தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்





அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Playerமூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops

2 கருத்துகள்

  1. அருமையான பதிவு, தொடர்ந்து தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் உபயோகமுள்ள ஒரு அற்புதமான பதிவு. தொடரட்டும் உங்கள் அரிய பணி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக