மொபைல் சிஸ்டத்தில் தடுமாறும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தனிக்காட்டு ராஜாவாக பெர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் இருந்தாலும், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதல் இடத்தைப் பெற முடியாமல் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகிறது. இந்த சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பலமான போட்டியாளர்கள் உருவாகி வருகின்றனர்.

இதன் தொழில் நுட்பத்திற்குப் போட்டி யாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-–போன் மற்றும் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக் பெரி முதலில் இடம் பிடித்தன. அவற்றின் எளிமையை இன்னும் மைக்ரோசாப்ட் தகர்க்க முடியவில்லை.
இந்நிலையில், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர் ஆதரவாளர்-களாக அதன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வந்த மோட்டாரோலா மற்றும் பாம் தற்போது வேறு தொழில் நுட்பத்தினை- தங்கள் போன்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.


மொபைல் போன்களுக்கான ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களை ஆய்வு செய்கையில் மற்ற நிறுவனங்களின் தொழில் நுட்பம் கூடுதலான வசதிகளைத் தருவது தெரிய வரும். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சிஸ்டத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக விண்டோஸ் மொபைல் பதிப்பு 7 இதனை நிறைவேற்றும் எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால் இது கிடைக்கும் நாள் தான் இன்னும் தெரிய வில்லை. அமெரிக்காவில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 48 சதவிகிதத்திற்கும் மேலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இவ்வகையில் 19% இடத்தைப் பிடித்துள்ளது.விண்டோஸ் மொபைல் 15% மட்டுமே கொண்டுள்ளது.

இவை மட்டுமின்றி புதிய இரு ஆப்பரேட் டிங் சிஸ்டங்கள் வந்து விண்டோஸ் மொபைல் சிஸ்டத்தினை விரட்ட இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இவ்வகையில் முதலில் உள்ளது.

தற்போது 7.5% இடத்தைப் பிடித்திருக்கும் இந்த சிஸ்டம் விரைவில் இதனை 15% ஆக உயர்த்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பாம் நிறுவனத்தின் பிரீ போன் சிஸ்டம் விரைவில் 8% இடத்தைப் பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டம் மார்க்கட்டைப் பாதிக்குமா? என்ற கேள்விக்கு, எதிர்பாராத வகையில் விடை ஆம் என்றே கிடைக்கிறது. ஏனென்றால் பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை இனி மொபைல் போன்கள் பிடித்துக் கொள்ளும்.
மொபைல் போன்களின் திறன் தொடர்ந்து அனைத்து வகையிலும் உயர்ந்து வருவதால் இவை பெர்சனல் கம்ப்யூட்டர் நமக்குக் கொடுக்கும் அனைத்து வசதிகளையும் தரத் தொடங்கிவிடும்.
அப்படியானால் காலப் போக்கில் விண்டோஸ் நல்ல ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கையும் நபர்களும் குறைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது.
இதனை உணர்ந்தே மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மொபைல் திட்டத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் கூடுதலாக முதலீடு செய்து வருகிறது

கருத்துரையிடுக