Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

14 டிச., 2009

உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க


நம் இணையபக்கத்தில் என்னதான் புதுமை செய்தாலும்

சிறிது நேரத்தில் நம் இணையதளத்தை பார்ப்பவர்கள்
சோர்ந்து விடக்கூடும். அப்போது அவர்கள் மூளையை
Refresh- செய்ய அறிவை பயன்படுத்தி விளையாடும்
சில விளையாட்டை வைக்கலாம். ஆனால் விளையாட்டு
அனைத்தும் நாம் விரும்பும்படி அமைக்க முடியாது.
அது மட்டுமின்றி விளையாட்டை வைத்தாலும் இனையதளம்
முழுவதும் தெரிய சில நிமிடம் வரை எடுத்துக்கொள்ளும்.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம்
விரும்பும்படி விளையாட்டை உருவாக்கலாம். அதுவும் இலவசமாக.
இதில் வெற்றிபெற்றால் உடனே ஒரு சர்டிபிக்கேட்டும் கொடுக்கப்படும்
இதை உங்கள் Twitter , Facebook , Myspace நண்பருடன்
பகிர்ந்தும் கொள்ளலாம்.
விளையாட்டு வகைகள் :
* படத்தை சரியான இடத்தில் பொருத்துதல்
*குறுக்கெழுத்து
*வார்த்தையை கண்டுபிடித்தல்
*வார்த்தை தேடல்
எப்படி இதை உருவாக்கி உங்கள் இனையதளத்தில் சேர்க்கலாம்
என்பது பற்றிபார்ப்போம். உதவிக்கு மேலே உள்ள படத்தை
பார்த்துக்கொள்ளவும்.
http://www.proprofs.com/games/ இந்த இணையதளதில் இலவசமாக
ஒரு கணக்கு பதிவு ( Register )  செய்து கொள்ளவும். அதன் பின்
“Create A Game ” என்ற பட்டனை அழுத்தி எந்த விளையாட்டு என்பதை
தேர்வு செய்யவும். உதாரணமாக நாம் ” படத்தை சரியான இடத்தில்
பொருத்துதல்” ( Create A Sliding Puzzle ) என்பதை எடுத்துள்ளோம்.
Create Your Own Sliding Puzzle Game விண்டோ இப்போது ஒபன் ஆகும்
இதில் நீங்கள் உங்கள் கம்யூட்டரில் உள்ள எதாவது ஒரு படத்தை தேர்வு
செய்த்து அப்லோட் செய்யவும். ”Create my Sliding Puzzle” பட்டனை அழுத்தவும்.
இப்போது “Game Title “, “Description” ,” Tags” படம் -2 ல் உள்ளவாறு
உங்கள் விருப்பபடி கொடுக்கவும். ” Save my Game ”  என்ற பட்டனை
அழுத்தினால் விளையாட்டு ரெடியாகிவிடும்.
அதன் பின் ” embed on your blog or website “ பட்டனை அழுத்தி
வரும் கோடிங்கை காப்பி செய்து உங்கள் இணையபக்கத்தில்
சேர்த்துவிடவும்.
நாம் உருவாக்கிய விளையாட்டின் முகவரியை இத்துடன் இனைத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக