பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். .
இதிலேயே கூடுதல வசதி வேண்டும் என்றால் அதில் உள்ள Upgrade கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலப்புறம் உள்ள Open கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இடது புறம் உள்ள Sketch டேபின் கீழே Pen,.Pencil, Pastel,என்கிற் ரேடியோ பட்டன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக்செய்யுங்கள். அதன் பக்கத்தில் Precision அளவினையும் Line அளவினையும் வையுங்கள். லைன் ஸ்லைடரை நகர்த்த படத்தின் தரம் மாறுவதை காணலாம்.நான் கீழே பென்சில் தேர்வு செய்துள்ளேன்.
வலதுபுறம் பார்த்தீர்களே யானால் Automatic அடுத்து Freehand டேப் இருக்கும்.அதை கிளிக் செய்து பிரஷ் அளவினை வேண்டிய அளவிற்கு வைத்து பக்கத்தில் உள்ள விண்டோவில் கர்சரால் நகர்த்த உங்களுக்கு படம் தெரிய வரும்.தேவையானதை வரைந்து கொள்ளலாம்.
சரி...ஒவ்வோரு புகைப்படமாக மாற்றாமல் ஒரு போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் மாற்ற வேண்டும். அதற்கும் வழி உள்ளது.வலதுபுறம் உள்ள Batch Convert Bar கீழே உள்ள Show பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் மாற்ற வேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும இடத்தை யும் தேர்வு செய்து Convert All கிளிக் செய்தால் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மாறிவிடும்.
அதைப்போல் இடதுபுறம் Texture -ல் 10 ம் கும் மேற்பட்ட பின்ணணி படங்களையும் நாம் விரும்பும் படங்களையும் கொண்டு வரலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.படங்கள் நன்றாக இல்லையென்றலாம் அழித்துவிடவும்.சேமிக்கவும் சேமித்ததை எடிட் செய்யவும் இதில் வசதிகள் உள்ளது.
இது தொடர்பான உங்கள் ஆலோசனைகளும், கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக