நமக்கே தெரியாமல் நாம் பல சாதனைகளை செய்து
கொண்டிருக்கிறோம். நாம் நன்றாக ஒவியம் வரையலாம் ,
பாட்டு பாடலாம்,இசைவாத்தியங்கள் வாசிக்கலாம்.
உடற்பயிற்ச்சி செய்து நம் உடலால் கார் போன்றவற்றை
இழுக்கலாம், புரோகிராம் எழுதுவதில் கெட்டிக்காரராக
இருக்கலாம் , ஞாபகசக்தியில் சிறந்து விளங்குபவராக
இருக்கலாம், தியானம் செய்வதில் சிறந்தவராகவும்
இருக்கலாம், புதுசு புதுசாய் எதாவது கண்டுபிடிப்பவராகவும்
இருக்கலாம்,நாம் செய்யும் இதெல்லாம் கின்னஸ் ரெக்காடில்
வருமா என்ற சந்தேகம் வேண்டாம். நீங்கள் எந்த துறையை
சேந்தவர்களாக இருந்தாலும் அந்த துறையின் சாதனையும்
சாதனையாளர்களையும் பார்க்கலாம்.
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் “ தில் தில் மனதில் “
என்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் இதில் பாதிக்கு
மேற்பட்டோர் கின்னஸ் ரெக்காடில் இருக்க வேண்டியவர்கள்
என்றே தோன்றுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த கின்னஸ்
ரெக்காடில் நம் சாதனையை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
www.guinnessworldrecords.com இந்த இணையதளத்திற்கு சென்று
” SET RECORD ” என்ற மெனுவை அழுத்தி வரும் பக்கத்தில்
“Register ” என்ற பட்டனை அழுத்தி படம் 1 ம்ற்றும் படம் 2 -ல்
காட்டியபடி உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.
“ FIND RECORD ” என்ற மெனுவை அழுத்தி முந்தைய சாதனையை
பார்க்கலாம். எப்படி அந்த சாதனையை முறியடிக்கலாம் என்று
பார்க்கலாம். உங்கள் சாதனையை வீடியோவில் பதுவு செய்து
அப்லோட் செய்யலாம். நம் நாட்டுக்காரர் யாராவது இருக்கிறாரா
என்று தேடிய போது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டதில்
ஒருவ்ர் ஆயில் பெயிண்டிங் ஒவியத்தில் சாதனையை பதிவு
செய்துள்ளார் என்று பார்த்தோம் மகிழ்ச்சி.
2010 சாதனையாளர்கள் பட்டியலில் நம் நாட்டுக்காரர்கள்
அதிகம் பேர் இருக்க வேண்டும் என்பதே நம் நோக்கம்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக