Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

30 அக்., 2009

பிரச்சனை உங்க பக்கமா? கூகிள் பக்கமா?


போன வாரம் செவ்வாய்க்கிழமை, கூகுளின் ஜீமெயில் திடீர்னு உடம்புக்கு முடியாம சுமார் 3 மணி நேரம் படுத்துகிச்சி.


ஜீமெயில் பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதாலோ என்னவோ, அய்யாவுக்கு லோடு தாங்க முடியலே போல இருக்கு.


ஜென்டில்மேனா "ஸாரி" சொன்ன கூகிள், காசு கொடுத்து ஜீமெயில் பயன்படுத்துபவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக ஒத்துக்கொண்டது .

பின்னே சும்மாவா. ஜீமெயில், 99.9 சதவீதம் சேவையில் பிரச்சனை வராது. இல்லேன்னா பணம் வாபஸ்ன்னு கேரண்டி கொடுத்துதானே காசு வாங்குச்சி.

இந்த கேரண்டி “கூகிள் அப்ஸ்” (Google Apps) packageலே இருக்கும் கூகிள் கேலண்டர், கூகிள் டாக்ஸ், கூகிள் Talk போன்ற மற்றதுக்கும் பொருந்தும்.

நம்மள மாதிரி ஓசியில் ஜீமெயில் பயன்படுத்துறவங்களுக்கு refund இல்லீங்ணா! ஹிஹிஹி!

அது மட்டும் இல்லாமே, என்னை மாதிரி ”ஜீமெயில் வரலையே, ஜீமெயில் வரலையேன்னு” கீ போர்டுலே F5 கீயே உடைஞ்சு போற அளவுக்கு அடிக்கடி refresh செய்து பார்த்தவங்க வயித்தெரிச்சலை இனிமேலாவது கொட்டிக்கக் கூடாதுன்னு ஒரு “கூகிள் சர்வீஸ் ஸ்டேடஸ் பக்கம்” ஒன்று ஆரம்பித்து இருக்கிறது.

















இதுலே போய் பார்த்தால் பிரச்சனை யார் பக்கம்னு க்ளீனா தெரிஞ்சிடும். அப்புறம் எதுக்கு F5 (Refresh) க்கு கொட்டு கொட்டு.

இதுதான் சமயம்னு ”ஜீமெயில் லேப்ஸ்” கண்டுபிடிப்பான ”ஆஃப்லைன் ஜீமெயிலை” பயன்படுத்தலாமேன்னு கூகுளோட யோசனை வேறே.

அது பயன்படுத்தினால் கனக்‌ஷன் இருக்கோ இல்லியோ, மெயில் அடிச்சு outboxலே போட்டு வெச்சுக்கலாம். கனக்‌ஷன் வந்தவுடனே தானா மெயில் ஆயிடும்.

அது வேணும்னா ஜீமெயிலே Settings -> Labs போய் enable பண்ணிக்குங்க.


வரட்டுமா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக