சில டிப்ஸ் மற்றும் மென்பொருட்கள்

நண்பர்களே உங்கள் கணிணியில் உங்கள் கணிணியின் ட்ரைவர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா?, ஏதும் சந்தேகப்படும்படியான மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதா?, எந்தெந்த கோப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது, இதுமட்டுமில்லை உங்கள் கணிணியின் திறன் மற்றும் வன்பொருள்கள் குறித்த தகவலையும் பெறலாம் ஒரே மென்பொருள் மூலம்.

இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர்.

இதை எப்படி செய்வது?

இந்த தளத்திலிருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கிய பின் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இயக்கியவுடன் கீழிருக்கும் படம் போல உங்களை கேட்கும். உடனே I Agree என்பதனை தேர்வு செய்யுங்கள்.


அதன் பிறகு மென்பொருள் திறக்கப்படும்.

மென்பொருளில் Create Report என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அனைத்து வேலைகள் முடிந்தவுடன் சுருக்கப்பட்ட (ZIP) கோப்பாக சேமிக்கப்படும்.


பிறகு இந்த தளம் செல்லுங்கள் இணையத்தளசுட்டி


இந்த தளத்தில் Browse என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். சேமித்த ZIP கோப்பினை தேர்வு செய்யுங்கள். பிறகு Submit என்பதனை தேர்வு செய்யுங்கள். முடிந்தது பிறகு உங்கள் சில விநாடிகளில் உங்கள் கணிணி குறித்த தகவல்கள் சுலபமாக பெறலாம்.





1 கருத்துகள்

கருத்துரையிடுக