உங்கள் புகைப்படங்களுக்கு திகதி, பெயர் விபரம் போட்டுக் கொள்ள

சில போட்டோக்களில் அந்த புகைப்படம் எடுத்த
 தேதி அல்லது அந்த புகைப்படம் பற்றிய சிறு குறிப்பு 
எழுதிவைத்தால் நன்றாக இருக்கும்.ஆனால் அதற்கு
 போட்டாஷாப் தேவை.ஆனால் போட்டோஷாப்
 உதவியில்லாமல் நமது புகைப்படங்களில் பெயர்
 மற்றும் தேதியை இந்த சாப்ட்வேர் மூலம் கொண்டு
வரலாம்.முதலி்ல் இதனை பதிவிறக்க இங்கு கிளிக் 
செய்யவும்.800 கே.பி. கொள்ளளவு தான் இது. இதனை
 பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும்
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்.ஆகும்.
இதில் இடதுபக்க மூலையில் உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும்.அதில் புகைப்படங்கள் உள்ள டிரைவை தேர்வு செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் புகைப்படத்தை தேர்வு செய்தால் வலதுபக்கத்தில் புகைப்படம் தேர்வாகும். இதில் அதன் ஆறு பக்கங்களிலும் ரேடியோ பட்டன் இருக்கும். அதில நீங்கள் எதை கிளிக் செய்கின்றீர்களோ அந்த இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரோ - தேதியோ கொண்டுவரலாம். அதைப்போல் Signature என்பதின் கீழே உள்ள தேதியை தேர்வு செய்தால் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி தானாக வரும். அதுஇல்லாமல் நீங்கள் உங்கள் பெயரையோ அல்லது புகைப்படத்தை பற்றிய குறிப்பையோ குறிப்பிட விரும்பினால் Your Test என்கின்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து கீழே உள்ள பாண்ட் மற்றும் அளவு மற்றும் நிறங்களை தேவைக்கு ஏற்றவாறு கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதில் ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது. மாற்றங்கள் வேண்டுமானால் ப்ரிவியு பார்த்து செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

பயன்படுத்திப்பாருங்கள்.கரு்த்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

கருத்துரையிடுக