கோப்புகளை பகிர்வதற்கு


நமது நண்பர்களோடு கோப்புகளைப் பகிர்வதற்கு நாம் என்ன செய்வோம் ? மின்அஞ்சலில் அனுப்புவோம்அதற்கும் ஒரு அளவு உள்ளது.

அதற்கு மேலும் உள்ள கோப்புகளைப் பகிர்வதற்கு பின் வரும்வலைப்பக்கங்கள் உதவியாக இருக்கும்.

www.rapidshare.com
www.4shared.com

இந்த வலைப்பக்கங்களிலும் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளனஅதாவதுபதிவிறக்கம் செய்யும் போது நிறுத்தி திரும்ப ஆரம்பிக்க முடியாது.பதிவிறக்கம் செய்யும் வேகத்தில் கட்டுப்பாடு மற்றும் பல.

அதனால் ஓரளவிற்கு மேல் இதை பயன் படுத்த முடியாதுஅல்லது அந்தவலைப்பக்கத்திற்கு பணம் செலுத்தி அந்த வசதியைப் பெறலாம்.

இந்த கட்டுப்பாடுகளைத் தகர்ந்து எறிவதற்கு வந்த மென் பொருள் தான் " Torrent ". இதை P2P file sharing என்று பரவலாக அறியப்படுகிறது.

இதற்கும் ஏராளமான மென் பொருள் தொகுப்புகள் வந்து விட்டாலும் நாம்பார்க்கப்போவது "Bit torrent" மென்பொருள் பற்றி.








இதன் மூலம் ஒரு torrent எனும் ஒரு சிறிய கோப்பை தயார் செய்துநண்பர்களுக்கு அனுப்பி விட்டால் இருவரும் ஆன்லைன் இல் இருக்கும் போதுகோப்புகளைப் பகிர்வு செய்ய முடியும்.

நாம் விரும்பும் கோப்பை பகிர்வதற்கு என்று ஏராளமான வலைப்பக்கங்கள்உள்ளனஅவற்றில் எதாவது பக்கத்தில் சென்று அந்த சிறிய torrent பதிவிறக்கம் செய்து "Bit torrent" போன்ற மேன்தொகுப்பில் திறந்தால் அதுபதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கும்.

Seeds : இது முழுமையாக பதிவிறக்கம் செய்து பதிவேற்றும் நபர்களைக்குறிக்கிறது.

Leachersஇது பதிவிறக்கம் ஒன்றே செய்யும் நபர்களைக் குறிக்கிறது.

Peers: இது நம்மோடு எத்தனை பேர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என்பதைக்குறிக்கிறது.

எனவே எதாவது Torrent  பதிவிறக்கம் செய்யும் முன் seeds அதிகமாகஇருப்பது நல்லதுஅது இல்லா விடில் முழுமையாக பதிவிறக்கம் செய்யமுடியாது.

பதிவிறக்கம் செய்த பின் அதில் Antivirus கொண்டு ஸ்கேன் செய்வது அவசியம்

கருத்துரையிடுக