உபுண்டு 9.04 ல் தமிழ் 99

பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான்.
சீ.டிக்கள் தாபாலில் வந்து கிடைத்த நிமிடம் ஒரே தர்ம சங்கடமாகிவிட்டது. இவங்கள் மினக்கட்டு அனுப்பியிருக்காங்களே, இந்த சீ.டியை அநியாயமாக விடக்கூடாது என்று நினைத்தேன். அதன் விழைவாக எனது தங்கையில் மடிக்கணனியில் உபுண்டு குடிபுகுந்தார். ஆனாலும் அடிக்கடி வரும் கேள்விகளை இணையத்தில் கூட தேடாமல் மயூரனை துரத்தி துரத்தி கேட்டு வெறுப்பேற்றினேன்.
ஆனாலும் என்னால் தமிழ் 99 தட்டச்சு முறையை உபுண்டுவில் கொண்டுவரமுடியவில்லை. இதற்கிடையில் உபுண்டு பிடித்துப்போய் எனது மேசைக் கணனியிலும் நிறுவிட்டேன். உபுண்டுவை தொடர்ந்து பாவிக்க ஒரே தடைக்கல்லாக இருந்த காரணி இந்த தமிழ் 99 உள்ளீடு செய்ய முடுயாமல் இருந்தமையே.
உபுண்டு மன்றங்கள் பலவற்றில் கேட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் மயூரனை பிடித்து பிப்பிலி ஆட்டலாம் என்று நினைத்தேன். என்றாலும் இவை SCIM எனும் செயலியின் மூலமே நடப்பதாக அறிந்து கொண்டேன். ஆகவே அந்த செயலியை முதலில் நிறுவுவோம் என்று நினைத்தவாறே இணையத்தில் “Installing SCIM on Ubuntu 9.04″ என்று தேடி கிடைத்த முடிவின் படி
  1. System –> Administration –> Synaptic Package Manager போயி
  2. scim-m17n ஐ தேடி
  3. scim-m17n அருகில் உள்ள செக் பெட்டியை சொடுக்கி
  4. வரும் தெரிவுகளில் Mark for Installation ஐத் தெரிவு செய்து
  5. Apply பட்டனை சொடுக்கி
  6. நிறுவிக்கொண்டேன்
ஒரு தடவை Log off ஆகி மீள Log on ஆகுங்கள்.
இப்போது Applications –> Accessories –> Text Editor மூலம் டெக்ஸ் எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். பின்னர் CTRL + SPACE BAR என்ற விசைகளை அமத்தவும். இப்போது வலது கீழ் மூலையில் உங்களுக்கு ஒரு மெனு கிடைக்கும். காண்க படம். அதில் உங்களுக்குப் பிடித்தமான தமிழ் 99 முறைமையை தெரிவு செய்து கொள்க.
உபுண்டு 9.04 மற்றும் தமிழ்99 தளக்கோலம்
உபுண்டு 9.04 மற்றும் தமிழ்99 தளக்கோலம்
அடியேன் ஏதும் பிழை விட்டிருந்தால் சுட்டிக்காட்டவும்.
இணையத்தில் புடித்த ஏனைய உசாத்துணைகள்
அடியேன் மேலும் இப்படியான உபுண்டுப் பதிவுகளைப் போடலாம் என்று இருக்கின்றேன். விரும்பினால் அறியத் தாருங்கள்.

கருத்துரையிடுக