பிரிண்ட் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக பிரிண்ட் மற்றும் பி்டிஎப் பைலாக மாற்ற

 



நாம் ஸ்கிரீனில் சில படங்கள் - டாக்குமென்ட்கள்

சில பைல்கள் பார்ப்போம். அதை பிரிண்ட் எடுக்க

பிரிண்ட் ஸ்கிரின் கீயை அழுத்தி பின் அதை

பெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் அதை

பிரிண்ட் எடுப்போம். ஆனால் இந்த சாப்ட்வேரில்

நாம் நேரடியாக பைல்களை பிரிண்ட் எடுத்தோ -

பிடிஎப் பைலாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய

இங்கு கிளிக் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.

இந்த சாப்ட்வேரானது Start-லும்

Programme -லும் அமர்ந்து விடும்.

இனி Programme சென்று Print desktop

கிளிக் செய்யுங்கள்.


அதில் உள்ள Properties தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்

ஆகும்.


இதில் உள்ள Shortcut Key யில் நீங்கள்

விரும்பும் Key யை தட்டச்சு செய்யுங்கள்.

நான் F10 தேர்வு செய்துள்ளேன்.

இதைப்போலவே PrintDesktop Landscape

தேர்ந்தெடுத்து அதில் F11 கீயை

தட்டச்சு செய்யுங்கள்.



ரைட் . இப்போது நீங்கள் உங்கள் ஸ்கிரீனில்

பார்க்கும் படத்தை - டாக்குமெண்டை பிரிண்ட்

எடுக்க விரும்பினால் Patriot ல் பிரிண்ட்

எடுக்க விரும்பினால் F10 அழுத்தியும்

Landscape ல் எடுக்க விரும்பினால் F11

அழுத்துங்கள். உங்கள் படம் நொடியில்

பிரிண்டரில் வரும். சரி இதையை நாம்

பிடிஎப் பைலாக்க என்ன செய்வது.



Start- Settings - Printers and Faxs கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Primo PDF -ஐ Defoult Printer- ஆக

தேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இந்த

விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் வரும் Save as இடத்தில் வேண்டிய

டிரைவை தேர்ந்தேடுக்கவும். Create PDF

கிளிக் செய்யவும். உங்கள் படமோ -

டாக்குமெண்டோ பிடிஎப் பைலாக மாறி

விட்டதை காண்பீர்கள்.உங்களுக்காக

இதன் டுடோரியல் படங்கள் கீழே:-





உங்கள் வசதிக்காக பவர்பாயிண்டின் சிலைடு

ஷோவின் லிங்க் இணைத்துள்ளேன்.

இங்கு கிளிக் செய்து பாருங்கள்.

பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

கருத்துரையிடுக