Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

13 டிச., 2025

சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்

சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்




01. கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் சிறிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதற்காகவும் எனது மனதில் தோன்றிய ஆர்வம் எனது வீட்டிலுள்ள அனைவரது மனங்களிலும் தோன்றட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எது?

  • (1) மனவுறுதி
  • (2) மலர்வு
  • (3) பிரார்த்தனை
விடையைக் காண்க

சரியான விடை: (3) பிரார்த்தனை

02. ஒரு குழுவாகச் செயற்படும் போது மிகவும் பொருத்தமானது எது?

  • (1) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுத்து எப்போதும் அதனுடன் ஒத்துப்போதல்
  • (2) ஒருவர் எப்போதும் தனது கருத்துக்களை முதன்மைப்படுத்த எத்தனித்தல்
  • (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்
விடையைக் காண்க

சரியான விடை: (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்

03. தினமும் போதியளவு நீர் அருந்தாத ஒருவருக்கு ஏற்படக்கூடிய விளைவாக அமைவது எது?

  • (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்
  • (2) சௌகரியமாகச் சிறுநீர் கழிக்கமுடிதல்
  • (3) உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுதல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்

04. இலங்கையில் பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களை ஆண்கள், பெண்கள் என வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தமுறை மிகப் பொருத்தமானது?

  • (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்
  • (2) சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
  • (3) சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்

05. குழுவாக வேலைகளில் ஈடுபடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது எது?

  • (1) சுயமாக வேலைகளில் ஈடுபடல்
  • (2) கூட்டுணர்வுடன் செயற்படல்
  • (3) தனியாக வேலைகளைச் செய்தல்
விடையைக் காண்க

சரியான விடை: (2) கூட்டுணர்வுடன் செயற்படல்

06. மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாடுகளில் மூன்றாவது அமைவது எது?

  • (1) திடசித்தம்
  • (2) உதிப்பு
  • (3) உடலைத் தளர்த்தல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) திடசித்தம்

07. உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுவதற்கு பிரதான காரணமானது எது?

  • (1) தினமும் உடற்பயிற்சி செய்தல்
  • (2) தினமும் உடன் உணவுகளை உண்ணுதல்
  • (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்
விடையைக் காண்க

சரியான விடை: (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்

08. சூரிய நமஸ்காரச் சந்தர்ப்பங்கள் பன்னிரண்டிலும் ஒரே வகையான மெய்நிலைகளைக் கொண்ட சந்தர்ப்பங்கள் இரண்டு எவை?



  • (1) 4 உம் 8 உம்
  • (2) 3 உம் 10 உம்
  • (3) 6 உம் 9 உம்
விடையைக் காண்க

சரியான விடை: (2) 3 உம் 10 உம்

10. ஒரு நல்ல பிள்ளையாக இருக்க என்னால் முடியும், எல்லாவற்றிலும் என்னால் வெற்றி பெற முடியும், முழு உலகையும் என்னால் வெற்றி கொள்ள முடியும், எனது உள அமைதியை எனது வீட்டாருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?




11. எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களும் எனது வீட்டாரும் உணரட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந் படிமுறைக்குரியதாகும்?




12. நான் பெற்ற உள அமைதி எனது நண்பர்களுக்கும் உனது குடும்பத்திற்கும். எனது பாடசாலையில் உள்ளோருக்கும், முழு நாட்டிற்கும் பகிர்கின்றேன். நான் வீட்டிற்கும் பாடசாலைக்கும் முழு நாட்டிற்கும் என எந்த தியான செயற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,




13. எனது தலை தளர்ந்து விட்டது எனது முழு உடலும் தளர்ந்து விட்டது என்ற செயற்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தும் படிமுறைகளில் எத்தனையாவது?




14. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டின் சரியான படிநிலை?




15. உடல், உள சுகத்திற்கான செயற்பாடுகளின் மூன்றாம், நான்காம் படிமுறைகள் யாவை?




16. குறைவாக நீர் அருந்தும் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று




17. வெள்ளைப் பிரம்புடன் ஒருவரை வீதியில் கண்டவுடன் நீர் செய்ய வேண்டியது?




18. சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட மிகவும் பொருத்தமான நேரம்




19. நான் சுற்றுப்புற ஒலிகளை செவிமடுக்கின்றேன். எனது வகுப்பைச் சூழவுள்ள ஒலிகளை நன்கு செவிமடுக்கின்றேன். அடுத்துள்ள வகுப்புக்களில் ஒலியையும் நன்றாக செவிமடுக்கின்றேன் என்ற செயற்பாடுகள் தியான செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?




20. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக