உங்கள் உலவியை திறந்து கொண்டு, அதன் அட்ரஸ் பாரில் 192.168.1.1 என்ற ஐபி அட்ரசை டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது வரும் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுங்கள். (இணைய கணக்கின் பயனர்/கடவுசொல் அல்ல. ரூட்டருடையது வழக்கமாக பல ரூட்டர்களின் default பயனர் பெயர் admin கடவு சொல்லும் admin என்பதாகவே இருக்கும்.
பிறகு Administration -> Management சென்று Router Password மற்றும் Re-enter to confirm field களில் கடவு சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.
இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்.
ஒவ்வொரு Ethernet Adapter க்கும், அதற்கான 12 இலக்க Unique Identifier உண்டு. இதனை MAC Address என அழைக்கிறோம். (MAC - Media Access Control) இதனை அடிப்படையாக கொண்டுதான் அனைத்து நெட்வொர்க் களும் ஒரு குறிப்பிட்ட கணினியை நெட்வொர்க்கில் அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறது.
நமது கணினிக்கான MAC Address ஐ கண்டறிய,
Start > Run. சென்று cmd என டைப் செய்து என்டர் கொடுங்கள். இனி திறக்கும் command prompt இல் ipconfig /all. என டைப் செய்து என்டர் கொடுங்கள். பிறகு திரையில் Ethernet Adapter Wireless Network Connection. என்ற பகுதியில் மூன்றாவதாக Physical Address. என்பதற்கு நேராக இருக்கும் MAC அட்ரசை குறித்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக 00-A0-C9-14-C8-29)
இனி உங்கள் ரூட்டர் மெனுவில் Wireless > MAC Address > Wireless Mac Filter. சென்று Enable என்பதை கிளிக் செய்து Permit only PCs listed to access the wireless network option, மற்றும் Edit MAC Filter என்ற List button ஐ கிளிக் செய்து, நீங்கள் குறித்து வைத்துள்ள MAC Address ஐ டைப் செய்யுங்கள். பிறகு சேமித்துக் கொள்ளுங்கள்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த எந்த கணினிகளின் MAC address களை கொடுக்கிறீர்களோ, அந்த கணினிகளை தவிர வேறு கணினிகள் மூலமாக வயர்லெஸ் தொடர்பை உருவாக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக