Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி

  - பாகம் 1



ஜிமெயில் வசதிகள் பலவும் நாம் அறிந்ததே.ஜிமெயில் நமக்கு மேலும் ஒரு சிறப்பான வசதி அளிக்கின்றது.மற்ற மின்னஞ்சல் வழங்கிகளான யாஹூ மெயில்,ஹாட்மெயில்,AOL போன்றவற்றில் இருந்து தொடர்புகள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை உங்கள் ஜிமெயில்
முகவரிக்கு இறக்குமதி செய்யும் வசதியை தருகின்றது.

இதை இரண்டு பாகமாக எழுதுகிறேன்.முதல் பாகத்தில்
ஹாட்மெயிலில் இருந்து எப்படி இறக்குமதி செய்வது என்று பார்ப்போம்.

ஹாட்மெயில் -> ஜிமெயில் :

1.ஜிமெயில் login செய்யவும் .
2.Settings --> Accounts And Import



3.Click Import mail and contacts.



4.Type your hotmail Account Name and Click Continue.




5.Type your hotmail password and click continue.



6.Click Start Import.
7.Click ok.

அவ்வளவுதான்,இறக்குமதி தொடங்கிவிடும் உங்கள்
ஹாட்மெயில் கணக்கில் சேமித்து வைத்திருக்கும்
மின்னஞ்சல்களை பொறுத்து,தரவிறக்க நேரம் மாறுபடும்.
இதன் மூலம் உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள
எல்லா தகவலையும் ஜிமெயில் முகவரிக்கு தரவிறக்கலாம்.

அடுத்த பாகத்தில் யாஹூ மெயில் இறக்குமதி...

(பி-கு)
உங்கள் ஜிமெயில் கணக்கில் எவ்வளவு இடம் காலியாக உள்ளது
என்பதனை பார்க்கவும் ,ஏனென்றால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
தகவல் சேமிக்கும் இடத்தில் உங்கள் ஹாட்மெயில் கணக்கில்
உள்ள தகவல்கள் அடங்க வேண்டியது அவசியம்.

கருத்துரையிடுக