24 டிச., 2009
விண்டோஸ் விஸ்டாவில் UAC (User Account Control) ஐ நமது வசதிக்கேற்ப மாற்றியமைக்க
நமது கணினியில் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது கான்பிகரேஷன் ஐ மாற்றியமைக்க முற்படும் பொழுதோ அல்லது புதிய மென்பொருளை நிறுவும் பொழுதோ, UAC என்கிற User Account Control எச்சரிக்கை திரை தோன்றி எரிச்சலூட்டும்.
இது நமது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருந்தாலும், சிலருக்கு இது தொல்லை தருவதாக இருப்பதால் இதை நமது வசதிக்கு ஏற்ப எப்படி மாற்றியமைப்பது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் விஸ்டாவில் UAC ஐ கணினியிலிருந்து முடமாக்க
முதலில் Control Panel சென்று சர்ச் பாக்ஸில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இப்பொழுது வலது புற பேனில் User Accounts என்பதற்கு கீழாக “Turn User Account Control (UAC) on or off” என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் திரையில் “Use User Account Control (UAC)” என்ற Check Box ஐ Uncheck செய்து பின் OK கொடுங்கள். பிறகு உங்கள் கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் உங்கள் கணினியில் இனி UAC திரை வராது.
விண்டோஸ் ஏழில் UAC வசதியை மாற்றியமைக்க
Control Panel லில் உள்ள சர்ச் பாரில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இனி வரும் Change User Account Control Settings லிங்கில் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் திரையில் ஸ்லைடரை மேலும் கீழுமாக மாற்றியமைப்பதன் மூலமாக இந்த UAC வசதியை நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.
முற்றிலுமாக ஸ்லைடரை கீழிறக்கி விட்டால் UAC முற்றிலுமாக disable ஆகிவிடும்.
கடந்த மார்ச் 2008 இல் துவங்கிய எனது இந்த ப்ளாக் இப்பொழுது ஒரு லட்சம் ஹிட்ஸ்களை தொடவிருக்கிறது. எனது பதிவுகளுக்கு ஆதரவளித்த தமிலிஷ், யூத்ஃபுல் விகடன், தமிழ்10 , திரட்டி, தட்ஸ்தமிழ், தமிழ் வெளி, Tamilars, உலவு, நியூஸ் பானை ஆகிய தளங்களுக்கும், பதிவுலகில் நானும் ஒரு பதிவர்தான் என சொல்லும் அளவுக்கு எனக்கு ஆதரவளித்து, ஊக்குவித்த சக பதிவுலக தோழர்களுக்கும், இனிய வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Recommended Articles
- Operating System
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ நான் கூறும் வழி!Aug 18, 2010
எங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை...
- Window
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா?Jul 06, 2010
பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நே...
- Window
விண்டோஸ் 7 - சில வசதிகள்Jan 28, 2010
விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற...
- Window
வின்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்Jan 10, 2010
விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி தான் இந்த பதிவு. சிறப்பு அம்சம்: *...
Newer Article
My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்க
Older Article
மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய
Tagged In:
Window
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக