18 ஜன., 2010
யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்க
ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம் தகவல்களை பரிமாரிக்கொள்ள பிளாப்பியை உபயோகித்து வந்தோம். 1.44 எம்.பி. கொள்ளளவு கொண்ட பிளாப்பி சுமார் ரூ.15-லிருந்து ரூ25 வரை விற்றுக்கொண்டிருந்தது. சி.டி.வாங்க வேண்டுமானால் 70-80 ரூபாய் ஆகும். ரீ-ரைட் டபிள் சி.டி. 125 ரூபாய் ஆகியது. காலங்கள் மாறியது.
சி.டி.யே இப்போது 8 ரூபாய்க்கும் -டி.வி.டி. ரூபாய் 10-லிருந்
தும் கிடைக்கின்றது. ரீ-ரைட்டபிள் டி.வி.டி. ரூபாய் 45 க்கு
கிடைக்கின்றது. சரி அதையெல்லாம் விடுங்க. பலமுறை
அழித்து - மீண்டும் எழுத இப்போது பரவலாக பென் டிரைவ்
கிடைக்கின்றது. 4 ஜி.பி. கொள்ளளவே சுமார் 450 ரூபாய்க்கு
கிடைக்கின்றது. பிளாப்பி-சி.டி.-டி.வி.டி- என மாறியவர்கள்
இப்போது பென்டிரைவ்க்கு மாறி வருகின்றார்கள்.
கம்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் யு,எஸ்.பி. போர்ட்டை
இப்போது கம்யூட்டருக்கு முன்புறம் பொருத்துமாறு தயாரிக்
கின்றார்கள்.பென்டிரைவ் தவிர டிஜிட்டர் கேமராக்கள்,
ஐ -பாட்கள்,பிரிண்டர்கள் ,பிளேயர்கள் என அனைத்தும்
பிளக் அண்ட் பிளே வகையில் சொருகி பின் எடுதது
செல்லும் வகையில் அமைந்துள்ளது. தேவைப்படும் சமயம்
அதை சொருகி பயன்படுத்தலாம். ஆனால் நினைத்தஉடன்
அதை வெளியே எடுக்க கூடாது. இது சில இழப்புகளை
நமக்கு உருவாக்கும். யு,எஸ்.பி்.போர்டில் எப்போதும்
குறைந்த அளவு மின்சக்தி இருக்கும். இதை எடுத்தேன்
கவிழ்த்தேன் என நாம் எடுக்கும் சமயம் மின்ஒட்டம்
பாதிக்கப்பட்டு கம்யூட்டரில் பரவும். நமது தகவல்கள்
அழிந்து போகும். டிரைவ் கொடுவதோடு அல்லாமல்
நமது இதர சாதனங்களான பிரிண்டர்-கேமரா - பிளேயர்
என அனைத்தும் ஈடு செய்ய இயலாத அளவு பாதிக்கப்படும்.
இது நமக்கு தேவையா...அதனால் வரும்முன்
காப்பதே நல்லது. இனி யு,எஸ்.பி.சாதனங்களை எப்படி
முறையாக கையாளலாம் என பார்க்கலாம்.
யு.எஸ்.பி.போர்டில் நாம் சாதனத்தை இணைத்ததும்
சிஸ்டம் டிரேயின் அடிப்பாகத்தில் நமக்கு நாம்
இணைத்துள்ள சாதனத்தின் ஐ-கான் தெரியும்.
நமது வேலைகள் முடிந்ததும் அந்த ஐ-கான் மீது
கர்சரால் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Stop கிளிக் செய்தபின உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும்.
இப்போது ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்கள் சாதனத்தை வெளியே எடுத்துக்
கொள்ளலாம்.இவ்வாறு முறையாக செய்வதினால் நமது
தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் சாதனங்களும் பழுதாகாது.
அடுத்த முறை யு,எஸ்.போர்டில் எந்த சாதனத்தையும்
இணைத்து அதை நீக்கும்போது இந்த தகவலை நினைவில்
வையுங்கள்.
Recommended Articles
- USB drive
USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...Jun 23, 2010
#fullpost{display:inline;} உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) ...
- USB drive
"USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!Jan 20, 2010
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை கேமராவில் ஃபிலிம் போடணும் பின் அதை சரியாக இணைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும், இல்லை...
- Hardware
யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்கJan 18, 2010
ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம் தகவல்களை பரிமாரிக்கொள்ள பிளாப்பியை உபயோகித்து&...
- USB drive
My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்கDec 24, 2009
Windows XP -ல் மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card ஐ காண்பிக்க வில்லை ...
Newer Article
"USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!
Older Article
Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக