புதியவை சில புதுமைகளுடன் MS Office - 2010


இன்று நாம் பல்வேறு பட்ட விடயங்களுக்காக இந்த வகையான இன்று கணினியின் தேவை அறிந்து அதன் பால் ஈர்க்கப்பட்டு அதிலே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் போல் பலருக்கும் இருக்கும். நாளாந்தம் நாங்கள், அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் கூட இன்று இந்த வேலைகளை செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகின்றது.

இதற்காக  நாங்கள் கணினியின் செய்வதற்கு உலகில் மைக்றோ சொப் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்திய பல பதிப்புகளில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒபீஸ் தொகுப்பு – 2010 தொடர்பான ஒரு கண்ணோட்டம் இதுவாகும்.

MS Office   தொகுப்பின் புதிய பதிப்பு 2010 பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் வளர்ச்சி குறித்து தொடர்புள்ளவர்களுக்கு மட்டும் (மைக்ரோசொப்ட் டொட்நெட் மற்றும் எம்.எஸ்.டி.என்., சந்தாதாரர்களுக்கு மட்டும்) இது டவுண்லோட் செய்ய அனுமதி அளிக்கப்பட் டது. வர்த்தக தியாக பொதுமக்களுக்கு யூன் மாதம் இது கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. எந்த திகதியிலி ருந்து என இன்னும் அறிவிப்பு வரவில்லை. இத்தொகுப்பு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.


Office- 2010 மிக ஆழமாக மேற்கொள்ளபட்ட சிந்தனையில், நுண்மையாக வடிவமைக்கப் பட்டு, பல சொப்ட்வேர் புரோகிராம்கள் இணைப்பாக அமைக்கப்பட்ட ஒரு பெருந் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் மையமாகத் தரப்படும் Word, Excel, Access, Outlook Presentation Programme இன்றைய தேவைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்களை கொண்டுள்ளவையாக வடிவ மைக்கப்பட்டுள்ளன. ந்தைய ஒபீஸ் தொகுப்புகளுடன் ஒப்பிடுகையில், இத்தொ குப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சிறப்பி னைக் காணலாம். Office 2007 தொகுப்பில் ப்பன் இன்டர்பேஸ் அறிகப்படுத்தப்பட்டது. ஆனால், முழுமையாக அனைத்து தொகுப்புகளுடனும் தரப்படவில்லை.


அவுட்லுக், ஒன்நோட் மற்றும் பப்ளிஷர் தொகுப்புகளில் ஒபீஸ் 2003ல் இருந்த மெனுவே தொடர்ந்தது. ஆனால், ஒபீஸ் 2010ல் அனைத்துமே Ribbon Interface ஸூக்கு மாறிவிட்டன. குறிப்பாக, அவுட்லுக் தொகுப்பில் முன்பு புதைக்கப்பட்டிருந்த சில வசதிகள் அனைத்தும், Ribbon Interface ஸில் எளிமையாக பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளன.

ஓபீஸ் 2010ல் பைல் மெனு மீண்டும் தரப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 தொகுப் பில் ஒப்பன் அண்ட் சேவ் டொயலாக் பாக்ஸ், பிண்ட் பங்சன் போன்றவை ஓபீஸ் மெனுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை இப்போது மிகத் தெளிவாக, வண்ணக் கலவையில் காட்டப்படுகின்றன. ப்பன் மெனுவில் இடது ஒரம் அனைத்தும் பைல் ஓப்ஷனாகத் தரப்பட்டுள்ளன.

மேலும், இந்த Ribbon Interface இணைந்து டெவலப்பர்கள் பல டேப்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி அமைக்கலாம். ஒப் ஜெக்ட், கிறாபிக்ஸ் போன்றவற்றை எடிட் செய்வது, மாற்றி அமைப்பது போன் றவை, ஓபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து புரோகிராம்களில் ஒரே மாதியாக உள்ளன. ஆனால், டெக்ஸ்ட் எடிட் செய்வதில், இந்த புரோகிராம் களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. வேர்ட் தொகுப்பில்  Document ஒன்றில் சொற் களைத் தேடுவதற்கு பைண்ட் அண்ட் பிளேஸ் பயன்படுத்து கிறோம்.


வேர்ட் 2010ல் நேவிகேஷன் பேனில் தரப்பட்டிருக்கும் மூன்றாவது டேப்பில் இந்த தேடல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சர்ச் பொக்ஸில் ஒரு சொல்லை டைப் செய் கையில், அந்த சொல் இருக்கும் அனைத்து இடங்களும் ஹைலைட் செய்யப்படுகின்றன. இதனால், நாம் சொல் உள்ள அடுத்தடுத்த இடங்களை தொடர் யற்சி இன்றி அறிய லாம்.

எக்ஸெல் தொகுப்பில் அனைத்து பங்ஷன்களும் மீண்டும் துல்லியமாகவும், வேக மாகவும் செயல்படும்படி அமைக்கப் பட்டுள் ளன. டேட்டா பேஸ் தனியே அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இணைத்துப் பயன்படுத் துபவர்களுக்கு இந்த தொகுப்பில் பல வசதி கள் கூடுதலாக தரப்பட்டுள்ளன.

அவுட்லுக் 2010ல், மெனுவிற்கு பதில் ப்பன் இன்டர் பேஸ் தந்திருப்பது ஒரு க்கிய மாற்றமா கும். புதியதாக தரப்பட்டுள்ள இரண்டு வசதிகளை இங்கு குறிப்பிட வேண்டும். குயிக் ஸ்டெப்ஸ் (Quick steps) என்ற ஒரு டூல் உள் ளது. இதில் கட்டளைகளை லிஸ்ட்டிலிருந்து எடுத்து, அவற்றை செயல்படுத்தும் வசைப் படி அமைக்கலாம். பின்னர், இதனை ஹோம் டேப்பில் உள்ள பட்டன் ஒன்றுக்கு இணைக் கலாம். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத் தலாம்.


அடுத்ததாக, மெசேஜ்களை குழுவாக அமைக்கும் டூல் செயல்படும் விதத்தினைக் குறிப்பிடலாம். மெசேஜ் சப்ஜெக்ட் அடிப் படையில், அவை குழுவாக அமைக்கப் படுகின்றன.

இதில், புதியதாக இக்னோர் (Ignore)  ஓப்ஷன் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ் அல்லது கான்வர்சேஷன் மற்றும் அதன் பின்னணியில் வரப்போகும் அனைத்து மெசேஜ் களும் தானாகவே நீக்கப்படுகின்றன. ஒருவருக்கு கொப்பி செய்யப்படும் தேவையற்ற மெசேஜ்களை நீக்க இது பயன்படும். இந்த டூல் சப்ஜெக்ட் தலைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், அதில் சிறிய மாற்றம் ஏற் பட்டாலும் இந்த வசதி செயல்படாமல் போய் விடும். இந்த பிரச்னை வரும் காலத்தில் தீர்க்கப்படலாம். அடுத்ததாக, ஓபீஸ் 2010 தொகுப்பு எவற்றை எல்லாம் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். அனைத்து Word, Excel, Access, மற்றும் Onenote ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன. இவை 32 பிட் மற்றும் 64 பிட் வகைகளில் கிடைக்கின்றன.


ஹோம் எடிஷன் (Home Edition)

இது கீழ்காணும் வகைகளில் கிடைக் கிறது.

Microsoft Office Home and Student 2010

இந்த தொகுப்பினைப் பெறும் ஒரு வர், தன் வீட்டில் ன்று பெர்சனல் கொம்ப் யூட்டர்களில் இதனை நிறுவிக்கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு அடிப்படை தொகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வர்த்தக நிறுவனத்திலும், இலாப நோக்கில் செயல்படும் அமைப் புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களிலும் பயன் படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.


Microsoft Office Home and Business  2010


இது சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட நான்கு தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.


Micro Office Professional Academic  2010 

இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher and Access)  உள்ளன. அத்தாட்சி பெற்ற கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.


பிசினஸ் எடிஷன்  -- Microsoft Office Home and Business 2010

இது கீழ்காணும் வகைகளில் கிடைக் கிறது.


Microsoft Office Professional Academic 2010

இதனை சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்ஸெஸ் இணைக்கப்பட் டுள்ளன.


Microsoft Office Professional Academic 2010

அடிப்படை தொகுப்புகளுடன் Outlook, Publisher, and Access Sharepoint Workspace (formerly Groove), Communicate, and InfoPath  ஆகியவை இணைக்கப் பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் றை யில் வாங்கலாம்.


ஒபீஸ் 2010 ஐ இயக்க உங்கள் சிஸ்டம் எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என் பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பின் வந்த இணைப்புடன் (32 அல்லது 64 பிட்) விண் டோஸ் 7 (32 அல்லது 64 பிட்) விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008.


ஹார்ட் டிஸ்க் குறைந்தது 3 ஜிபி இருக்க வேண்டும். வழக்கம்போல், ஒரு ஒபீஸ் 2010 தொகுப்பு, ஒரு கொம்ப்யூட்டல் மட்டுமே பதிந்து இயக்க லைசன்ஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைக்குள் அனு மதிக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்டவை அல்லாமல் ஒபீஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் கிடைக்கிறது.

ஆனால், இவை கொம்ப்யூட்டர் தயாப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப் படையில் வழங்கப்படுகின்றன. வெளியே தனியே சில்லரை விற்பனையில் வாங்க டியாது. இதில் வேர்ட் ஸ்டார்ட்டர் மற்றும் எக்ஸெல் ஸ்டார்ட்டர் ஆகியவை மட்டுமே உள்ளன. இதனைப் பெற்றவர்கள், கூடுதலாக பணம் செலுத்தினால் ழுமையான ஓபீஸ் 2010 தொகுப்பாகத் தங்கள் ஸ்டார்ட்டர் எடிஷனை மாற்றலாம்.

2 கருத்துகள்

  1. உங்கள் ஆலோசனைக்கு நன்றி
    உங்கள் போன்ற நண்பர்களிடமிருந்து ஆதாரவு தான் எங்களை வளப்படுத்த வளமாக அமையும் என நான் நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக