ஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர...


நாம்  அடிக்கடி உபயோகிக்கும் ப்ரோகிராம்களை   ஸ்டார்ட் மெனுவில் கொண்டு வர Pin to Start Menu என்ற வசதி வலது கிளிக் Context menu வில் உள்ளது. ஆனால்  நாம் அடிக்கடி உபயோகிக்கும்  ஃபோல்டர்களை விண்டோஸ் XP  மற்றும் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர   என்ன செய்யலாம்.

Search Box இல் Regedit என டைப் செய்து ரிஜிஸ்டரி எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். அதில் இடது புற பேனில்

HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\
என்ற பகுதிக்குச் சென்று {a2a9545d-a0c2-42b4-9708-a0b2badd77c8} என்ற கீயை உருவாக்குங்கள், அதற்கு வேல்யு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்களுக்கு தேவைப்படும் ஃபோல்டரை Shift Key ஐ அழுத்தியபடி, வலது கிளிக் செய்து Pin to Start Menu என்பதை கிளிக் செய்தால், அது உங்கள் ஸ்டார்ட் மெனுவில் வந்து விடும்.


இந்த வசதி தேவியில்லை எனில், அந்த கீயை டெலிட் செய்தால் போதுமானது.

ரிஜிஸ்டரி எடிட்டரில் மாற்றம் செய்ய தயக்கமாக இருந்தால், கீழே உள்ள சுட்டிகளிலிருந்து, ரிஜிஸ்டரி கோப்புகளை தரவிறக்கி, தேவையானதை ரன் செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக