உங்கள் விருப்பம் போல் அலாரத்தில் பாடல்களை போட்டு மகிழ உதவும் இது

இன்றைய பதிவில் திரைப்பட பாடலைஅலாரமாக செட் செய்வதை பார்க்கலாம். வழக்கப்படி அலாரம் அடித்தால் நமக்கு விதவிதமான ஒலிகள் தான் கிடைக்கும் இந்த சாப்ட்வேரில் நாம் தட்டச்சு செய்த வாக்கியம் அலராமாக குரலில் ஒலிக்கும். நமது குரலில் பேசி அதை அலாரமாக ஒலிக்க செய்யலாம். திரைப்பட பாடலை அலாரமாக ஒலிபரப்ப செய்யலாம். சரி...இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 12 எம்.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே...

நீங்கள் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் முதலில் உள்ள Set Alarm கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் நேரத்தையும் தேதியையும் பூர்த்தி செய்யுங்கள்.Enter the Reminder Test ல் உங்களுடைய டெக்ஸ்டை தட்டச்சு செய்யுங்கள்.குறிப்பிட்ட வேலையை உங்களுக்கு நினைவுபடுத்த அந்த வேலையை தட்டச்சு செய்து வைக்கலாம்.சரி..உங்களுக்கு டெக்ஸ்ட் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிய ஆடியோ அல்லது திரைப்பட பாடல்கள் வேண்டும் என்றாலும் இதில் செட் செய்து கொள்ளலாம். 

Use Music or sounds to remind me என்பதின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு Select MP3 File or Select Wave File என்பதை தேர்வு செய்து பாடலையோ உங்கள் பேச்சையோ செட் செய்யுங்கள்.மேலும் Daily Alarm என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கிழமையையும் டெக்ஸ்டையும் - பாடலையும் விருப்பபடி தேர்வு செய்யலாம்.Advance Alarm செட் செய்து வேவேறு தேதிகளையும் செட் செய்திடலாம். இதனால் திருமணம் - பிறந்த நாள் - முக்கிய நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்து நமக்கு நினைவுட்டும் படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதில் 2999 வரை காலண்டர் உள்ளது.(அதுவரை இருப்போமா.?) கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதில StopWatch  உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள் ஸ்டாப்வாட்ச் தேவைபடும் போது உபயோகித்துக்கொள்ளலாம். 

Active Alarm கிளிக் செய்வதன் மூலம் நாம் செட் செய்த தை பார்க்கலாம். தேவைபட்டால் ரீ - செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதில உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான வசதியை பெற இங்குள்ள ரேடியோபட்டனை கிளிக்செய்வதன் மூலம் பெறலாம்.

Select the charactor மூலம் நான்கில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.அதைப்போல கெடிகாரத்தின் டைப்பை மாற்றிக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோக்களை பாருங்கள்.

பயன்படுத்தி பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.

கருத்துரையிடுக