Barn Buddy விளையாடுவீங்களா???

பார்ண் படி விளையாட்டு இடைமுகம்
பார்ண் படி விளையாட்டு இடைமுகம்

கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்று உள்ளே நுழைந்தேன்.
சும்மா சொல்லக்கூடாது, நல்ல ஒரு விளையாட்டுத்தான். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு தோட்டக்காரணாகவே மாற்றும் விளையாட்டு. அதாவது உங்களுக்கு ஒரு சின்ன நிலமும் சில விதைகளும் தந்து விளையாட ஆரம்பிக்கச் சொல்கின்றார்கள். அந்த விதைகளை விதைத்து அறுவடை செய்து விற்றால் பணம்.
பணம் கண்ட மனம் சும்மா இருக்குமா? உடனே மேலும் விதை வாங்கி விதைத்து அதை விற்று பணம் செய்யச்சொல்லுமல்லவா? அதுதான் எங்கட பொடியள் எல்லாரும் தினமும் ஒருக்காலாவது பாண்படி விளையாடாமல் படுகப்போறதில்லை.
உண்மையான தோட்டம் போலவே நீரூற்றல், கிருமி நாசினி தெளித்தல், களை பிடுங்கல் என்று தோட்டம் சார்ந்த செயற்பாடுகள் வேறு உள்ளமைந்திருக்கின்றன.
தோட்டம் செய்ய கருவிகள்
தோட்டம் செய்யக் கருவிகள்
நீங்கள் நல்லா தோட்டம் செய்து சந்தையில் விற்று பணம் செய்து வந்த பணத்தை வைத்து புதிய நிலம் வாங்கி அதில் பயிரிட்டு பெரிய பணக்காரனாவதை உங்கள் பக்கத்துவீட்டுக் காரன் விரும்புவானா?? இல்லைதானே?? அதுமாதிரி இங்கையும் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் உங்கள் தோட்டத்தில் களவெடுக்கலாம், பூச்சிகளை அனுப்பலாம், களைகளைப் பயிரிடலாம். கவனம் இது கலிகாலம் யாரையும் நம்பக் கூடாது.
நாய் வேணுமா? அப்ப 10 பேரைச் சேருங்க!
நாய் வேணுமா? அப்ப 10 பேரைச் சேருங்க!
இவை எல்லாவற்றையும் விட தோட்டத்தை காவல் காக்க ஒரு நாய் வேண்டுமல்லவா, ஆ… அதையும் நீங்கள் வாங்கிவிடலாம். அதாவது $10 கொடுத்து நாய் வாங்கி விடலாம் அல்லது நீங்கள் 10 நண்பர்களை அழைத்து அவர்களு உங்கள் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது 10 புதிய நண்பர்களை பார்ண்படி விளையாட்டுக்கு நீங்கள் அழைத்து வந்தால் உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு நாய் தருவார்கள். இந்த நாய் இருந்தால் உங்கள் தோட்டத்தில் களவு போதல் போன்ற செயற்பாடுகள் நடைபெற வாய்ப்பேயில்லை. ;)
ஏன் இன்னும் தயக்கம், நீங்களும் Barn Buddyயில் சேர்ந்து ஒரு தோட்டக்காரனாகுங்கள். இவ்வாறான மெய்நிகர் விளையாட்டுக்கள் இந் நாட்களில் மிகப் பிரபலமாகி வருகின்றமை யாவரும் அறிந்த விடையமே.

கருத்துரையிடுக