Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

25 டிச., 2009

மூன்று I.T செய்திகள்!


 பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்டெலுக்கு அடுத்து AMD-தான்.


AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில் tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது.

இல்லாட்டி நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும்.

அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும்.

சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும். AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டதுHappy Birthday AMD!

அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.


2. முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது.


இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா?

இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம் செய்துகொண்டு, மற்ற கம்பெனிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கூகிள் கிட்டே போய் கேளுங்க.


3. இந்த எழவு வைரஸ் எப்படிதான் வந்துதோ என்று விஷயம் தெரியாமல் தலையில் அடித்துக் கொள்பவர்களுக்கு இனிப்பான செய்தி.

சாதா சிடி, டிவிடி தவிர வேறு எந்த removable media-விற்கும் விண்டோஸ் 7-லிருந்து autorun வசதி default-ஆக கொடுக்கப் போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் சொல்லியிருக்கிறது.

இந்த autorun வசதியை வைத்துக் கொண்டு தன் சந்ததியை இஷ்டத்துக்கு பெருக்கிக் கொண்டு கும்மாளம் அடித்த வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்லாம் தங்களுக்கு வரப்போற சோதனையை நினைத்து ரொம்பதான் நொந்து போயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக