Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

18 ஜூன், 2010

பியானோ உங்கள் கீ போட்டில் முயற்சி செய்து பாருங்கள்

பியானோ வாசிப்பதில் குழந்தைகளுக்கு அலாதி இன்பம். எனது மகனும் ஆசைப்பட்டான் என 100 ரூபாயில் ஒன்று வாங்கிதந்தேன். கொஞ்சநாளில் அது காலி..சிறிது நாள் கழித்து மீண்டும ஒன்று கேட்டு அடம் பிடித்தான்.உடைக்காமல் ஒழுங்காக வைத்துவிளையாடவேண்டும் என சொல்லி கொஞசம் விலை அதிகமாக 700 ரூபாயில் வாங்கி தந்தேன். வழக்கப்படி அதையும் ரிப்பேர் செய்துவிட்டான். அவனுக்கு பியானோவும் வாங்கி தரனும்  ரூபாயும் செலவாக கூடாது என யோசித்தபோதுதான் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 98 கே.பி அளவுள்ள இது சிறந்த வேலையை செய்கின்றது. இதைபதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.

இதில் Voice என்கின்ற விண்டோவினை கிளிக் செய்தால் சுமார் 130 ஒலிகளின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவரும்..பறவைகள் சத்தம்.டெலிபோன் ஒலி.புல்லாங்குழல் ஒலி.என என்னற்ற ஒலிகள் உள்ளது.நமக்கு விருப்பமான ஒலியை தேர்வு செய்து நமது கீ போர்டில் கீ களை அழுத்த ஒவ்வொரு கீ-கும் அதற்கேற்ற ஒலி ஒலிக்கின்றது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


அப்புறம் என்ன- .இன்ஸ்டால் செய்து குழந்தைகளை விளையாட விடுங்கள். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக