குற்றம் நடந்தது என்ன!? 1

மேலை நாடுகளில் மிக கடினப்பட்டு கண்டுபிடித்த குற்றங்களை தொகுக்கும் பொருட்டு இந்த பதிவு ஆரம்பமாகிறது, நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!

**

கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் ஒரு பெண், அவளது அம்மா, அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள், ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு என்பதால் அவர்களை துப்பாக்கியால் கொலைகாரன் சுடும்போது யாருக்கு தெரிந்திருக்கவில்லை, ஆனாலும் தடவியல் நிபுணர்கள் அவர்கள் இறந்தது ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான நேரம் என கண்டுப்பிடித்தார்கள், ஆனாலும் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க வெகு சிரமமாய் இருந்தது, காரணம் அங்கு எந்த விலையுயர்ந்த பொருளும் காணாமல் போகவில்லை.

இருந்தாலும் கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்தால் மட்டுமே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியும், விசாரணையில் அந்த பெண்(பெயர் ஜோன் என்று வைத்து கொள்வோம்) மணமாகி விவாகரத்தானவள், அதுவும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தெரிந்தது. கணவன்(வின்செண்ட் என அழைப்போம்) ஒஹியோ மாகானத்தில் குழந்தைகளுக்கான பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலைப்பார்ப்பவர், அவருக்கு ஒரு தம்பியும் உண்டு, மேலும் அவரது உறவினர்கள் அனைவருமே அந்த இடத்தை சேர்ந்தவர்கள் தான், அவரது தாய் மட்டும் அங்கிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்!

கணவனின் நடத்தையை சோதித்ததில் எந்த சந்தேகமும் இல்லை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர் நிச்சயமாக பண்புள்ளவராக இருப்பார் என நம்பினர், மற்ற அனைத்து கோணங்களில் விசாரித்து பார்த்தும் எல்லா பக்கமும் அடைத்தே இருந்தது, ஒரு வார காலம் கழித்து மீண்டும் வின்செண்டிடம் இருந்து பழைய படி விசாரணையை ஆரம்பித்தனர், கொலை நடந்த சமயம் வின்செண்ட் எங்கிருந்தார் என நிறுபிக்க வேண்டியது அவரது கடமை, அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் கொலைநடந்த முதல் நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வின்செண்ட் சொந்த ஊரில் இல்லை என்பது தெரிந்தது! ஆகையால் மற்ற கோண விசாரணைகளை தள்ளி வைத்து முழுமையாக வின்செண்டின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்!

விசாரணையில் தான் வெளியூருக்கு சென்றதாகவும், அங்கிருந்து தனது தாயை பார்க்க சென்றதாகவும் கூறினார்!, வெளியூருக்கு செல்ல அவரிடம் விமான பயணசீட்டும் இருந்தது, பின் அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது தாயாரை பார்க்க சென்றதாக கூறினார், மேலும் சாட்சிக்கு அவரிடம் அன்றைய தேதியில் வேறொரு இடத்தில் தனது கடனட்டை மூலம் பொருள்கள் வாங்கிருந்ததற்கு ரசீதுகள் வைத்திருந்தார், மற்ற காவல் துறையினர் நம்பிக்கை இழந்திருந்தாலும் முக்கியமான ஒரு புலனாய்வுதுறை அதிகாரிக்கு வின்செண்டின் மேல் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது!,




கடனட்டை மூலம் அவர் பொருள் வாங்கியிருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு கேமராக்கள் எதாவது இருக்கிறதா என ஆராய்ந்தார், அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு இடத்தில் இருந்தது, அதை சோதித்ததில் பொருள் வாங்கியது வின்செண்ட் அல்ல, அவரது தம்பி என தெரிந்தது, மீண்டும் அவரது தம்பியை விசாரித்ததில் மற்றவர் கடனட்டையை அனுமதியில்லாமல் உபயோகித்ததால் அதை மறைத்ததாக கூறினார், ஆயினும் வின்செண்ட் சொன்னது பொய்யென்று ஆனதால் அவர்களது விசாரணை மேலும் இறுகியது, தன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறினார் என்பதால் அங்கேயும் சென்று விசாரித்தனர், வின்செண்ட் அவரது தாய் வீட்டிற்கு ஞாயிறு நள்ளிரவு தான் சென்றிருக்கிறார்!

வின்செண்ட் அப்போதும் தான் வாடகை காரில் ஊர் சுற்றி கொண்டிருந்ததாகவே கூறினார்! மேலை நாடுகளை பொறுத்தவரை வெறும் யூகத்தின் பேரில் ஒருவருக்கு தண்டனை அளிக்கமுடியாது! இந்தியாவில் இருப்பது போன்றே ”ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பது உலகளாவிய சட்டமாகவே இருக்கிறது!, புலனாய்வு அதிகாரி, வின்செண்ட் வாடகைக்கு கார் எடுத்த இடத்திற்கு சென்று விசாரித்தார், அது புது வகையான,விலையுயர்ந்த கார் என்பதால் மிகக்குறைவாகவே வாடகைக்கு செல்லும் எனும் விசயம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது, அந்த காரில் எதாவது தடயம் கிடைக்குமா என ஆராய, அந்த காரை காவல்துறை தனது பொறுப்பில் எடுத்தது!

சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியதால் காரில் இருந்து பெரிதாக எந்த தடயமும் கிடைக்க வாய்ப்பில்லை!, ஆனாலும் ஒரு தடவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காரில் இருந்த ரேடியேட்டரும், ஏர்பில்டரும் சோதனைக்கு உட்படுத்தபட்டது, பூச்சிகள் ஆராய்ச்சி செய்யும் குழுவிடம் ஒப்படைத்து ரேடியேட்டரில் மாட்டி செத்து கிடக்கும் துண்டு, துண்டு பூச்சிகளின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன! முழு பூச்சிகளை மட்டுமே வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகுழுவிற்கு அது பெரும் சவாலாக இருந்தது, ஆராய்ச்சியின் முடிவில் அந்த கார் கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் பயணம் செய்தது நிறுபணமானது, ”ரெட் போர்ன்” எனும் பெயருடய சிகப்பு கால்களையுடய வெட்டுகிளிகள் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படும் பூச்சியினம், அதே போன்று மொத்தம் மூன்று பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!

அந்த ஆதாரத்துடன் வின்செண்ட் கோர்டில் ஒப்படைக்கப்பட்டான், வின்செண்ட் சொல்வது அனைத்தும் பொய் என நிறுபிக்கப்பட்டாலும், நீதிபதிகள் வின்செண்ட் கொலைசெய்ய வலுவான காரணம் என்ன என கேட்டனர்!, விவாகரத்தான வின்செண்ட் தனது முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக பெரும்தொகை கொடுக்க வேண்டியிருக்கும் என பயந்தான், அந்த பயமே அவனை கொலை செய்ய தூண்யிருக்கும் என ஒரு உளவியல் நிபுணர் விளக்கினார், ஆனாலும் கடைசி அஸ்திரமாக விஞ்செண்ட் ஒரு குண்டை தூக்கி போட்டான், கொலை நடந்த அன்று தான் ஒரு விபத்தில் சிக்கி தான் ஒரு போலிஸ் நிலையத்தில் ஆஜரானதாக கூறியது உண்மையிலேயே அனைவரையும் குழப்பியது.

ஆனாலும் புலனாய்வு அதிகாரி மீண்டும் ஒஹோயோ மாகானம் சென்று காவல் நிலையத்தில் வின்செண்ட் பதிவு செய்த கைரேகையை சோதித்தார், அது ஒரு பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்திருந்தது, வின்செண்டின் தண்டனையை உறுதி செய்தது! ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக வின்செண்டிற்கு நீதுமன்றம் மரணதண்டனை விதித்தது, குற்றம் வாசிக்கப்படும் போது வின்செண்ட் கதறி கண்ணீர் விட்டு அழுதான்!

**

டிஸ்கி:இந்த வழக்கை பொறுத்தவரை வின்செண்ட் வடக்கு மாகானம் சென்றதற்கு ஒரே சாட்சி,வண்டியில் மாட்டி செத்த போன பூச்சியினங்கள் தான்!, ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!

கருத்துரையிடுக