கையடக்க வடிவ மென் தொகுப்புகள் ( Portable software )


முன்பே சில பதிவுகளில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.


கையடக்க வடிவ மென் பொருள் என்பது, நமது கணினியில் நிறுவாமல் அப்படியே உபயோகப் படுத்தும் மென் தொகுப்புகள் ஆகும்.

இது பின் வரும் தருணங்களில் உதவியாக இருக்கும்.

1 . உங்களுக்கு நிர்வாகிக் கணக்கு ( Administrator Account )  இல்லாமல் இருக்கும் கணினியிலும் மென் தொகுப்பைப் பயன் படுத்தலாம்.
2 . உங்கள் கணினியில் நிறுவுவது பின் எடுப்பது போன்ற தொல்லைகள் இல்லை. கணினியின் registry யும் பாழா காது . நேரடியாக பயன் படுத்தலாம்.
3 . நாளடைவில் உங்கள் கணினி வேகம் குறையாமல் இருக்கும்.
4 .நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினி பயன் பட்டளராக இருந்தால் ஒவ்வொரு கணினியிலும் உங்களுக்குண்டன மென் தொகுப்புகளையும் அதன் அமைப்புகளையும் ( settings ) ஒன்றாக வைக்கலாம்.
5 . ஏறக் குறைய ஒரு மடிக் கணினி போல உங்கள் Pen Drive ஐ பயன் படுத்தலாம்.

இணையத்தில் தேடினால் ஏராளமான மென் தொகுப்புகள் கிடைக்கின்றன. இருந்தாலும் பதிப்புரிமை பெற்ற மென் தொகுப்புகளை சட்ட ரீதியாக அவ்வாறு செய்ய கூடாது.

இதில் தான் திறந்த மென் மூலம் ( Open source )  உதவிக்கு வருகிறது. அந்த மாதிரி உள்ள மென் பொருட்களை இவ்வாறு எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம்.

கீழ் கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

http://portableapps.com/

http://www.portablefreeware.com/

http://www.pendriveapps.com/

http://portableappz.blogspot.com/

கருத்துரையிடுக