1. சுதந்திர மென்பொருள் ஓபன் ஆபீஸ் 3.0 டவுன்லோடு லிங்க் இது வரை 5 கோடி முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது.
2. கூகிள் மேப்ஸ் போன்றே, மைக்ரோசாஃப்ட், தான் வழங்கும் Live Mapsசர்வீசுக்காக விமானத்தில் இருந்து பூமியை படம் பிடிக்க வசதியாக, 196 Mega Pixel திறனுள்ள ஒரு கேமராவை உருவாக்கியுள்ளது.
3. சுமார் 200 மில்லியன் (20 கோடி) பேர், சோஷியல் நெட்வொர்கிங் வலைதளமான “Facebook.com"-ஐ
பயன்படுத்துவதாக அந்த கம்பெனி அறிவித்துள்ளது. FaceBook வார்த்தையில் 8 எழுத்துக்கள் இருப்பதால் அதை ’F8’ என்றுகூட அழைக்கிறார்கள்.
4. Recession-ல் அடி வாங்கிய கம்பெனிகள், செலவைக் குறைக்க சுதந்திர மென்பொருட்களை (Free and Open Source Software)
பயன்படுத்தலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். Recession வந்ததிலிருந்து ஓபன் ஆபீஸ் டவுன்லோடு எண்ணிக்கை எகிறிக் கொண்டு இருக்கிறது. இப்ப புரியுதா?
5. United States of America-வில் மட்டும் சுமார் 1 கோடி பேர், ஓபன் ஆபீஸை பயன்படுத்துவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.
6. ஃப்ரான்ஸ் நாட்டு போலீஸ் டிபார்ட்மெண்ட், சுமார் 1 லட்சம் கணினிகளில் சுதந்திர இலவச மென்பொருளை பயன்படுத்துகிறது.ஓபன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ் ருசி கண்ட இவர்கள் போட்ட புது உத்தரவு - “புது கணினி வேணுமா, உபுண்டு லினக்ஸோடுதான் வரும். சரியா?”
7. மலேசிய அரசு சுமார் 10,000 கணினிகளில் ஓபன் ஆபீஸ் பயன்படுத்தி US $ 12 மில்லியனை சேமித்துள்ளது.
8. வியட்நாம் அரசு தன் அரசு அலுவகங்களில், 2009 வருட முடிவுக்குள் சுதந்திர மென்பொருட்களை அதிகமாக பயன்படுத்த முடிவு எடுத்து உள்ளது.
9. அமெரிக்க அரசுக்கு ஐடியா கொடுக்கும் ஒரு வலைத்தளத்தில், சாஃப்ட்வேருக்கு பேடண்ட் கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு source code-ஐ பொதுச் சொத்துஆக்கி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
10. ஓபன் ஆபீஸை அடிப்படையாகக் கொண்டு Lotus Symphony, Oxygen Office, Neo Office, Go-oo, Red Office, Euro Office போன்ற office suites வருகின்றன.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக