (என்னடா இவன்...திடீரென்று சமையல் குறிப்பு சொல்கின்றான் என எண்ணவேண்டாம்) சமையல் அறைக்கு அஞ்சறை பெட்டி எவ்வளவு முக்கியமோ அதைப்போல கம்யூட்டருக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும்.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இது இலவச சாப்ட்வேர் ஆகும்.இதை கணிணியில நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்எந்தவீடியோவையும்வேண்டியபார்மெட்டுக்குஎளிதில்
மாற்றிகொள்ளலாம்.ஆடியோவையும்அதுபோலவேண்டிய
பார்மெட்டுக்குமாற்றிக்கொள்ளலாம். போட்டோக்களை ஒரு பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டிற்கு மாற்றிக்
கொள்ளலாம். டிவிடியிலிருந்து வீடியோவாக மாற்றலாம்.
 ஆடியோ பைல்களைஎம்.பி.3 பாடல்களாக மாற்றிக்
கொள்ளலாம்.வீடியோ கட்டர், ஆடியோ கட்டர்,வீடியோ
 ஜாயினர்.ஆடியொ ஜாயினர், வீடியோஆடியோ மிக்ஸிங் 
என இதில் உள்ள பயன்கள் மிகமிக அதிகம்செல்போன்
 மாடலை தெரிவித்தால் அதற்கான வீடியோபதிவை
 இதில மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை
 பாருங்கள்.
Convert music CD to MP3,WMA,OGG,AAC.
Convert video DVD to MP4,3GP,AVI,WMV..
இதி்ல் வாட்டர் மார்க் செய்யும் வசதியும் உள்ளது.வீடியோவை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற Add File கிளிக் செய்து டிரைவில் உள்ள வீடியோவை கிளிக்செய்து சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யவும். 
இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்தால் Convert ஆகி நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக