Save / Save As வேறுபாடு

பல பயன்பாட்டு மென்பொருள்களில் ஒரு பைலை சேமிக்க வென சேவ் (Save) , சேவ் ஏஸ் (Save As) என இரு கட்டளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இரண்டு கட்டளைகளும் செய்வது ஒரே வேலைதான் எனினும் இரண்டுக்குமிடையில் சிறிய வேறு பாடும் இருக்கத் தான் செய்கிறது.

முதன் முதலாக ஒரு பைலை சேமிக்கும் போது சேவ் அல்லது சேவ் ஏஸ் எனும் இரண்டு கட்டளைகளில் எதனைத் தெரிவு செய்தாலும் ஒரே மாதிரியான (Save As Dialog Box) டயலொக் பொக்ஸே தோன்றும்.

அப்போது உங்கள் பைலுக்கு பொருத்தமான் ஒரு பெயரை வழங்கி நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்ட அந்த பைலில் மாற்றங்கள் செய்து மறுபடி அதே பெயரில் அதே இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் க்ளிக் செய்யுங்கள்.

எனினும் இப்போது டயலொக் பொக்ஸ் எதுவும் தோன்றாது. அதேபோல் ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு பைலை வேறு பெயரில் அல்லது வேறொரு இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் ஏஸ் தெரிவுசெய்யுங்கள்

கருத்துரையிடுக