எம்.எஸ்.டொஸ் என்பது தனிநபர் கணினிகளுக்காக ஆரம்ப காலத்தில் அறிமுகமான ஒரு இயங்கு தளமாகும். Microsoft Disk Operating System என்பதன் சுருக்கமே MS-DOS IBM மற்றும் IBM சார்ந்த கணினிகளுக்காக மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் இது உருவாக்கப் பட்டது.
எம்.எஸ்.டொஸ் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்டது இது விண்டோஸ் போன்று கிரபிக்ஸ் இடை முகப்பு கொண்ட ஒரு இயங்குதளமல்ல. தற்போது இந்த எம்.எஸ்.டொஸ் இயங்கு தளம் பாவனையில் இல்லாவிடினும் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இதன் கட்டமைப்பு இன்றும் பயனபடுத்தப் படுகிறது. எல்லோருக்கும் பரிச்சயமான விண்டோஸ் போலன்றி எம்.எஸ். டொஸ்ஸில் பணியாற்றுவதற்கு உரிய கட்டளைகளை கீபோர்டில் டைப் செய்ய வேண்டும். இக்கட்டளைகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியிருந்ததால் அனேக கணினிப் பயனர்கள் எம்.எஸ்.டொஸ் பயன் படுத்தப்பட்ட காலத்தில் கணினியில் பணியாற்றுவதில் அதிக சிரமத்தை எதிர் கொண்டனர். அத்தோடு ஒரே நேரத்தில் ஒரேயொரு பணியை மட்டுமே இந்த இயங்கு தளத்தில் நிறை வேற்றலாம் என்பது இதன் மற்றுமொரு குறையாகவிருந்தது,
விண்டோஸில் மவுஸ் பயன் படுத்துவதுபோல் கமாண்ட் லைன் இண்டர்பேஸ் (Command Line Interface) எனும் இடை முகப்பைக் கொண்ட இந்த எம்.எஸ். டொஸ் இயங்கு தளத்தில் கீபோர்டே பிரதான உள்ளிடும் சாதனமாகப் பயன் படுத்தப்பட்டது. உரிய கட்டளைகளை வாங்கிக் கொள்ளும் இடத்தை சீ ப்ரொம்ப்ட் (C:> Prompt) எனப்படுகிறது.
இதுவே மைக்ரொஸொப்ட் நிறுவனம் முதன் முதலில் உருவாக்கிய இயங்கு தளமாகும். தனி நபர் கணினிகளுக்காக முதன் முதலில் உருவாகப்பட இயங்கு தளமே எம்.எஸ்.டொஸ் என நீங்கள் கருதினால் அது தவறானது. ஏனெனில் அதற்கு முதலே CP/M, QDOS எனும் பெயர்களில் இயங்கு தளங்கள் பாவனையிலிருந்தன்..
எம்.எஸ்.டொஸ்ஸின் வரலாற்றை சிறிது நோக்குவோமானால், 1980 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் IBM நிறுவனம் தனது தனி நபர் கணினிகளுக்கான 16 பிட் கொண்ட ஒரு இயங்கு தளத்தை வடிவமைத்துத் தரும் பொறுப்பை மைக்ரோஸொப்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மைக்ரோஸொப்ட் நிறுவனம் அது நாள் வரை ஒரு இயங்கு தளத்தை உருவாக்கியிருக்கவில்லை அதே நேரத்தில் டிஜிடல் ரிசேர்ச் எனும் நிறுவனம் 16 பிட்டிலலான ஒரு இயங்கு தளதை ஏற்கனவே CP/M 86 எனும் பெயரில் உருவாக்கியிருந்த்து, எனினும் அந் நிறுவனம் IBM நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்திருக்கவில்லை. டிஜிட்டல் ரிசேர்ச் நிறுவனத்திடம் CP/M எனும் இயங்கு தளதிற்கான அதிகாரத்தை ஏற்கனவே பெற்றிருந்தது மைக்ரோஸொப்ட். எனினும் வேறொரு நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்வதற்கான அதிகாரம் இருக்கவில்லை.
அதேவேளை Seattle நிறுவனத்தினர் CP/M லிருந்து QDOS எனும் 16 பிட் கொண்ட ஒரு இயங்கு தளத்தை வடிவமைத்திருந்தனர். ஐபிஎம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் QDOS இயங்கு தளத்தை Seattle நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கி விடுகிறது மைக்ரோஸொப்ட். பின்னர் QDOS இல் சில மாற்றங்களைச் செய்து MS-DOS என பெயரையும் மாற்றி ஐபிஎம் நிறுவனத்திற்கு வழங்குகியது. ஐபிஎம் நிறுவனம் தனது தனி நபர்க் கணினிகளில் அதனை PC-DOS எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது.ஐபிஎம் நிறுவனத்திற்கு அதனை வழங்கினாலும் தனியாக MS-DOS எனும் பெயரில் விற்பனை செய்யக் கூடிய அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்கிறது மைக்ரோஸொப்ட். அத்தோடு ஐபிஎம் உடனான தனது ஒப்பந்தத்தை Seattle நிறுவனத்திற்குத் தெரிய வராமல் ரகசியாமகப் பதுகாக்கிறது.
QDOS இயங்கு தளத்தை தனதாக்கிக் கொள்ளும் வரை மைக்ரோஸொப்ட் நிறுவனம் Microsoft BASIC எனும் கணினி மொழியையே விறபனை செய்து கொண்டிருந்த்தது,
தனி நபர் கணினிகளின் விறபனை 80 ஆம் ஆண்டுகளில் அதிகரிக்க MS-DOS இயங்கு தளமும் பிரபல்யமடைய ஆரம்பித்தது. மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் அதிசயிக்கத்தக்க துரித வளர்ச்சிக்கும் உலகில் முன்னனி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமாக மாறுவதற்கும் MS-DOS இயங்கு தளமே காரணம் எனலாம்.
1983 ஆம் ஆண்டில் Apple Macintosh நிறுவனத்தின் GUI (Graphical User Interface) இடை முகப்புடன் கூடிய இயங்கு தளத்தை அறிமுகம் செய்ததும் மைக்ரோஸொப்டும் அவ்வாறன இயங்கு தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.
எம்.எஸ்.டொஸ்ஸில் இயங்கக் கூடியவாறு பல நிறுவனங்கள் GUI இடை முகப்புடன் கூடிய எப்லிகெசன்கள் உருவக்கியிருந்த போதும் அவற்றிற்கிடையே பொதுவான ஒரு தோற்றப்பாடு இருக்கவில்லை யாதலால் புதிய எப்லிகேசன்களைக் கற்றுக் கொள்வதில் கணினிப் பயனர்கள் சிரமத்தை எதிர் நோக்கினர். Apple Macintosh போன்று மைக்ரோஸொப்டும் தனது GUI இடை முகப்புடன் கூடிய இயங்கு தளத்தை விண்டோஸ் எனும் பெயரில் வெளியிட்டது.. ஆரம்ப கால விண்டோஸ் பதிப்புகள் MS-DOS இயங்கு த்ளத்தின் மீது ஒரு சாதாரண பயன்பாட்டு மென்பொருள் போன்றே இயங்கியது எனினும் 1995 ஆண்டிலேயே முழுமையான தரமான ஒரு GUI இயங்கு தளமாக விண்டோஸ் 95 ஐ வெளியிட்டது மைக்ரோஸொப்ட்.
தற்போதைய விண்டோஸ் பதிப்புகளில் எம்.எஸ்.டொஸ் பயன்படுத்து வதில்லை. எனினும் எம்.எஸ்.டொஸ்ஸில் இயங்கிய எப்லிகேசன்களை இயக்கக கூடியதாக எம்.எஸ்.டொஸ் கட்டமைப்பை தற்போதைய விண்டோஸ் பதிப்புக்ள் கொண்டுள்ளன.
1981 ஆம் ஆண்டில் எம்.எஸ்.டொஸ் முதற் பதிப்பை வெளியிட்ட மைக்ரோ ஸொப்ட் 1995 ஆம் ஆண்டுவரை பல பதிப்புகளை வெளியிட்டது. எம்..எஸ்.டொஸ் 7 என்பதே அதன் இறுதிப் பதிப்பாகும். எம்.எஸ்.டொஸ் ஏராளமான கட்டளைகளைக் கொண்டிருந்தாலும் அவறில் அடிக்கடி பயன் படும் சில பொதுவான கட்டளைகளை இங்கு பட்டியலிடுகிறேன்.
இந்த கட்டளைகளை விண்டோஸில் இணைந்து வரும் கமாண்ட் ப்ரொம்டிலும் செயற்படுத்திப் பார்க்கலாம். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் பொக்க்ஸில் cmd என டைப் செய்து வரும் விண்டோவில் இந்த கட்டளைகளை டைப் செய்து பாருங்கள்.
எம்.எஸ்.டொஸ் இயங்கு தள்த்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்காதவர்கள் விண்டோஸ் கமாண்ட் ப்ரொம்டில் அந்த அனுபவத்தைப் பெறலாம். எம்.எஸ்.டொஸ் விண்டோவானது விண்டோஸில் வரும் கமாண்ட் ப்ரொம்ப்ட் விண்டோவுக்கு நிகரானதே.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக