போட்டோ ஐ.டி.சுலபமாக தயாரிக்க




போட்டோஷாப்பின் சென்றைய பதிவில் அதிக எண்ணிக்கையில்
போட்டோவினை பதிவிடுவதைப்பார்த்தோம். இன்று போட்டோஷாப்
உதவியில்லாமல் நமக்கு வேண்டிய அளவில் வேண்டிய எண்ணிக்
கையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்வதை காணலாம்.

இந்த சாப்ட்வேர் டவுண்லோடு செய்ய இங்குகிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேர் வெறும் 2 எம்.பி. அளவுதான். அதனால் தைரியமாக
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இனி இந்த
சாப்ட்வேரை நீங்கள் இன்ஸ்டால் செய்து ஓப்பன்செய்தால்
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Load Picture -ல் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை
தேர்வு செய்யுங்கள்.நான் இந்த குழந்தையின் புகைப்படத்தை தேர்வு
செய்துள்ளேன்.

இதில் உள்ள Options கிளிக் செய்தால் ஒவ்வொரு நாட்டின்
அளவுகள் வரும். நமக்கு தேவையான அளவினை நீங்கள் தேர்வு
செய்து கொள்ளுங்கள்.அடுததுள்ள Translateகிளிக் செய்தால்
வரும் Settings-ல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.

அடுத்துள்ளது Options இதில் நீங்கள் உங்கள் பிரிண்டரின்
வகையினையும், பேப்பர் அளவினையும் செட் செய்யுங்கள்.
அதேபோல் நீங்கள் புகைப்பட அளவும் - புகைப்படமும்
சரியாக இல்லையென்றால் உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை
செய்தி வரும்.

இப்போது நான் இந்த புகைப்படத்தை 13 என்கின்ற எண்ணிக்கையில்
கொடுத்துள்ளேன். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தினால் எண்ணிக்
கைகள் மாறும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இதன் மேல்புறம் உள்ள Options கிளிக் செய்தால் உங்களுக்கு
முறையே Transformஅடுத்து Grayscale மற்றும் Sepia என வரும்.


இதில் உள்ள Grayscale கிளிக் செய்து வந்துள்ள படம் கீழே:-

இதனை ஓ.கே. செய்ததனால் வந்த படம் கீழே.

அதே போல் Sepia கிளிக் செய்து வந்த படம் கீழே:-

அதிக எண்ணிக்கையில் எடுத்த படம் கீழே:-

இந்த புகைப்படங்களை நீங்கள் சேமித்துவைக்கும் வசதியும்
உள்ளது.

புகைப்பட PSD பைல் டிசைன்கள் என்னிடம் நிறைய உள்ளன.
அவற்றை போட்டோஷாப் பதிவில் மட்டும் போட்டால்
என்னிடம் உள்ளது எப்போது காலியாவது - நீங்கள் எப்போது
ஆல்பம் தயாரிப்பது. அதனால் இனிவரும் எனது அனைத்து
பதிவுகளிலும் ஒவ்வொரு டிசைனை இணைத்துவிடுகின்றேன்.
இன்றைய பதிவிற்கான டிசைன்:-

இதன் இணைப்பிற்கான லிங்க் இங்கு கிளிக் செய்யவும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

கருத்துரையிடுக