Google மூலம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள



இன்று நாளாந்தம் தொழில்நுட்ப புரட்சி விரிவடைந்து கொண்டு செல்லும் வேகத்திற்கு அதனைப் பயன்படுத்தும் பயனாளார்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் தினறுகின்றனர். நான் கடந்த மூன்று வாரமாக கனடாவிற்கு முழுமையான இலவசமாக எந்த தடைகளுமில்லாமல் பேசுவதற்காக தளங்களையும் தேடி தேடி அலைந்து ஓர் இரு தளங்கள் மாத்திரமே கிடைத்தன். ஆனால் அவை கூட பல கட்டுப்பாடுகளுடன் (அமெரிக்கா மற்றும் கனடா). இன்று தங்களது துாரத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசிக்  கொள்வதில் பல சிரமங்களை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் குறைந்தளவான வருமானங்களைப் பெறும் வசதிகுறைந்த மக்களால் அதற்கான செலவினைத்தை ஈடுகட்ட முடியாமல்  தவித்துக் கொண்டிருந்தன.

இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் டிஜிட்டல் புரட்சி அதற்கு பயன்தரும் வகையிலும், Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியானது இன்று உலகில் எல்லா நிறுவனங்களையும் கீழே புறம் தள்ளி விட்டு தங்களுடைய சேவை உங்களால் மிஞ்சவோ, அது பற்றி கெஞ்சவோ முடியாது என்ற தோரணையில் அவர்களின் வளர்ச்சியும் சேவையும் எல்லைகள் போட்டு கூறமுடியாதளவு காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

இன்று உலகில் காணப்படுகின்ற தேடுதல் பொறியில் கூக்குள் நிறுவனத்தின் தேடுதல் பொறிக்கு இணையாக எந்த நிறுவனமும் நின்று நிலைக்க முடியாது. 

நான் நினைக்கிறேன் இன்று கூக்குள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலுகையில் மூலம் உலகில் உள்ள பலகோடி மக்கள் நன்மை அடைவர். அத்துடன் எங்கள் போன்ற குறைவிருத்தி நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இதன் மூலம் கூடுதலான பயன பெற்றுக் கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமுல்லை.

நான் கனடாவில் உள்ள எனது சகோதரிக்கு இந்த கூக்குளின் இலவச தொலைபேசி இணைப்பு வசதியுடாக அழைப்பினைத் தொடுத்து ஒரு மணித்தியாலங்கள் வரை பேசிப்பார்த்தேன். எந்த வகையான குறைவுமில்லாமல் தெளிவான குரல் பரிமாறல், இரைச்சல் இல்லை, வேகமாக குரல் பரிமாறல் போன்ற  சேவையினைப் பெற்றுக் கொள்வது மாத்திரமல்லாமல் ஏனைய நாடுகளுக்கும் மிகக்குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கு இது வாய்ப்பளித்துள்ளது என்பது அடுத்த மையில் கல்லாகும். 

இதற்கு நீங்கள் உடனடியாக ஒரு ஜீமையில் கணக்கினைத் திறந்து உங்கள் உறவினர்களுடன் விடிய விடிய பேசலாம்.

நான் கூறியதை நீங்களும் செய்து தான் பாருங்களென்.


பிடித்திருந்தால் எனக்கு உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள் 




மற்றும் ஏனைய நாடுகளுக்கான கட்டண விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்





2 கருத்துகள்

  1. இந்தியாவில் இருந்து ஓமானுக்கு ஏர் டெல் - வீட்டு பேசியில் இருந்து 10 ரூபாய் நிமிடத்துக்கு அதுவே கூகிளில் 12 ரூபாய் (சுமாராக)ஆகிறது.

    பதிலளிநீக்கு
  2. ஓரிரு விதிவிலக்கு இருக்கத்தான் செய்யும் இருந்தும் பல்வேறு நாடுகளுக்கு இலாபகரமான அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு 15.00 ஆனால் அது முழுமையாக இலவசமாக வழங்கிறது.
    நன்றி உங்கள் இடுகைக்கு நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக