பல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப்படி ?


ஸ்டார் டோபாலாஜி - ன்னா என்ன ? அந்த முறைல பல கணினிகளை எப்படி இணைக்கலாம், அதுக்கு என்னென்ன உப பொருட்கள் வேணும்னு முந்தைய பதிவுல பார்த்தோம். ஒரு ஈதர்நெட் ஸ்விட்ச்சை மையமா வச்சு, அதில் ஒவ்வொரு கணினியையும் ஈதர்நெட் போர்ட் - மூலமா இணைக்கலாம்.




கணினியையும், ஸ்விட்ச்சையும் நெட்வொர்க் கேபிள் (சாதரணமா CAT-5 கேபிள் உபயோகிப்போம்) மூலமா இணைக்கணும். இணைக்க பயன்படுத்துற கேபிளோட இரண்டு முனைகள் - ளயும் நேரிணைப்பு முறையில க்ரிம்ப் பண்ணிக்கங்க. (அதாவது இரண்டு பக்கமும் ஒரே நிற வரிசைல - போன பதிவுல சொன்ன குறிப்பை மனசுல வச்சுக்கங்க. நாம இப்போ இரண்டு வேறு விதமான டிவைஸ்களை இணைக்கப்போறோம்.)

நாம இப்போ 5 கணினிகளை இணைக்கப்போறதா வச்சுக்கங்க. நேரிணைப்பு முறைல தேவையான நீளத்துல 5 கேபிள் துண்டுகளை ரெடி பண்ணிக்கங்க.

இப்போ கீழ உள்ள படத்துல காட்டியிருக்கற மாதிரி ஈதர் நெட் ஸ்விட்சுலயிருந்து ஒவ்வொரு கணினியையும் தனித்தனி கேபிள் மூலமா இணைங்க.

ஹார்ட்வேர் பகுதி வேலைகள் முடிஞ்சுது. இனிமே சாப்ட்வேர் வேலை மட்டும்தான். ஒவ்வொரு கணினியிலும், செட்டிங்க்ஸ் மாத்தணும். மாத்திட்டா எல்லா கணினிகளையும் நெட்வொர்க் மூலமா இணைச்சுடலாம்.

கணினியில் செய்ய வேண்டிய மாறுதல் அமைப்புகள் (change settings).

அதுக்கு முன்னால இந்த பதிவை படிச்சுட்டு வந்துருங்க .

முந்தைய பதிவுல சொல்லிருக்கற மாதிரி ஒவ்வொரு கணிப்பொறிக்கும் தனித்தனி ஐ.பி.முகவரி (IP Address) உருவாக்குங்க.

உதாரணத்துக்கு கீழே சொல்லிருக்கற மாதிரி ஐ.பி. முகவரி அமைச்சுக்கங்க.

கணினி - 1 - 192.168.0.1
கணினி - 2 - 192.168.0.2
கணினி - 3 - 192.168.0.3
கணினி - 4 - 192.168.0.4
கணினி - 5 - 192.168.0.5

இப்போ நாம உருவாக்குன சின்ன நெட்வொர்க் - கை சோதிச்சு பார்ப்போம்.

எதாவது ஒரு கணினியில், (உதரணத்துக்கு, 3 வது கணினியிலிருந்து) ஸ்டார்ட் (Start) பட்டனை க்ளிக் பண்ணி, ரன் (Run) செலெக்ட் பண்ணிக்கங்க. அதில் வரக்கூடிய ப்ராம்ப்ட் (Prompt) - ல,

ping 192.168.0.2

அப்டீன்னு கொடுங்க. இப்போ இரண்டு கணினியும், நெட்வொர்க் - ல இருந்தா, சரியான இடைவெளிகள் - ல,

Reply from 192.168.0.2: bytes=32 time<1ms ttl="128

இது போல ரிப்ளை வரும்.

இது போல ஒவ்வொரு கணினியிலும் செக் பண்ணி பாருங்க. சரியா ரிப்ளை வந்தா, நெட்வொர்க் பண்ணி முடிச்சாச்சுன்னு அர்த்தம்.

இந்த மாதிரி இல்லாம,

Request Timed out.
Destination host unreachable.

மாதிரியான ரிப்ளை வந்தா, நம்மோட நெட்வொர்க் - ல ஏதோ தவறு இருக்குன்னு அர்த்தம். மறுபடியும் ஒவ்வொரு கணினியிலும் செட்டிங்ஸ் செக் பண்ணி பாருங்க.


பயனுள்ளதா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். நிறைய பேருக்கு இந்த தகவல் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க பயனடையட்டும்னு எழுதிருக்கேன்.
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன்.

கருத்துரையிடுக