மனித வாழ்வில் பண்பாட்டின் கூறுகள் எவை

ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்த மக்கள், தங்கள் சூழ்நிலைகளோடு கொண்டுள்ள தொடர்புகள், சக வாழ்க்கை அமைப்பு, நம்பிக்கைகள், பொருளாதார அமைப்பு, தொழில்நுட்பம், பழக்க வழக்கங் கள் தலானவை பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளப்படும்.
ஒக்ஸ்போர்ட் (Oxford)  அகராதியின்படி பண்பாடு என்பது ஒரு நாட்டிலுள்ள கலை கள், நம்பிக்கைகள், சக நிறுவனங்கள், சன சகம், இனம் ஆகியவை பண்பாடு, கலாசாரத்தைக் குறிக்கும். இவை பயிற்சியாலும் அனுபவத்தாலும் ஏற்படுகின்ற மனித உள்ளார்ந்த உச்சக் கட்ட ஆற்றல்களையும் ஆன்மீகத் தன்மையையும் குறிக்கும் எனலாம்.

பண்பாடானது ஒரு நாட்டில் தோன்றி வளரலாம், பின்பு அழிவு அடைந்து போகலாம், எச்சங்கள் காணப்படலாம். ரோமாபு, கிறிஸ், எகிப்து போன்ற நாடுகளில் பண்பாட்டின் சாயல்களாக பல கட்டிடங்களையும் தத்துவங்கள் கொண்ட படைப்புக்களையும் இன்றும் காணலாம். அந்நியன் தாக்கங்கள், போர்கள் கலாசார சீர்குலைவுக்கு வழிவகுத்தன.

இன்றைய உலகம் விஞ்ஞான தொழில் நுட்ப தியில் வியக்கத்தக்கன்னேற்றங் களை அடைந்து விட்டதாக கருதப்பட்ட போ திலும் அன்பு, அமைதி, சாந்தம் போன்ற இன்றியமையாத தேவைகளுக்கு பற்றாக்குறையிருப்பதாகப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். பாரய அபிவிருத்திகள் நற்பண்புகளோடும் மனித நேயத்தோடும் இணைந்து வளராமையே இதற்கு பிரதான காரணமாகும்.

பண்பாட்டுச் செல்வங்கள்
சமூகத்துக்கு ஒரு பண்பாட்டுக் கடமையுண்டு. இளைஞர்களுக்கு பண்பாட்டுச் செல்வங்கள் பற்றிய அறிவையும் விழிப்புணர்ச்சி யையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நவீன பூகோள மயமாக்கப்பட்ட உலகில் இளைஞர்கள் விருத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தும் எதிர்மறைக் காரணங்களின் விளைவு களை கருத்தில் கொண்டு, எனது நாடு, எனது பண்பாடு என்ற உணர்வுகளை இந்தியா போன்ற நாடுகள் ஏற்படுத்துகின்றன. பண்பு சக உணர்வை, நல்ல சிந்தனையை, பொறுப்புள்ள மக்களை உருவாக்கும் தன்மை யுடையது. இதனால் சகம் விழிப்படையும், உயர்வடையும் இவ் விழிப்பு அறிவியல் பார் வையை விருத்தி செய்வதோடு, நாட்டின் பல் பமாண வளர்ச்சிக்கு சுபீட்சமான கலாசார வளர்ச்சிக்கு ஆணி வேராக அமையும் என்பது சான்றோர் வாக்கு எனலாம்.

 பண்பின் வலிமை
மக்களிடையே பொது உடன்பாடு, கூட்டு யற்சி போன்ற குண இயல்புகளை வளர்த்து, அவர்களை ஒரு புத்தூக்கம் கொண்ட சக மாக இயங்க வைக்க பண்புக்கு வலிமை யுண்டு. இதனால் நல்ல மக்கள் ஆட்சி றை களைக் கடைப்பிடிக்கவும் சகத்தில் காணப்படும் குறுகிய மனப்பாங்கை விலக்கவும், இன, மத, மொழி பேதமின்றி, ஆளுமை வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை உமை களை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் முடியும். நல் வாழ்க்கைக்கு, மனிதனிடம் தன்னை நெறிப்படுத்தும் முழுமையான ஆளுமை விருத்தியமைய வேண் டும். மனித ஆளுமை உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு பமாணங்களையும் உள்ளடக்கியது. விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கும் காலம் உருவாகியுள்ளதால் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.

பண்பான சிந்தனை, தவறுகளை அகற்றி நம்பகத் தன்மையை உருவாக்கும். ஒரு நாட் டின் வரலாற்றை பண்பாட்டுக் கூறுகள் பல வற்றின் வரலாறாக பல வகையில் எழுதலாமென வரலாற்று அறிஞர்கள் கூறுவதிலிருந்து பண்பின் வலிமையை மேலும் அறிந்து கொள்ளலாம். காலங்கள், கோலங்கள் மாறலாம். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். அது எவ்வாறெனின் மனிதனின் உண் மைப் பண்பாடு மட்டும் மாறாது இருப்பது உயர் செயலாகும்.

பண்பாட்டின் தன்மை
பண்பாடு என்பது தொன்று தொட்டு வளர்ந்து வருவது எனலாம். சூழ்நிலைகளால் அல்லது சீர்திருத்தம் மேற்கொள்ளுவதில் ன்னேற்றம் எடுப்பதால் பண்பாடு மேலோங்க வாய்ப்புக்கள் உண்டு. இதனால் தான் ““குலத்தளவேயாகுமாம் குணம்'' என்பார்கள்.  நற்குலத்தவர், நற்குணடையவர்கள் என் பது அதன் பொருள். துரதிர்ஷ்டவசமாக குலம் என்ற பதத்தை பிழையாகக் கருதுபவர்கள் உண்டு. நம் சதாயத்தை பிளந்து பித்த சாதி றை அல்ல . குலம் என்பது ஒரு இனத்தை ஒரு சதாயத்தைக் குறிக்கும், ஒவ்வொரு குலத்துக்கும் உள்ள பண்பாடுகளிடையே வேறுபாடுகளைக் காணலாம். தமிழ், முஸ்லிம், சிங்களவ இனத்தின் பண்பாட்டிலும் மேனாட்டவன் பண்பாட்டிலும் வேறுபட்ட தன்மைகளை நாம் காண முடியும். உயர்ந்த தன்மை அல்லது ஒழுக்கம் போன்ற பொது விடயங்களில் பண்பாட்டின் பொருள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி, கலை அன்றாட பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இனத்துக்கினம் மாற்றண்டு.  பண்பாட்டின் மூலம் பண்பாடு நம்மில் தான் பிறக்கின்றது. நம் வீட்டில் தான் உற்பத்தி ஆகிறது. பிரத்தியோகமாக கற்க வேண்டியதில்லை. ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் பண்பாடு இன்றியமையாததாகும். எம்மிடையே உள்ள பண்பாடு நம்குடும்பத்தினடையே வளர்ந்து பின்பு ஊரெங்கும் பரவி நிற்கும். அந்த ஊன் பண்பாடு ஒருமைப்பாடானது போலமையும். இப்படித்தான் பண்பாடு பிறந்து வளர்ந்து பரம்பரையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.  சுருங்கக் கூறின், பிரதானமாக சுத்தம், ஒழுக்கம் பண்பாட்டைக் குறிக்கும். ஒழுக்கம் உயினும் ஓம்பப்படும். இது தமிழ்ப்பண்பாடு, பண்பாடு அமைதியின் அத்திவாரம் உன் வாழ்வில் அமைதி வேண்டுமானால் பிறரது குற்றங்களைப் பாராதே. உனது குற்றங்களைப் பார். இந்த உலகம் ழுவதும் உனது சொந்தமாகக் கற்றுக் கொள். புலவர் கனியன் பூங்குன்றனார் கூற்றை ““யாதும் ஊரே யாவரும் கேளிர்'' உள் வாங்கிக் கொள். இன்று பிரச்சினைகளை பூகோள ரீதியில் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

உயர் பண்பாடுடைய இனமாக நமது இனம் பிரகாசிக்க வேண்டுமானால் அதற்கு வேண்டிய அத்திவாரத்தையிட வேண்டும். பணிவு, சகிப்புத் தன்மை, நேர்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, ஐக்கியம், இணக்கம், கூட்டுப் பொறுப்பு, நீதி போன்றவை பண்பாடுகள் தான். இவற்றை நன்கு அறியவும், கற்கவும் பாடசாலையிலுள்ள புற நிகழ்ச்சிகள் பெதும் உதவி வருகின்றன. பல மாண வர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதால் புற நிகழ்ச்சியில் பங்குபற்றுவ தில்லை.

இளைஞர்களும் பண்பாட்டின் தேவையும்
பிள்ளைகள், சிறந்த ஒத்த வயதுக் குழுவினரைத் (Peer Group) தேர்ந்தெடுக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியிலே, நல்ல கருத்துக்கள், நல்ல செயற்பாடுகள் தோன்ற பண்பாடு அவசியமாகும். பிற நாட்டின் படையெடுப்பாலும் சமயங்களாலும் இடம்பெயர்தலாலும் இந்தி யா, இலங்கை போன்ற நாடுகளின் பழைய பண்பாடு நாகரீகம் குழம்பவும், மொழி கலைத் துறைகளில் கலப்புச்சிதைவும் ஏற்பட்டதாக அறிகுறிகள் உண்டு.

நோபல் பசு பெற்ற இந்திய மகன் இரவீந்தி ரநாத் தாகூன் கூற்றை இரை மீட்டுப் பார்ப்பது பொருத்தமாகும். ““பாரதத் தாயே நாம் உனக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். அன்னியர் தாக்கங்களுக்கு மத்தி யிலும் இயற்கை அழிவுகள் மத்தியிலும் பாரத கலஷசாரத்தை பாதுகாத்து வந்த தாயே, உனக்கு சிரம் தாழ்த்தி மனதார வாழ்த்துகி றோம்'' இரண்டு, மூன்று சகாப்தங்களுக்கு முன்பு மாணவர்கள் தமது தேவைகள் சம்பந்தமான கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு சாம பேத முறைகளைக் கையாண்டார்கள்.
ஆனால் இன்று உயர்தர மாணவர்கள், சர்வ கலாசாலை மாணவர்கள் சில சமயங்களில் மனத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவறைகளைக் கையாண்டு உள்ளார்கள். சகம் இதற்கு காரணமாகுமென்பதை மறைக்க டி யாது. தேர்தல் காலங்களில் காணப்படும் குறைபாடுகள் அகற்றப்பட வேண்டும். இழிவான நாவல்கள், தொலைக்காட்சி, கேலி சித்திரங்கள், சினிமா, இணையம் போன்ற ஊடகங்கள் வர்த்தக நோக்கங்களுக்காக ஹிம்சை, ஆபாசம் நிறைந்த காட்சிகளைப் படைத்து வருகின்றன.  இவைகள் மனதில் முரண்பட்ட உணர்வு களை ஏற்படுத்தி வருகின்றன. நவீன இயந்திவியல், மனிதனை இயந்திரமாக மாற்றி சிந்தனா சக்தியை மழுங்கடித்து வருகிறது. தனித் தன்மை, படைப்பாற்றல், ஆழ்ந்த சிந்தனை ஆகியவை மனிதனை விட்டு விலகிய வண்ணள்ளன. ஆன்மிகப் பமாணத்தை வெளிக் கொணரும் பண்பை நாம் வளர்க்க வேண்டும்.

கல்லூரிகளை சர்வகலாசாலைகளை நிர்வகிப்பவர்கள் தூர நோக்கோடு வருன் காப்போம் என்ற கொள்கைக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் வாதிகளின் ஆதரவு அவசியமாகின்றது. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குமை, சகப் பண்பாட்டு வளர்ச்சிக்காக, ஜனநாயக, தத்து வத்தை அறிந்து உணர்ந்து உபயோகிப்பதற்காக அறிகம் செய்யப்பட்டதை யாவரும் அறிவர். எமது நாட்டின் வளர்ச்சி வருங்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் உண்டு என்பதால் அவர்கள் மத்தியில் நற்பண்புக்குரிய நல்ல விதைகளை விதைக்க வேண்டும். விதைக்க வேண்டுமே தவிர, புதைத்து விட்டு, ளைக்கவில்லை என்று கருதுவதில் பயனில்லை. மனித சத்திரம், காலா காலம் தொடர்ச்சியான நற்சிந்தனைகளால் உருவாக் கப்படுகிறது என்பது சான்றோர் கூற்று.

இயற்கையாக பல புதிர்கள் உண்டு. இயற் கையின் போர்வையை நீக்கி மர்மங்களை ஆராய்ந்து அறிதல் எமது கடமையாகும். இல் லாவிடின் நாம் பின் தங்கியவர்களாவோம். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தி விடை காண வேண்டும்.

தமிழ் இலக்கியமும் பண்பாடும்
எமது பண்டைய இலக்கியங்கள் பண்பின் சிறப்பை பல் பமாணங்களில் விளக்கி யுள்ளன. எமது பண்பாடானது நீண்ட வரலாற் றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. இவை தேசிய வாழ் விற்கு ஆதாரமாக நிற்பவை.

எமது பண்பாடு தான் எமது தேசத்தின் உயிர். எமது இனத்தின் ஆன்மா எமது உயிர் கள் அழிந்தாலும் உடமைகள் அழிந்தாலும் எமது இனத்தின் இதயமாக இயங்கும் பண் பாட்டு வாழ்வை எவராலும் அழித்து விட டி யாது. அன்பை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி அவைகளின் கலை, கலாசார பண்பாட் டியல், செழுமைகளை உலகிற்கு அறிகப்ப டுத்த எடுத்த யற்சி பாராட்டுக்குயது.
அகப் பொருள் பற்றிய தமிழ் இலக்கியச் செல் வத்துக்கு இணையான இலக்கியத்தை வேறு எம்மொழியிலும் காண்பது கடினமாகும்.
தமிழ்ப் பண்பாடு அன்பிலே தோன்றியது என் பதை இலக்கிய நூல்கள் நன்கு நயம்படக் காட்டுகின்றன. உதாரணம் திருக்குறள் பண் பாட்டின் களஞ்சியமாக விளங்குகிறது. எமது பண்பாடு எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசம் நேசம் தேசியப் பற்றுணர்வுகளும் பணாமம் பெறுகிறது.

உலகத்திலே கூடுதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் (சமய நூல்கள் தவிர) திருக்குறளேயாகும். கலாசாரம் உடலுக்கும், மனதுக்கும் உணவாகும். பண்பற்ற மனம் உலர்ந்த அப்பிள் பழத்துக்கு சமமாகும்.

உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி “அல் பேட் சுவைற்சர்'' கூற்றைக் குறிப்பிடுவது சாலவும் பொருத்தமாகும்.

““உலக இலக்கியத்திலே இந் நூலைப் போல சிறந்துயர்ந்த ஞானத்தைக் கொண்ட நூல் வேறில்லை'' (ஆதாரம்: The Development Indian Though) பண்பாடு சம் பந்தமான நூல்களும் கலைகளும் அதிகமாகப் படைக்கப்பட்டு வெளி வர வேண்டும். கலை என்பது மக்களை மகிழவைக்கும் படைப்பின் ஒரு நுட்பமாகும். இன்பம் என்பது நாடகம், சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகளில் உபஉற்பத்தி (By Product) பொருட்களாகும். மேலும் இயற்கையும் இலக்கியம் எமது கற் பனையை வளர்க்கக் கூடியவை. உணர்ச்சி களை எண்ணங்களை வெளியிட்டு மகிழ்வது மனிதனின் இயல்பு அல்லது அவா எனலாம். மனம் நல்ல றையில் இயங்கி மக்கள் பண்பு வளர அறிவு, உணர்ச்சி, முயற்சி ஆகிய உளக் கூறுகள் ன்றும் ஒன்றை விட்டு ஒன்று நீங்காமல் இயங்க வேண்டும்.

பண்பாட்டைத்தமிழால் வாழ்க்கை நன் நெறிகளால் அணிபுனைந்து சிறப்பாக வளர்க்க வேண்டும். மொழியின் துணையின்றி ஒரு நாடு நாககம் ஆகவும், வசதியாகவும் வாழ்வதது. மொழி என்பது தேசிய தேவையாகும். மொழி ஒருவனின் இனத்தை சுட்டிக்காட்ட வல்லது. மொழியை அடிமைப்படுத்திக் கொண்டால் தேசிய அடிப்படை சிதைவடையும். ஆங்கிலத்தை அரச நிர்வாக மொழியாக்கியதன் லம், ஆங்கில ஆட்சியாளர் அதையே எதிர்பார்த்தனர். மொழி மக்களின் எண்ணக் கருத்துக்களை வெளியிடுவதற்கு மட்டுமின்றி எண்ணுவதற்கும் கருவியாக உள்ளது.

முன்னோரின் அறிவுச் செல்வங்கள் மொழி வாயிலாகப் போற்றப்பட்டு வருகின்றன. இதனால் பண்பாடு பரந்து வளரவும் பயனைக் கொடுக்கவும் உதவுகிறது. உண்மை, நம் பிக்கை அறம் என்றப்பெரும் பண்புகள் உள. இவற்றுள் மிகச் சிறந்தது அறம் என்றும் திருக்குறள், விபிலிய நூலும் கூறுகின்றது.

வரையறுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு முறை அறமாகும். இரட்டைக் காவியமான மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றிலும் அறிவியல் மிக தெளிவாக கூறுகிறது. பண்பின் அடிப்ப டையிலே எழுந்து ஓங்கும் இனிய ஆட்சி அறம். இயற்கை விதித்த இனிய விதியிலே எள்ளவும் வழுவாது வாழும் நெறியே அறம் ““மனத்துக் கண்மாசிலனாதல் அனைத்தறன்'' இது வள்ளுவர் கூற்று. மேலும் அறம் உல குக்கு பொதுவானது. சாதி, நாடு, இனம், மொழி, நிறம் தலிய கட்டுப்பாடுகளிலி ருந்து விலகி நிற்பது அறம். மனித மனமாகாது வானத்தே தியும் வானம்பாடி போன்றது.
““அறத்தால் வருவதே இன்பம்'' இவ்வாறு அறத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
மேற்கத்தைய நாடுகளும் வல்லரசுகளும் அறமாகிய பண்பின் மகிமையை அறிவதற்கும் உணர்வதற்கும் பல நூற்றாண்டுகள் எடுத்தன. பண்பு, பண்பாட்டின் மகிமையை உணர்ந்து 1945 இல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை ஸ்தாபித்தார்கள்.

பண்பால் உயர்ந்த உள்ளங்கள் உறங்குவதில்லை. உயர் விழுமியங்கள் விழிப்படையத் தவறுவதில்லை என்பது புலனாகிறது.

நன்றி வீரகேசரி 


கருத்துரையிடுக